Best Tamil kadi jokes | மொக்க ஜோக்ஸ் -17

தமிழ் கார்டூன் ஸ்டூடியோ தளத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன். இங்கு பல விதமான கடி ஜோக்ஸ், மொக்க ஜோக்ஸ், விலங்குகள் ஜோக்ஸ், காய்கரிகள் ஜோக்ஸ், டாக்டர் ஜோக்ஸ் என பலவற்றை படித்து மகிழுங்கள்.

ஜோக் 1 :

டாக்டர்: “நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்”

நோயாளி: “டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்”.

ஜோக் 2 :

 “சுவரில் எழுதாதே’ன்னு இருந்தது. நான் போயி…”

“என்ன செய்தே?”

” ‘சரி எழுதலை’ன்னு எழுதிட்டு வந்திட்டேன்”

ஜோக் 3 :

ஆசிரியை : “ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா
பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?”

மாணவன்: “ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்
விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்”.

ஜோக் 4 :

எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது?

ஏ‌ன் எ‌ன்ன ப‌ண்றா‌ங்க?

நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

கார் ஓட்டி பாரேன்.

ஜோக் 5 :

“டி.வி.பார்க்கறது பெண்களுக்கு சகஜம்தானே…

இதையேன் பெரிசா சொல்றீங்க…?”

“அட! நீங்க ஒன்னு கரண்ட் இல்லைன்னாலும் டி.வியைப் பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருக்காங்க.!”

ஜோக் 6 :

திருடன் 1: டேய் நேத்து நாம திருடுன பணத்த எண்ணாமகூட ஒளிச்சி வச்சிட்டோமே…..

திருடன் 2: அதுனால என்ன நாளைக்கு பேப்பர்ல வரும்ல… அப்ப பார்த்துக்கலாம்.

ஜோக் 7 :

ஒருவன் : காய்கறி கடையில வேலை பார்த்தவன உன் பட்டாசு கடைக்கு வேலைக்குச் சேர்த்தாயே அவன் நல்லா வேலை செய்கிறானா??

கடைக்காரர் : அதை ஏன் கேட்கிறாய் , பழக்க தோஷத்தில் பட்டாசுகளில் தண்ணியை தெளிச்சுட்டான்.

ஜோக் 8 :

ஒருவர்: பாடிக்கொண்டே வேலை செய்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்

மற்றவர் : அப்படின்னா உங்களுக்கு கொசுவை ரொம்ப பிடிக்கும்னு சொல்லுங்க.

என்னது????

ஜோக் 9 :

டீச்சர் : ஏம்பா ராமு உனக்கு வெட்கமா இல்ல ஹிஸ்டரி பேப்பர்ல முட்டை மார்க் வாங்கிட்டு வந்திருக்கா??

ராமு: சார் நீங்க தானே சார் பழசை எல்லாம் மறந்திடுன்னு சொன்னீங்க .

டீச்சர் : ?????

ஜோக் 10:

மாறா: எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் எல்லா டைனோசரரையும் சுட்டிருக்கார் தெரியுமா???.

தாத்தா : எலே மாறா என்ன சொல்ற இப்பதான் டைனோசர் எல்லாம் கிடையாதே.

மாறா : எப்படி இருக்கும் நான் தான் சொன்னேனே எங்க அப்பா எல்லா டைனோசரரையும் சுட்டுட்டாரே பிறகு எப்படி இருக்கும்.

ஜோக் 11 :

நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்???.

நடப்பது உடல் பாதுகாப்புக்காக ஓடுவது உயிர் பாதுகாப்புக்காக.

மேலும் படியுங்கள்

தமிழ் கடிஜோக்ஸ் .

திகில் கதைகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *