ராஜேஷ் ஒரு காய்கறி வியாபாரி.தன் தோட்டத்தில் விளையும் கேரட், தக்காளி போன்றவற்றை பறித்து, அதிகாலையில் சந்தையில் விற்று வாழ்க்கையை வாழ்ந்து வந்தான்.
மாலை நேரத்தில் தோட்டத்திற்குச் சென்று காய்கறிகளை பறிப்பதும், அதனை விடியற்காலை 4 மணி அளவில் கோயமுத்தூர் சந்தைக்குச் சென்று விற்பதுமாக அவன் பிழப்பு இருந்தது.
அன்று ஒரு நாள் மாலையில் தக்காளிகளை பறித்துக்கொண்டு மூட்டைகட்டி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான்.
அப்போது அவன் காலில் அணிந்த செருப்பு கழண்டு விழுந்தது என்ன ஆயிற்று என பார்த்தபோது செருப்பு கிழிந்து இருந்தது.
அடக்கடவுளே செருப்பு பிஞ்சு போச்சு இனி எப்படி வீட்டுக்கு போக போக. வழியெல்லாம் முள்ளாய் இருக்குமே இப்போ என்ன செய்யுறது என யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்போது சற்று தூரத்தில்…..
ஒரு பாறையின் அருகே ஒரு ஜோடி செருப்பை கண்டான். பாறை பக்கத்துல சென்றான்.யாருமே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல யாரு செருப்பு கழட்டி வைத்துவிட்டு போன என
அந்த செருப்பு இருந்த திசையை நோக்கி நடந்தான்.
அப்போது அந்த செருப்பை பார்த்தான்.
அந்த ஜோடி செருப்பின் அருகே வந்தவன்,அந்த செருப்பின் அழகை பார்த்து ரசித்தான்.
இந்த செருப்பை யாரு இந்த இடத்துல கழட்டி வச்சிட்டு போயிருப்பா என யோசித்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை சேரி நாம இந்த செருப்பை தொட்டு கிட்டு போவோம் என பழைய செருப்பினை தூக்கி எறிந்து விட்டு புதிதாக அந்த ஜோடி செருப்பினை தன் கால்களில் மாட்டினான்.
அவன் காலுக்கு அந்தச் செருப்பின் அளவு சரியாக இருந்தது. பரவால்ல நல்லாதான் இருக்கு என தான் கொண்டு வந்த காய்கறி மூட்டைகளை தோளில் சுமந்து கொண்டு அந்தப் புது ஜோடி செருப்பை மாட்டிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.
என்னங்க வீட்டுக்கு வந்துட்டீங்களா வாங்க வாங்க என அவன் மனைவி அவனை வரவேற்றாள்.
செருப்பை கழட்டினான். அதை நோட்டமிட்ட அவர் மனைவி என்னங்க என்ன செருப்பு புதுசா இருக்கு நாம இருக்கிற நிலைமையில இந்த புது செருப்பு எல்லாம் நமக்கு தேவையா என கோபப்பட்டாள்.
ஏய் லூசு இந்த செருப்பினை நான் வாங்கல. ரோட்டுல கெடந்துச்சு அதான் எடுத்து மாட்டிட்டு வந்தேன்.
என்னங்க நம்புற மாதிரியா இருக்கு இந்த புது ஜோடி செருப்பை கழட்டி வச்சிட்டு யாரு போயிருப்பா என வினவினாள் அவன் மனைவி.
நீ சொன்னா நம்ப மாட்ட உன் கிட்ட பேசுவதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்ல.நாளைக்கு காலையில சந்தைக்கு போகணும் மச மசன்னு நிக்காம சோத்த போடு என அதட்டிக் கொண்டே வீட்டிற்குள் சென்றான் கணவன்.
பின்னர் அந்த செருப்பை சற்று நேரம் உற்றுப் பார்த்த அவள் மனைவி என்னவோ போங்க என சலித்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.
அன்று இரவு கனமழை பெய்தது…
அதனால் சரியாக தூங்காமல் அந்த காய்கறி வியாபாரி அங்குமிங்கும் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான். அவ்வப்போது ஜன்னல் வழியாக மழை நின்று விட்டதா எனவும் நோட்டமிட்டுக் கொண்டே இருந்தான்.
சற்று நேரத்தில் மழை நின்றது. அப்பாடி மழை நின்னுருச்சா ரொம்ப சந்தோசம் என நிம்மதி அடைந்தான்.
அப்போது செல்போனில் மணி என்னவாயிருக்கும் எனப் பார்த்த போது மணி மூன்றரை மணியை காட்டியது. அடக்கடவுளே அதுக்குள்ள மணி ஆயிடுச்சா இன்னும் ஒரு மணி நேரத்தில சந்தைக்கு கெளம்பனும்.
களைப்பில் தூங்கி விடக் கூடாது.
என ஒரு மணி நேரமாக கட்டிலில் அங்குமிங்கும் தூங்காமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.
மீண்டும் செல்போனை எடுத்துப் பார்க்க மணி நாலரை மணியை தொட்டுவிட்டது அப்பாடி ஒரு வழியா நாலரை மணி ஆயிருச்சா சரி சந்தைக்கு போவோம் என கட்டிலிலிருந்து எழும்பி காய்கறி மூட்டைகளை தோளில் சுமந்து கொண்டு நடந்து வீட்டை விட்டு வெளியே வந்தான்.
அங்கே அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது
அவன் நேற்று கொண்டு வந்த அந்த செருப்பு காணவில்லை.
சுற்றும் முற்றும் பார்த்தான். எங்கு தேடியும் செருப்பு காணவில்லை. பின்னர் வீட்டிற்குள் சென்று தூங்கி கொண்டு இருந்த தன் மனைவியை எழுப்பினான். ஏய் இந்தாடி வெளியில கழட்டி வச்சிருந்த செருப்பு எங்க.
அட என்ன செருப்புங்க ஏன் தூக்க கலக்கத்தில் பதில் அளித்தால் அவள் மனைவி.
என்னது என்ன செருப்பா ஏய் நேத்து தொட்டுட்டு வந்தேனே நீ கூட சூப்பரா இருக்குனு சொன்னியே என்ன மருந்துட்டியா. ஓ அந்த செருப்பா ஏங்க நீங்க தான கழட்டி வச்சீங்க. பிறகு என்கிட்ட கேக்குறீங்க. போய் பாருங்க அங்க தான் எங்கயாச்சும் இருக்கும்.
பின்பு வெளியே வந்த காய்கறி வியாபாரி மீதும் அங்கும் இங்கும் தேடி பார்த்தான். ஆனால் அவனுக்கு செருப்பு கிடைக்கவில்லை. சரி இன்னைக்கு செருப்பு இல்லாமல் நடக்க வேண்டியது தான் என்ன புலம்பிக்கொண்டே சந்தையை நோக்கி நடந்தான்.
அப்போது அவன் நேற்று அவன் செருப்பை பார்த்த இடத்திற்கு வந்தடைந்தான்.
அங்கே…..
அந்த கள் மீது ஒரு 25 வயதுடைய இளைஞன் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
அவன் காலில் நேற்று அவன் கொண்டு வந்த செருப்பு இருந்தது.
அதை பார்த்து திகைத்த அந்த காய்கறி வியாபாரி இவன் எப்படி நம் வீட்டில் இருந்த செருப்பை எடுத்தான். ஒரு வேலை இது இவனுடைய செருப்பாக இருக்குமோ. இவ்வாறு யோசித்துகொண்டே முன்னே நடந்தான் அந்த காய்கறி வியாபாரி.
அந்த வெள்ளை சட்டை அணிந்த இளைஞன் காய்கறி வியாபாரியை முறைத்துக் கொண்டிருந்தான்.
அதை பார்த்த காய்கறி வியாபாரி பயத்தில் வேகமாக நடந்து சென்றான்.
திரும்பி பார்க்காமல் வேகமாக முன்னோக்கி நடந்து சென்றான்.
பின்னர் சற்று நேரத்தில் காய்கறி சந்தையை வந்தடைந்தான்.
அவனை பார்த்த பிற வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மற்றவர்கள் தம்மை விசித்திரமாக பார்ப்பதை உணர்ந்த காய்கறி வியாபாரி.ஏம்ப்பா ஏய் ஏம்பா எல்லாரும் என்னை பேயை பாக்குற மாதிரி பாக்குறீங்க.
அண்ணாச்சி என்ன இன்னைக்கு நடுச்சாமத்துல வந்துருக்கிய? என ஒரு வியாபாரி கேட்டான்.
என்னது நடு சாமமா ஏலே மணி விடியற்காலை 5 மணி லே ஆச்சு.
அண்ணாச்சி மணியை பாருங்க என ஒருவன் தன் செல்போனை நீட்டினான்.
அதில் மணி 1 காடியாது.
உடனே பயந்து போய் தான் செல்போனை அவசரம் அவசரமாக எடுத்து பார்த்தான். அதிலும் 1 மணியை தான் காட்டியது.
அட கடவுளே வீட்டில் செல்போனை நல்லா தானே பார்த்தேன் அப்போது 4 மணி தான காட்டுச்சு என்ன பயந்தான்.
