தமிழ் கார்டூன் ஸ்டூடியோ தளத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன். இங்கு பல விதமான கடி ஜோக்ஸ், மொக்க ஜோக்ஸ், விலங்குகள் ஜோக்ஸ், காய்கரிகள் ஜோக்ஸ், டாக்டர் ஜோக்ஸ் என பலவற்றை படித்து மகிழுங்கள்.
ஜோக்-1

வேலன் : ஏய் ஏன் இவ்வளவு அவசரம் அவசரமாக பெயிண்ட் அடிக்குற ?
பெயிண்டர் : பெயிண்ட் தீர்ந்துவிடக்கூடாதுல அதான் அவசரமாக அடிக்குறேன் .
ஜோக்-2
டாக்டர் : நீங்க உடனடியாக ஆடு கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் .
நோயாளி : அதுங்க சாப்பிடுவதை நான் எப்படி டாக்டர் நிறுத்த முடியும்.
ஜோக்-3
வருண் ; ஏன்டா உங்க அம்மாக்கு கடுதாசி மெதுவா எழுதுற ??
அருண் : எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க தெரியாதுடா அதான் மெதுவா எழுதுறேன்
ஜோக்-4
மாணவன் : ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஐயா
ஆசிரியர் : உனக்கெல்லாம் சந்தேகமா சரி கேளு
மாணவன் : சார் ,டீ மாஸ்டர் டீ போடுறாரு,பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுறாரு ஆனா ஹெட் மாஸ்டர் நீங்க மட்டும் ஏன் சார் மண்டைய போடா மாட்டேங்கறீங்க
ஜோக்-5
மாணவன் : செய்யாத தப்புக்கு அடிப்பீங்களா டீச்சர் ??
ஆசிரியர் : செஞ்ச தப்புக்குதான் அடிப்பேன் செய்யாத தப்புக்கு எப்படி அடிக்க முடியும் ?
மாணவன் : நான் HOME WORK செய்யல டீச்சர் அப்ப அடிக்க மாட்டிங்கள்ள
ஜோக்-6

ராமு : டேய் 2025 பொறந்துருச்சு டா
சோமு : அப்படியா எந்த ஹாஸ்பிடல்ல
ராமு ; ??????
ஜோக்-7
ஆசிரியர் : டேய் ராம் முட்டை போடாத பறவை சொல்லு பாப்போம்
ராம் : ஆண் பறவை டீச்சர் .
ஜோக்-8
பகலவன் : அன்னே உங்க சொந்த ஊரு எங்கண்ணே
தகலவன் : அவ்வளவு வசதிலாம் இல்லப்பா சொந்த வீடுதான் இருக்கு சொந்தமா ஊறலாம் இல்லை .
ஜோக்-9

கவி : ஏன் உன் பையன் கிணத்துக்குள்ள போய் படிக்கிறான் .
விமலா : ம்ம்ம் நான் தான் அவனை ஆழமா படிக்க சொன்னேன்
ஜோக்-10
சர்வர் : என்ன சார் பேப்பர் ரோஸ்ட உத்து பாக்குறீங்க
டீச்சர் : ம்ம் இந்த பேப்பர் ரோசஸ்ட தமிழ் பேப்பார இல்ல ஆங்கில பேப்பரானு பாக்குறேன்