Download our Tamil jokes app.
ஜோக்-01
ஒரு ஊரில் ஒரு வியாபாரி வெட்ட வெயிலில் காய்கறிகளை விற்று வந்தார்.அப்போது,திடீரென்று மழை பெய்தது.எல்லா காய்கறிகளும் மழையில் நனைந்து விட்டன.ஆனால் ஒரு காய்கறி மட்டும் நனையவில்லை.
ஏன் ???????
ஏன்னா அது குடைமிளகாய். அதனால் குடை பிடிச்சுட்டு இருந்துச்சாம்.
ஜோக்-02
ஒருத்தன் பெரிய பைக் ரேஸராம்.எல்லா ரூட்லயும் வளச்சு வளச்சு வண்டி ஓட்டுவானாம்.
ஆனால் ஒரு ரூட்டில் மட்டும் ஓட்ட முடியலையாம்.
ஏன்?????
ஏன்னா அது பீட்ரூட்.
ஜோக்-03
கூகுள் மேப்பில் எல்லா ரூட்டும் இருக்கும். ஆனால் ஒரு ரூட்டு மட்டும் இருக்காது
என்ன ??????
பீட்ரூட்.😂😂🤣🤣
ஜோக்-04
ஒருத்தன் காய்கறிகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டு வீட்டிற்கு சென்றானாம். வீட்டிற்கு சென்றதும் பேண்ட் பாக்கெட் கிழிஞ்சிருந்துச்சாம்.
ஏன் ?????
ஏன்னா பாக்கெட்டுக்குள் கத்திரிக்காய் இருந்துச்சாம் 😁😁😁.
ஜோக்-05
ஒருத்தன் ஒரு ஹோட்டல்ல இருக்க எல்லா ரூம்லயும் படுத்தானாம்.ஆனால் ஒரு ரூம்ல மட்டும் படுக்க முடியலையாம்.
ஏன் ?????
ஏன்னா அது மஸ்ரூம்😂😂.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.