அரசியல்வாதி ஜோக்குகள்

பணம் கொடுத்து தானே ஆட்களை கூட்டி வந்தீங்க ? அப்புறம் ஏன் நான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது அவங்க கைதட்டலை?

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கூட்டிக்கொண்டு வந்தது தப்பா ஆயிடுச்சு…. தலைவரே.

கட்சியில சினிமா நடிகரை சேர்த்து கேட்டது தப்பா போச்சா ஏன் தலைவரே??

தேர்தல் மீட்டிங்ல பேச டுபை அனுப்பிட்டாரு.

ஏங்க நீங்க இன்னிக்கு பேசப்போற தேர்தல் மீட்டிங்க்கு நானும் வரட்டுமா ??

வீட்டிலேயே என் பேச்சை கேக்க மாட்டியே மீட்டிங்குக்கு வந்தால் கேட்க போறேன் போறியா என்ன !!!


வெற்றி எப்பவும் என் பக்கம் தான்னு தலைவர் சொல்றாரே தேர்தல ஜெய்ச்சிடாரா??

அட நீங்க வேற மகளிரணித் தலைவர் பேரு வெற்றிநாயகி அதைத்தான் சொல்கிறார்.


தலைவர் தேர்தல் மீட்டிங்ல ரொம்ப பயத்தோடு தான் பேசுவார்

பேச்சு நல்லா வரட்டுமா

பேச்சு நல்லா வரணும்னா ??

இல்ல பேசிட்டு நல்லபடியா திரும்பி வரணும்னு .


தேர்தல்ல நான் ஜெயிச்சா தமிழ்நாட்டை சிங்கப்பூரா மாற்றுவேன்.

வேண்டாம் தலைவரே பாஸ்போர்ட் அது இதுன்னு ஜனங்களுக்கு ரொம்ப தொல்லையாய் போய்விடும்.

தலைவர் எதிரே இருக்கிறவர் அடிக்கடி தலையை வாரி கிட்டே இருக்காரே வேட்பாளர் பதவிக்காகவா ??

வாரியத் தலைவர் பதவியாவது கொடுங்கன்னு தலைவர்கிட்ட சிம்பாலிக்காக சொல்றாராம் .


தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்கார்

எப்படி சொல்ற ???

திருடங்க ஓட்டு போட்டா அது நல்ல ஓட்டா

கள்ள ஓட்டான்னு கேட்கிறாரே !!!.


தலைவர் எதுக்கு திடீர்னு நீச்சல் கத்துகிறார் ???

தலைவரை பெரியகுளத்தில் வேட்பாளராக நிற்க மேலிடத்திலிருந்து சொல்லி இருக்காங்களாம்.


மன்னிச்சுக்குங்க தேர்தல் மீட்டிங்கில் பேசிக்கிட்டு இருக்கும்போது மேடையிலிருந்து கீழே விழுந்த தலைவரை காப்பாத்த முடியல

பரவாயில்ல டாக்டர் ஜனங்களை காப்பாத்திடிங்க !!.


வர்ற தேர்தல்ல நான் கட்டாயமா தோத்துப் போவேனே எப்படியா சொல்ற??

நான் ஜெயிச்சா மதுக்கடையை எல்லாம் இழுத்து மூடுவேன் மீட்டிங்கில் பேசுறீங்களே தலைவரே .


போன தேர்தலுக்கு வாங்கினதே இன்னும் இருக்கு

பணமா தலைவரே ??

இல்லை கடன் !!!.

1 thought on “அரசியல்வாதி ஜோக்குகள்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *