நள்ளிரவில் எனக்கு ஏற்பட்ட திகில் அனுபவம்-பேய் கதை

அனைவருக்கும் வணக்கம் இந்த சம்பவம் நடந்து சுமார் இரண்டு ஆண்டுகள் இருக்கும். நான் எங்கள் ஊர் கோவில் திருவிழாவுக்காக நான் பணிபுரிந்த நிறுவனத்திடம் இரண்டு நாட்கள் விடுமுறை கேட்டு வீட்டிற்கு வந்தேன்.
வீட்டிற்கு வந்ததும் என் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது தொலைபேசியில்

“டேய் சிவா லீவு கேட்டாச்சா ??,கேட்டியா கொடுத்தாங்களா எப்ப வருவ ஊருக்கு?? என வினவினாள்.

“அம்மா லீவ் எல்லாம் கொடுத்துட்டாங்கமா, நான் இன்னைக்கு நைட்டு கார்ல கிளம்பி நாளைக்கு காலையில வந்தர்றேன்”

சிறிது நேரம் அப்படியே அம்மாவிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். பின்பு எனது காரை ஓட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். எனது காரில் இளையராஜாவின் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே கார் ஓட்டிக் கொண்டிருந்தேன்.

அந்த நள்ளிரவில் இளையராஜாவின் பழைய பாடல்களை கேட்டு கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் ஓட்டிய பிறகு மணியைப் பார்த்தேன். மணி பன்னிரண்டரை.

அப்போது, நான் காரில் கரூரை தாண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்தேன்.

நேரம் செல்ல செல்ல எனக்கு கலைப்பு அதிகமானது.மேலும், அன்றைய நாள் முழுவதும்
கம்பெனியில் கடினமாக வேலை செய்ததால் சோர்வும் ஒட்டிக்கொண்டது.நள்ளிரவு ஒரு மணி ஆனதால் தூக்கமும் கண்களை ஒட்டிக்கொண்டது

சிறிதுநேரம், ஏதாவது இடத்தில் இளைப்பாற எண்ணினேன்.ஆனால், இளைப்பாற எந்த இடமும் கண்ணில் தென்படவில்லை. ஒரே காடுகளாக இருந்தது

மதுரையை ஒட்டிய கிராமத்து பகுதியை நோக்கி என் காரை எடுத்துக்கொண்டு வேகமாக போய்க் கொண்டிருந்தேன. சுற்றிலும் சாலையின் இருபுறமும் மரங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை

எனவே ஏதேனும் தேனீர் கடை தென்பட்டால் சிறிது நேரம் தேநீர் குடித்து இளைப்பாறலாம் என எண்ணினேன். நேரமும் சென்றுகொண்டிருந்தது எந்த தேநீர் கடையும் தென்படவில்லை. சாலையின் இருபுறங்களிலும் மரங்களைத் தவிர இளைப்பாறுவதற்கும் இடமும் ஏதுமில்லை.

சிறிது நேரம் கழித்து ஒரு குடிசையில் விளக்கு வெளிச்சத்தில் ஒரு தேநீர் கடையை பார்த்தேன். சற்று என் காரை அங்கேயே நிறுத்திவிட்டு காரை லாக் செய்து கொண்டு தேநீர் கடையை நோக்கி நடந்தேன்.

அங்கே……

தேனீர் கடையில் யாரும் இல்லை. அங்குள்ள ஒரு பழைய வானொலியில் செந்தமிழ் தேன்மொழியாம் என்ற பழைய பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது.

சுற்றும் முற்றும் பார்த்தேன் எவரும் தென்படவில்லை

சிறிது நேரம் கழித்து யாரோ நடக்கும் சத்தம் கேட்டது. உடனே சத்தம் வரும் திசையை நோக்கி பார்த்த போது, அங்கே ஒரு வயதான முதியவர் பனியன் மற்றும் லுங்கி அணிந்து கொண்டு முதுமையான தோற்றத்தோடு என்னை நோக்கி வந்தார்.



என்ன வேண்டும்?, என்பதை அவர் கண்களால் செய்கை செய்தார் நான் அதனை புரிந்து கொண்டு தேனீர் கிடைக்குமா? என்று கேட்டேன். உடனே அவர் கையை மேலே தூக்கி சற்று பொறு என்பது போல் சைகை செய்தார் .நானும் அருகில் இருந்த மேசையில் அமர்ந்தேன். பின்னர் அவர் இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு தேனீரை ஊற்றினார். பின்னர் என்னிடம் கொடுத்தார்.

நான் அதனை கையில் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் செய்ததால் கொண்டிருந்தேன். அவர் என்னையே முறைத்துக் கொண்டிருந்தார். எனக்கு சற்று பயமாக இருந்தது .

ஏனெனில் சுற்றும் முற்றும் திசையில் எவருமில்லை. மேலும், அது நள்ளிரவு என்பதால் அமைதியான சூழல் பயத்தினை மென்மேலும் அதிகரித்தது

உடனே நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரிடம்,” ஐயா உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லாமல் என்னை மென்மேலும் முறைத்துக் கொண்டே இருந்தார்.

நான் இங்கே இருந்தால் சரிப்பட்டு வராது என எண்ணிக்கொண்டு மழமழவென்று தேநீரை பருகினேன். பின்னர் தேநீர் கிளாசை அவர் கையில் கொடுத்துவிட்டு எவ்வளவு? என்று கேட்டேன். அதற்கு அவர் தனது ஐந்து விரல்களை காட்டி ஐந்து ரூபாய் என்பது போல் சுட்டிக்காட்டினார்.

Tamil ghost stories

நான் அவர் நான் அவர் செய்த செய்கையை புரிந்து கொண்டு பணத்தை கொடுக்க முற்பட்டபோதுதான் எனக்கு ஞயாபகம் வந்தது பரிசை காரில் உள்ளே வைத்து விட்டேன் என்று. உடனே நான் வந்து அவரிடம் ஐயா சற்று பொருங்கள் இதோ எடுத்து வருகிறேன் என்று காரை நோக்கி புறப்பட்டேன்.

பின்னர் காரினுள் சென்று எனது பர்சில் இருந்து ஐந்து ரூபாயை எடுத்துக் கொண்டு காரை விட்டு வெளியேறிய போது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நான் சற்று நேரம் வரை தேநீர் பருகினால் அந்த கடை தென்படவில்லை உடனே என் பயம் என்னை தொற்றிக் கொண்டது. எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து அங்கேயே நின்றேன். மேலும் கண்களை கசக்கி சுற்றுமுற்றும் பார்த்தேன். அங்கு தென்பட்ட தூரத்தில் வெறும் மரங்கள் தவிர வேறு எதுவும் இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே மெதுவாக காரினுள் சென்று அமர்ந்தேன்.

அப்போது….

ஓநாய் சத்தமும். நாய் குறைக்கும் சத்தம் பூனை அலறும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. நள்ளிரவில் இத்தகைய அமைதியான சூழலில் இத்தகைய மிருகங்கள் எழுப்பும் சத்தம் என் பயத்தை மேலும் அதிகரித்தது.

உடனே நான் காரை ஸ்டார்ட் பண்ணி கொண்டு சென்று கொண்டிருந்தேன். அப்போது சாம்பல் வாசம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. எனக்கு பயத்தில் வியர்க்க தொடங்கியது.சிறிது நேரம் கழித்த பிறகு மீண்டும் சாம்பல் வசனம் அதிகரிக்கத் தொடங்கியது.

மேலும் அத்தகைய வாசம் காரின் பின் சீட்டில் இருந்து வருவதுபோல் இருந்தது.உடனே என் கழுத்தை மெல்ல திருப்பினேன்.

அப்போது….

அந்த முதியவர் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு என்னை முறைத்துக் கொண்டிருந்தார். உடனே பயத்தில் பிரேக்கை அழுத்தினேன். என் மூஞ்சி ஸ்டீயரிங் வீல் மேல் பட்டு அடிபட்டது. என்ன

தலையில் சிறிய வலியுடன் மெல்ல எழுந்து,மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பின்னாடி திரும்பி பார்த்தேன். அப்போது பின் சீட்டில் யாருமில்லை. என் இதயம் திக் திக் என்று மளமளவென்று துடித்துக்கொண்டிருந்தது.செய்வதறியாது மீண்டும் காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தேன். அப்போது பின்னாடி இருந்து பூனை சத்தம் ,நாய் அலறும் சத்தம் போன்ற மிருகங்களின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

காரை வேகமாக அழுத்திக்கொண்டு சென்று கொண்டே இருந்தேன்.பின்னர் சிறிது நேரம் கழித்து என் கண்முன்னே ஒரு முருகன் கோவில் தென்பட்டது. உடனே காரை அவசரஅவசரமாக கோயிலுக்கு அருகே நிறுத்தினேன். பின்னர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காரைவிட்டு இறங்கி முருகப்பெருமானை வணங்கிவிட்டு, சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

அப்போது கை கடிகாரத்தில் மணியை பார்த்த பொழுது மணி 3:00

ஒரு அரை மணிநேரம் அக்கோவிலுக்கு முன்னே செய்வதறியாது நின்று கொண்டிருந்தேன். பின்னர் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து கொண்டு எனது ஊரை நோக்கி புறப்பட்டேன். அப்போது எந்தவித சத்தமும் என்னை பின் தொடர வில்லை.

பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் ஊரை நோக்கி புறப்பட்டேன். பின்னர் அதிகாலை ஆறு மணிக்கு என் ஊருக்கு சென்றடைந்தேன்.

நள்ளிரவில் நடந்த சம்பவத்தை என் அம்மாவிடம் கூறியபோது என் அம்மா தூங்காததால்
பிரம்மை உண்மையல்ல என்று அறிவுரை கூறினார்.ஆனால் என் மனமோ அதை ஏற்கவில்லை. ஏனெனில் நான் தேனீர் பருகியது, அந்த முதியவரின் உருவமும் என் கண்முன்னே நிற்கிறது.

மேலும் இவ்வாறு ஏதேனும் சம்பவம் உங்களுக்கு நடந்தால் மறவாமல் உங்கள் கருத்தை கீழே உள்ள கமெண்டில் தெரிவிக்கவும்

3 thoughts on “நள்ளிரவில் எனக்கு ஏற்பட்ட திகில் அனுபவம்-பேய் கதை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *