ஜோக் -01
டீச்சர் :ஏய் சுக்கி நான் பாடம் நடத்திட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு எழும்பி எங்க போற நீ ???
சுக்கி :மிஸ் எனக்கு தூக்கத்துல நடக்குற வியாதி மிஸ் 😂😂😂😂
ஜோக்-02
நோயாளி : எவ்வளவு கஷ்டமான ஆபரேஷன் நல்லபடியா முடிச்சிட்டீங்க டாக்டர் வாழ்த்துக்கள் 🌹.
டாக்டர் : இது எல்லாம் என் கையில இல்ல,எல்லாம் ஆண்டவன் கையில தான் இருக்கு அப்பா.
நோயாளி : அப்போ ஆபரேஷன் பீசை உண்டியலில் போடட்டுமா டாக்டர்.😜😜😜
ஜோக்-03
டீச்சர் : ஆறும் ஆறும் சேர்ந்தால் என்ன வரும்???
மாணவன் : மிகப்பெரிய வெள்ளம் வரும் சார் 🤣🤣🤣.
ஜோக்-04
சுக்கி : அம்மா ஒன்னு பெருசா முப்பது பெருசா???
பத்ரகாளி : 30 தாண்டி பெருசு.
சுக்கி : அப்போ நான் 30வது ரேங்க் எடுத்து இருக்கேன் அப்ப நான் தானே பெருசு 😜😜
ஜோக்-05
டாக்டர் : என்னம்மா உங்களை தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னேனே சாப்பிட்டீர்களா
நோயாளி : இல்லை டாக்டர்.
டாக்டர் : ஏன்???
நோயாளி : நானும் எல்லா கடையிலும் ஏறி இறங்கி விட்டேன். வெள்ளை முட்டைதான் இருக்குது என்கிறார்கள் பச்சை முட்டை இல்லையாம்🙄🙄🙄