அண்ணாச்சி நீங்க ரொம்ப பயந்து போய் இருக்கீங்க இங்கேயே இருங்க விடிஞ்சதும் வீட்டுக்கு கிளம்பி போங்க. அதுவரை இங்கேயே இருங்க என்ன அறிவுரை கூறினார்.
சரி விடியும் வரை இங்கேயே இருப்போம் என்ன முடிவெடுத்தான் அந்த காய்கறி வியாபாரி.
அப்போது திடீரென்று அவனுக்கு தான் பொண்டாட்டி பிள்ளைகள் நினைவுக்கு வந்தனர். அச்சச்சோ என் பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் தனியா வீட்டில் இருக்காவ.அவியலுக்கு என்ன ஆச்சோ தெரியலையே என பயந்தான் .
உடனே அவசரம் நான் வருகிறேன் என்ன வீட்டிற்கு புறப்பட்டான் அந்த காய்கறி வியாபாரி.
அந்த செருப்பு இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான். அங்கே அந்த செருப்பும் இல்லை அந்த வெள்ளை சட்டை அணிந்த இளைஞனும் காணவில்லை.
திகைத்து நின்ற அந்த காய்கறி வியாபாரி மேல் யாரோ கை பட்டது.
காய்கறி வியாபாரி பயத்தில் அலறினான்.
ராஜேஷு பயப்படாத பயப்படாத நான்தான் பால் வியாபாரி.
அட நீங்க தனா இப்படித்தான் பின்னாடி நின்னு பயமுறுத்தாவீங்களா.
அட மன்னிச்சுகாப்பா இந்நேரத்துல இங்க என்ன செஞ்சிட்டு இருக்க.
சும்மா தான். என்ன சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தான்.
ஏம்ப்பா ராஜேஷு யாரப்பா தேடுற?
ம்ம் அதுவா ஒரு வெள்ளை சட்டை வேட்டி மாட்டிக்கிட்டு ஒருத்தன் இருந்தான். அவனை தான் தேடுகிறேன் காணவில்லை.
ஐயையோ அவனா…. அவனை….. நீ… ஏன்…. தேடுறா…. என்ன அந்த பால் வியாபாரியின் வார்த்தைகள் தடுமாறியது.
ஏன் என்னாச்சு யாராவன்????
ராஜேஷு அவன் செத்து போய் ஒரு வாரம் ஆச்சுப்பா. கல்யாணம் பொண்ணு ஓடி போனதால அவன் விஷம் குடிச்சு இந்த இடத்தில் செத்துட்டான்னு எல்லாரும் பேசிக்குராவா. நீ….. எப்படி… அவனை பார்த்தா…..?
இந்த கதையை மெல்ல கேட்டு கொண்டிருந்த காய்கறி வியாபாரி பயத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.
உடனே அவசரம் அவசரமாக தன் வீட்டை நோக்கி ஓடினான்.
மூச்சு வாங்க தான் வீட்டை வந்தடைந்தான்.
அங்கே…….
அந்த செருப்பு வெளியே இருந்தது. அதை பார்த்த காய்கறி வியாபாரியன் கை கால் எல்லாம் நடுங்கியது.
ஏய் புள்ள ஏய் புள்ள வெளியே வா வெளியே வா என்ன பயம் கலந்த குரலில் கத்தினான்.
என்னங்க வாசலில் நின்று ஏன் கத்துறீங்க, என்ன அதட்டிக் கொண்டே வீட்டில் இருந்து வெளியே வந்தாள் அவள் மனைவி .
என்னங்க இப்பதான் வந்தீங்களா உங்களை தேடி ஒரு வெள்ளை சட்டை மாட்டிய பையன் வந்தான். அவன் உங்களிடம் இத கொடுக்க சொன்னான் என்ன ஒரு பாட்டிலை அவன் முன் நீட்டினாள்.
அது ஓர் விஷம் நிறைந்த பாட்டில்.
அதை பார்த்த அந்த காய்கறி வியாபாரி அதிர்ந்து போனான்.
விடிந்தது…
மறுநாள் காலையில் அந்த செருப்பை முதன் முதலில் பார்த்த இடத்திலே வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு சென்றான்.
வீட்டிற்கு வந்ததும் வீட்டின் முன்னே அய்யனார் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை மாலையை வீட்டின் முன் காட்டினான்.
இனிமேல் எந்த பிரச்சனையும் இருக்காது என்ன கடவுளை வணங்கி கொண்டே உள்ளே சென்றான்.
முற்றும்.
மேலும் பேய் கதைகள் படிக்கவும்.
மேலும் சிந்தித்து சிரிக்க தமிழ் மொக்கை ஜோக்ஸ் படிக்கவும்.