மொட்டை மாடி பேய் | பேய் கதைகள் | Tamil ghost story

கணவன் இரண்டு மகள்கள் இதுதான் பத்திரகாளியின் குடும்பம்.பத்திரகாளியின் மூத்த மகள் பெயர் வள்ளி, இளைய மகள் பெயர் சுக்கி.

ஒரு நாள் அனைவரும் இரவு உணவு உண்டு தூங்கச் சென்றனர்.

அனைவரும் களைப்பில் தூங்கிக் கொண்டிருக்க,சுக்கிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. அங்கும் இங்கும் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். அப்போது எட்டிப்பார்த்தாள் தன் அக்கா வள்ளி களைப்பில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.

நேரம் ஆகவே சுக்கிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது.சரி போய் தண்ணீர் குடித்து வருவோம் என்று கட்டிலிலிருந்து எழும்பி கிச்சனை நோக்கி புறப்பட்டாள்.

குளிர்ந்த நீரை பருகுவதற்காக பிரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலில் இருந்த குளிர்ந்த நீரை பருகினாள்.

அப்போது…

சலக் சலக் சலக் ஸலக் என மொட்டைமாடியில் யாரோ நடக்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் சலங்கை ஓசை போல் கேட்டது.

கிச்சனில் உள்ள ஜன்னல் அருகே சென்றாள். அந்த சலங்கை ஓசை பலமாக கேட்டது. என்ன இது இந்நேரத்தில் மொட்டைமாடியில் சத்தம் கேட்குது.அதுவும் கொலுசு சத்தம் கேட்குது.என்னவாயிருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கும் போது பின்னால் இருந்த கை அவள் தோளில் பட்டது.

உடனே பயந்து திரும்பி பார்க்க,அங்கு அவள் அம்மா பத்திரகாளி இருந்தாள். யம்மா ஒரு நிமிஷத்துல என்ன பயமுறுத்திடீங்க போங்க. எதுக்கு பின்னாடி வந்தீங்க என வினவினாள்.

நீ இந்நேரத்தில் தூங்காம இங்க என்னடி செஞ்சிட்டிருக்கா??? என பத்திரகாளி திரும்ப கேட்டாள். அதுவா….. அது தண்ணீர் குடிக்க வந்தேன் என மௌனத்தோடு பதிலளித்தாள் சுக்கி. சரி குடிச்சிட்டு நேரமா போய் தூங்கு நாளைக்கு பள்ளிக்கூடத்துக்கு போகனும் என அதட்டிக் கொண்டே சென்றாள் பத்திரகாளி.

பின்பு சுக்கியும் அவள் கட்டிலிற்கு உறங்கச் சென்றாள்.

நேரம் கழிந்தது……

ஆனால் இன்னும் தூக்கம் வரவில்லை.அப்போது கிட்சனில் கேட்ட அந்த கொலுசு சத்தம் மீண்டும் கேட்டது. என்ன இது மொட்டைமாடியில் யாரோ நடக்கும் சத்தம் கேட்கிறது.அதுவும் சலங்கை சத்தம், யாராயிருக்கும் என்று மறுபடியும் யோசித்தாள்.

அப்போது வள்ளியிடம் இருந்து அசைவு தெரிய, வள்ளி தூக்கத்தில் ஏதோ உளறிக் கொண்டிருந்தாள். எட்டி வள்ளி நீ இன்னும் தூங்காமய இருக்க ??என கேட்டாள் சுக்கி. நீ என்னடி பண்ற தூங்காம என தூக்க கலக்கத்தில் பதிலளித்தாள் வள்ளி. எட்டி வள்ளி மொட்டை மாடியில் யாரோ சலங்கை மாட்டிட்டு நடக்கிற சத்தம் கேட்குது.இந்த நேரத்தில் யாருடி நம்ம வீட்டு மொட்டை மாடியில அதுவும் சலங்கை கட்டிட்டு நடப்பா ???. பேசாம தூங்கு என வள்ளி அறிவுரை கூறினாள்.

எனக்கு ரொம்ப பயமா இருக்குடி வள்ளி என பதறினாள் சுக்கி.

ஏய் ஏதோ பூச்சி சத்தமா இருக்கும்.மழை பெஞ்சுதுல அதான் ஏதோ பூச்சி கத்திகிட்டு இருக்கும்.நீ படுத்து தூங்கு என கோபப்பட்டாள் வள்ளி.

ஆமா ஆமா ஏதோ பூச்சி சத்தமாதான் இருக்கும். மழை வேற பெஞ்சதுல என சமாதானமாகி சுக்கி தூங்கினாள்.

விடியற்காலை…..,

பத்திரகாளி சுக்கியை எழுப்பிக் கொண்டிருந்தாள். என்ன தூங்கிட்டிருக்கா பள்ளிக்கூடத்துக்கு லேட் ஆகிட்டு பாரு என கோபித்துக் கொண்டிருந்தாள். இதோ வர்றேன் என அவசர அவசரமாக தன் பள்ளி சீருடையில் சுக்கி கிளம்பிக் கொண்டிருந்தாள்.

சுக்கி கண்ணு மொட்டை மாடியில தூக்கு வாலி இருக்கும் அதை எடுத்துட்டு வாம்மா வாசல் தொளிக்கணும், நேத்து துணிய துவச்சிட்டு அங்கேயே வச்சிட்டேன்,என சுக்கியிடம் தூக்கு வாலியை கொண்டு வர சொன்னாள் பத்திரகாளி.

சரி இதோ எடுத்துட்டு வரேன் என வேகவேகமாக படியேறி மொட்டை மாடிக்குச் சென்றாள் சுக்கி.

அங்கே…

மல்லிகைப்பூ இருந்தது.அதுவும் வாடிய நிலையில் இருந்தது. மல்லிகைப்பூ எப்படி இங்க வந்துச்சு. அது இல்லாம நம்ம வீட்டுல யாரும் மல்லிகை பூ வாங்கலையே பிறகு இது எப்படி இங்க வந்துச்சு என யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது நேத்து ராத்திரி கேட்ட சலங்கை சத்தம் அவள் ஞாபகத்திற்கு வர அச்சச்சோ என்னவாயிருக்கும் என்று பயம் அவளுள் தொற்றிக்கொண்டது.

ஏய் இன்னும் அங்க என்னடி செஞ்சுட்டு இருக்கா என்ன பத்திரகாளி கோபித்துக் கேள்வி கேட்க இதோ வந்துட்டேன் என தூக்குவாலியை கையில் எடுத்துக்கொண்டு கீழே சென்றாள். அம்மா நம்ம மொட்டை மாடியில் யாரோ பயன்படுத்திய மல்லிகைபூ இருந்துச்சும்மா என தன் அம்மாவிடம் நடந்ததை கூறினாள்.

ஏய் அது ஏதோ காக்கா தூக்கி போட்டு போயிருக்கும்.அதையே நெனச்சுகிட்டு இருக்காம போய் சீக்கிரம் பள்ளிக்கூடத்துக்கு ரெடியாகு போ என சுக்கியை திட்டினாள் பத்திரகாளி.

சரி காக்கா தூக்கிப்போட்டு போயிருக்கும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டே சுக்கி பள்ளிக்கூடத்திற்கு சென்றாள்.

மறு நாள்…..

இரவு மீண்டும் அனைவரும் சாப்பிட்டு முடித்து தூங்கச் சென்றார்கள். சுக்கியும் தூங்கினாள்.

சுக்கி பள்ளிக்கு சென்ற களைப்பில் தூங்கி விட்டாள்.

நேரம் பன்னிரண்டு மணி ஆனது. பத்திரகாளி வீடு சுற்றி கொலுசு சத்தம் மறுபடியும் கேட்டது.

அந்தச் சலங்கை சத்தத்தைக் கேட்டு சுக்கி விழித்துக் கொண்டாள். என்ன இது மறுபடியும் சலங்கை சத்தம் கேட்குது.நேத்து தான மழை பெய்தது இன்னைக்குமா பூச்சிகள் சத்தம் போடுது.சரி மேல போய் பார்ப்போம் என கட்டிலில் இருந்து எழுந்து முன் வாசல் கதவை திறந்தாள்.

பின்னர் வெளியில் இருக்கும் படிக்கட்டின் மூலம் மொட்டை மாடிக்கு சென்றாள்.

அவள் படிகள் ஏற ஏற மல்லிகைப்பூ வாசம் அதிகமானது. உடனே சுக்கி படி ஏறுவதை நிறுத்தினாள். என்ன இது மல்லிகைப்பூ வாசம் இப்படி கும்முனு அடிக்குது, நம்ம ஊரில் யாரு வீட்டிலையும் மல்லிகை பூச்செடி இல்லையே பிறகு எப்படி இவ்வளவு பலமா மல்லிகைப்பூ வாசம் அடிக்குது என பயந்தாள்.

மெல்ல படிகளில் ஏறி….

மொட்டை மாடி கோட்டைச்சுவர் பின் ஒட்டி தன் தலையை மேலே தூக்கி ஒளிந்திருந்து எட்டிப் பார்த்தாள்.

அங்கே…..

ஒரு வெள்ளை நிற உருவம் தலையில் மல்லிகை பூவுடன் காலில் சலங்கையுடன் மொட்டை மாடியில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது.

அந்த வெள்ளை நிற உருவத்தை பார்த்த சுக்கியின் இதயம் படபடத்தது.

யாரது யாராயிருக்கும் நம்ம வீட்டு மொட்டை மாடியில் இவங்க என்ன பண்றாங்க என பயந்துகொண்டே பார்த்தாள். அந்த உருவம் அங்குமிங்கும் அந்தச் சலங்கயை மாட்டிக்கொண்டு நடந்துகொண்டிருந்தது.அந்த மொட்டைமாடி முழுவதுமே சலங்கை ஓசையும் மல்லிகைப்பூ வாசமும் மட்டும்தான் இருந்தது.

இதனால் சுக்கி மிகவும் பயந்து கொண்டிருந்தாள்.அப்போது காலருகே எதோ ஒடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு கீழே பார்த்தாள். அங்கே ஒரு பெருச்சாலி அவள் காலருகே ஓடியது. பெருச்சாலியை பார்த்து பயந்து சுக்கி ஆ என சத்தமாக கத்தினாள்.

பிறகு சுய நினைவு வந்தவளாய்,அச்சச்சோ கத்திடோமே பயந்துகொண்டே மொட்டைமாடி கோட்டைச் சுவரின் மேலே தலையை உயர்த்தி ஒளிஞ்சிருந்து பார்த்தால். அங்கே நடந்துகொண்டிருந்த அந்த வெள்ளை உருவம் சுக்கி அலறிய சத்தம் கேட்டு அங்கேயே எங்கும் நடக்காமல் ஒரே இடத்தில் நின்றது.

அதை பார்த்து சுக்கி திடுக்கிட்டாள். பிறகு அந்த உருவம் மெல்ல சலங்கை ஓசையோடு சுக்கியை நோக்கி ஒவ்வொரு அடியாக அடி வைத்து நடந்து வந்தது. அந்த உருவம் அடிவைக்க அடி வைக்க சுக்கி இதயத்தில் பயம் தொற்றிக்கொண்டது.

பயத்தில் அவள் உடல் படபடத்தது.

அச்சச்சோ என சுக்கி பதறினாள். அப்போது மெல்ல நடந்து வந்த அந்த உருவம் திடீரென்று வேகமாக சுக்கியை நோக்கி ஓடிச் சென்றது.வெள்ளை உருவம் தன்னை நோக்கி வேகமாக வருவதை பார்த்த சிக்கி இரண்டு இரண்டு படிகட்டுகளாக தாவிக் கீழே குதித்து அம்மா என அலறிக்கொண்டே ஓடினாள். அப்போது அந்த உருவம் சுக்கியை வேகமாக துரத்திச் சென்றது. வேகமாக ஓடி முன் வாசல் கதவை திறந்து மூடினாள்.

உடனே குடுகுடுவென்று ஒடீச் சென்று வள்ளியின் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். சற்று நேரம் ஆக ஆக சலங்கை சத்தமும் கேட்கவில்லை மல்லிகை பூ வாசமும் அடிக்கவில்லை.

கண்ணை இறுக்க மூடிக்கொண்டு தூங்க தயாரானாள்.ஆனாலும் தான் கண்டதை நினைத்து அவளுக்கு தூக்கம் வரவில்லை. சற்று நேரம் கழித்து முன் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

சத்தம் கேட்டு பயந்த சுக்கி அக்கா வள்ளியை பார்த்தாள்.அவள் களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தாள். பின்னர் கதவு தட்டும் சத்தம் வேகமாக கேட்டது. சுக்கி பயந்து கொண்டு கண்ணை இன்னும் இருக்கமாக மூடிக்கொண்டு காதையும் மூடிக் கொண்டாள்.பின்னர் நேரம் ஆக ஆக கதவு தட்டும் சத்தம் மெல்ல நின்றது. சுக்கியும் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் காலையில் தன் அம்மாவிடம் நேற்று இரவு நடந்த அனைத்து விஷயத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள்.அதைக் கேட்ட பத்திரகாளி சிரித்தாள். சலங்கை சத்தம் மல்லிகை பூ வாசம் அடிச்சுதா என்ன கனவு கண்டியா??? என சிரித்தாள் பத்திரகாளி. அம்மா நிஜமா தான் சொல்றேன் நேத்து ராத்திரி நான் பேயைப் பார்த்தேன். தயவு செஞ்சு மொட்டை மாடியில ஏதாச்சும் பண்ணுங்க .

நம்ம வீட்டு மொட்டை மாடியில் கண்டிப்பா பேய் இருக்குதும்மா. நீங்க வேணா இன்னைக்கு ராத்திரி மொட்டை மாடியில் போய் பாருங்க.

ஏய் சும்மா இந்த வயசுல படிக்கிற வேலைய மட்டும் பாரு. சும்மா பேய் கதைகளை படிச்சுக்கிட்டு கண்ட பேய் படத்தையும் பார்த்துகிட்டு இருக்காத. அதனால தான் உனக்கு இப்படி பேய் கனவுகள் வருது. அதனால ஒழுங்கா பேய் கதையை படிக்கிறது நிப்பாட்டிட்டு ஒழுங்கா புத்தகத்தை எடுத்து நாலு வார்த்தை படிக்கிற வேலையைப் பாரு என அதட்டினாள் பத்திரகாளி.

மறுநாள்…

இரவு மீண்டும் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க சுக்கி மட்டும் அந்த சலங்கைச் சத்தம் வருமா இல்லையா என யோசித்துக்கொண்டே முழித்துக் கொண்டிருந்தாள்.

மணி 12 மணி ஆக மெல்ல மல்லிகை பூ வாசம் அடிக்க பேய் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். பின்னர் சற்று நேரம் கழித்து மொட்டைமாடியில் சலங்கை ஓசையோடு நடக்கும் சத்தமும் கேட்டது. இந்த வாட்டி கண்டிப்பா பேய் இருக்கிறத நாம போட்டோ எடுத்து அம்மாகிட்ட காமிக்கணும். அப்ப தான் அம்மா பேய் இருக்கிறதை நம்புவாங்க என தன் மேஜையில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு முன் கதவைத் திறந்து மெல்ல மாடிக்கு சென்றாள்.

நேற்று இரவு போல பொறுமையாக சத்தம் இல்லாமல் மாடிப்படியில் ஏறினாள். நேற்றை போல மொட்டை மாடியில் கோட்டைச் சுவரின் மேலே எட்டிப் பார்த்தாள். அங்கே யாரும் இல்லை.

என்ன இது நேற்று இரவு தான் பேயை பார்த்தோம். இன்னிக்கி காணோம்.

அப்ப எப்படி கொலுசு சத்தம் கேட்டுச்சு என யோசித்துக் கொண்டிருக்கும் போது மல்லிகைப்பூ வாசம் திடீரென்று அதிகமாக அடித்தது. என்ன இது மல்லிகைப்பூ வாசம் பயங்கரமா அடிக்குது என தலையை திருப்பினாள்.

திரும்பிப் பார்த்தாள்….

அந்த உருவம் அவள் கண்முன் நின்றது. ஆ….. என அலறிக்கொண்டு ஓடினாள். படிக்கட்டில் தடுக்கிக் கீழே விழுந்தாள். அப்போது அந்த உருவம் படிக்கட்டின் மேல் நின்று கொண்டு சுக்கியை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தது. கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சுக்கி எழும்பி நடக்க முடியாமல் திணறினாள். அப்போது அந்த உருவம் வேகமாக வந்து பளார் என்று சுக்கி கன்னத்தில் அறைந்தது.

கன்னத்தில் அரை வாங்கிய சுக்கி மயக்கமடைந்தாள்.

பின்னர் கண்விழித்து பார்த்தபோது கட்டிலில் படுத்துக் கொண்டே இருந்தாள்.மெல்ல எழுந்தாள் அப்போது பத்திரகாளி அருகில் வந்து அவள் நெற்றியில் திருநீறு பூசினாள்.என்ன ஆச்சுடி உனக்கு.ராத்திரி ஏன் மொட்டை மாடிக்கு போன??? இப்ப பாரு கீழே விழுந்து அடிபட்டு கிடக்க. அதுவும் இல்லாம உடம்பு வேற நெருப்பு மாதிரி கொதிக்குது.

அம்மா நேற்று அந்தப் பேய் என்ன அடிச்சிருச்சு மா.

ஏய் இங்க பாரு இது சக்தி வாய்ந்த அம்மன் கோவில் திருநீறு. இது உன் நெத்தியில பூசியிருக்கேன். இனிமேல் பேய் சத்தமும் கேட்காது ஒரு சத்தமும் கேட்காது.இனி பேய் படங்களை பார்க்காத என் தன் மகளுக்கு அறிவுரை கூறினாள் பத்திரகாளி.

அடுத்த நாள் இரவு தூங்கும்போது பத்திரகாளி அம்மன் கோவில் திருநீரை பூசினாள்.அப்படியே மெல்ல தட்டி தட்டி தூங்க வைத்தாள்.

பின்பு பத்திரகாளியும் அவளது அறைக்கு தூங்கச் சென்றாள்.

அப்போது மணி 12 ஆனது…….

ஆனால் சுத்தி மட்டும் தூங்காமல் இருந்தாள். இந்த முறை மல்லிகைப்பூ வாசம் அடிக்கிறதா என தன் மூக்கின் மூலமாக முகர்ந்து பார்த்தாள். ஆனால் மல்லிகைப்பூ வாசம் அடிக்கவில்லை.

அதேசமயம் சலங்கை சத்தமும் கேட்கவில்லை. இருப்பினும் மொட்டைமாடியில் யாரும் இருப்பார்களா என எண்ணி வழக்கம்போல் முன் கதவை திறந்து படிகளில் ஏறி மொட்டை மாடி கோட்டைச் சுவரின் மேல் மெல்ல எட்டிப் பார்த்தாள்.

அங்கே யாருமில்லை. அப்பாடா யாரும் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு மொட்டை மாடி படிக்கட்டு வழியாக கீழே இறங்கிச் சென்றாள். அங்கே பத்திரகாளி சுக்கியை முறைத்துக் கொண்டிருந்தாள்.

ஏய் நீ இந்த வேலை தான் தினமும் ராத்திரி பண்ணிட்டு இருக்கியா???.எதுக்குடி தூங்காம மொட்டை மாடிக்கு ஏறி போறா என பத்திரகாளி கோபத்தோடு கேட்டாள்.

ஒன்னும் இல்லம்மா ஒண்ணும் இல்லை என பத்திரகாளியை கொஞ்சிக்கொண்டே சுக்கி படுக்கச் சென்றாள். மொட்டைமாடி பேய்கள் இனி கிடையாது என மனதை ஆறுதல் படுத்திக் கொண்டு நிம்மதியாக உறங்கி போனாள்.

நீங்கள் யாரேனும் மொட்டைமாடியில் பேயை பார்த்தீர்கள் என்றால் கீழே உள்ள கமெண்டில் தெரிவிக்கவும்……

மேலும் பேய் கதைகள் படிக்கவும்.

சிரிக்கவும் சிந்திப்பதற்கும் தமிழ் மொக்கை ஜோக்ஸ் படிக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *