வேலைக்காரி பேய் Tamil horror stories

வினோத் சத்யா இருவரும் ஐடி துறையில் வேலை பார்க்கும் தம்பதிகள். இவர்கள் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை.

வினோத் சத்யா இருவரும் காலை 7 மணிக்கு புறப்பட்டால் இரவு பத்து அல்லது பதினோரு மணிக்குதான் வருவார்கள். இவ்வளவு வேலைச்சுமை இருக்கும் போது குழந்தை எப்படி இருக்கும் என சுற்று வட்டாரங்கள் இவர்களை மறைமுகமாக கேலி செய்வார்கள்.

மேலும் அதிகாலையிலே கிளம்புவதால் சத்யாவிற்கு சமைக்க இயலாது. எனவே இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.அதன்படி காலையில் சமைப்பதற்கு, வீடு பெருக்குவதற்கு,துணிகளை துவைப்பது மற்றும் வீட்டை சுத்தமாக வைப்பதற்கு என பல்வேறு வேலைகளைச் செய்வதற்காக ஒரு வேலைக்காரியை நியமிக்கலாம் என முடிவு செய்தனர்.

அதன்படி பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு வேலைக்காரியை அணுகினர்.

உன் பேரு என்னமா???.

சுந்தரி மேடம்.

நல்லா வீட்டு வேலை செய்வியா???.

செய்வேன் மேடம். பெரிய பெரிய இடத்துக்கு எல்லாம் போய் வேலை செஞ்சிருக்கேன்.

சரி நாளைக்கே வேலைக்கு சேர்ந்ததுடு.சம்பளம் மாதம் பதினெட்டாயிரம் போதுமா???.

போதும் மேடம்.

சரி நாளைக்கு காலையில 5 மணிக்கே வந்திடு என சத்யா சுந்தரியிடம் கூறினாள்.பின்னர் அந்த தம்பதி அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

மறுநாள் காலை 5 மணி அளவில் அலாரம் அடித்தது. சத்யா விழித்துக்கொண்டாள். கதவைத் திறந்து வெளியே பார்த்தாள்.ஒருவரும் வரவில்லை .

5 மணிக்கு வரச் சொன்ன ஆளையே காணோம் என சத்யா திட்டிக்கொண்டு இருக்க ஓடி வந்தாள் சுந்தரி.வந்துட்டா.

முதல் நாளில் இவ்வளவு லேட்டா வந்தா என்ன செய்யலாம் என சத்யா கோபப்பட்டாள்.

மன்னிச்சுக்கோங்க மேடம்.நேத்து ராத்திரி நிறைய வேலை இருந்துச்சு. அதான் தூங்கிட்டேன்.

சரி சரி நீ போய் வேலையை செய் என ஆணையிட்டால் சத்யா.

அடுப்பங்கரைக்கு வந்த சுந்தரி மடமடவென காப்பி வைத்து இருவருக்கும் கொடுத்து, காலை உணவை ரெடி செய்து மதிய உணவை அவர்கள் டிபன் பாக்ஸில் வைத்து அவர்களை வழியனுப்பி வீட்டை பெருக்கி சுத்தம் செய்து விட்டு சாவியை எடுத்து வெளியே உள்ள பூந்தொட்டியில் வைத்து விட்டுச் சென்றாள்.

இப்படியே ஒரு மாதம் சென்றது.

அன்று மாதக் கடைசி நாள் வழக்கமாக அனைத்து வேலையும் செய்து முடித்துவிட்டு சுந்தரி சத்யாவிடம் ஏதோ பேசுவதற்காக தயங்கி நின்று கொண்டிருந்தாள்.

என்ன சுந்தரி என்ன விஷயம் சொல்லு என கேட்டாள் சத்யா.

மேடம் ஒன்னும் இல்ல மேடம் மாசம் கடைசி ஆச்சு சம்பளம் என தயங்கி தயங்கி கேட்டாள்.

சம்பளமா????. இன்னும் ஒன்னாம் தேதி பிறக்கட்டும். அப்புறம் தாரேன் என சத்யா அதட்டினாள்.

அடுத்த நாள் 1ஆம் தேதியும் பிறந்தது.

அன்றும் வழக்கம் போல சத்யா காபி குடித்துக் கொண்டே இருக்க, சுந்தரி,மேடம் சம்பளம் என மீண்டும் தயங்கி தயங்கி கேட்டாள்.

ஏய் இப்பதானே 1ஆம் தேதியை பொறந்து இருக்கு.நாங்க என்ன பணத்தை வீட்டில் உட்கார்ந்து அச்சா அடிச்சிட்டு இருக்கிறோம்.எங்களுக்கு சம்பளம் வந்ததுக்கு அப்புறம் எல்லாம் கட்டி முடித்து தான் உனக்கு தர முடியும். வெயிட் பண்ணு. ஒரு ஏழாம் தேதி கழிச்சுதான் என அதட்டினாள் சத்யா.

பின்பு ஏழாம் தேதி……… மேடம் சம்பளம் என மீண்டும் கேட்டாள் சுந்தரி.

உனக்கு வேற வேலையே இல்லையா நாங்க சம்பாதிக்காத காசா என்ன?????.உனக்கு என்ன சம்பளம் தராமல் ஓடியா போகப் போறோம். அமைதியா இரு இந்த மாசம் கொஞ்சம் டைட்டா இருக்குது. 14ஆம் தேதி ஆனதும் டான்னு தலையை சுத்தி உன் கையில சம்பளத்தை கொடுத்து விடுகிறோம். போதுமா என திட்டினாள்.

பதினான்காம் நாளும் ஆனது. ஆனாலும் சுந்தரிக்கு சம்பளம் வரவில்லை. மேடம் சம்பளம் என மறுபடியும் கேட்டாள்.

ஏய் நில்லு காய் மார்க்கெட்டுக்குப் போய் ஷாப்பிங் பண்ணிட்டு மிச்சம் வரும். சம்பளம் சம்பளம்னு உன் தொல்லை தாங்க முடியல.இங்கேயே நில்லு ஏடிஎம்ல போயி காச எடுத்துட்டு வரேன் என கோபித்துக் கொண்டு கிளம்பினாள்.

அந்தப் பெரிய அப்பார்ட்மெண்ட் இல் இருந்து கீழே இறங்கிய ஏடிஎம் அருகே உள்ள ஏடிஎம் மிஷினை நோக்கிச் சென்றாள்.அப்போது சின்ன வெங்காயம் சின்ன வெங்காயம் சின்ன வெங்காயம் என தள்ளு வண்டிக்காரன் சத்தம் கேட்டது.

கடையில போய் வாங்கிட்டு வர சின்ன வெங்காயம் நல்லாவே இல்ல. சரி எவ்வளவு என நோட்டமிட்டுக் கொண்டே கேட்டாள் சத்யா.

என்ன மேடம் வேலைக்கு புதுசா ஆள் சேர்த்து விட்டீர்களா என அந்த காய்கறி வியாபாரி கேட்டான்.

ம் ம் ம் சேர்த்து ஒரு மாசம் ஆச்சு.

மேடம் என்ன சொல்றீங்க ஒரு மாசம் ஆச்சா??.உங்க பழைய வேலைக்காரி இறந்து 15 நாள் தானே ஆச்சு.

பழைய வேலைக்காரியா??? நாங்க ஒரு வேலைக்காரி தானே இதுவரைக்கும் வைத்திருக்கோம் என சத்யா கேட்டாள்.

மேடம் என்ன ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குறீங்க உங்க பழைய வேலைக்காரி அதான் சுந்தரி அவங்க ஆக்சிடெண்டில் இறந்து போயிட்டாங்க தெரியாதா?? என வெங்காய வியாபாரி கேட்க சத்யா மனதில் பாரங்கல் விழுந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்.

நீ என்ன சொல்ல வரீங்க என அவள் குரல் தழுதழுத்தது.

அட மேடம் போன மாதம் 31ஆம் தேதி ஏதோ வெங்காயம் வாங்கப் போறேன்னு கடைக்கு போனா அந்த நேரம் பார்த்து ஒரு கார் வேகமாக வந்து அடிச்சிட்டான்.

வேலைக்காரி ஸ்பாட்லே இறந்துட்டாங்க.

என்ன உங்களுக்கு விஷயம் தெரியுமா இல்ல தெரியாத மாதிரி என்கிட்ட நடிக்கிறீங்களா என வெங்காய வியாபாரி சற்று சந்தேகத்துடன் கேட்டான்.

அதைக் கேட்ட உடனே சத்தியா மனம் படபடத்தது. இப்போதானே சம்பளம் கேட்டா ஆனா இவன் அவள் இறந்து 15 நாள் ஆயிருச்சு சொல்றான். இருப்பினும் அந்த வியாபாரியை நம்பாதவள் நேராக அவள் தங்கியிருக்கும் வீட்டிற்க்கே சென்றாள்.

அங்கே அவள் போட்டோவுக்கு மாலை போட்டு இருந்தது.அவள் கணவரிடம் விசாரித்த போது அவன் ஆமாம் மேடம் உங்களுக்கு சொல்ல மறந்து விட்டோம். அவள் இறந்து பதினைந்து நாள் ஆயிருச்சு என வருத்தத்தோடு அவள் கணவன் தெரிவித்தான்.

அதை கேட்ட சத்தியா அட கடவுளே அப்ப நம்ம வீட்டில என அலறிக்கொண்டு வீட்டிற்கு சென்றாள். பயத்தோடு வீட்டு கதவை திறந்தாள்.

அங்கே சுந்தரி பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்தாள்.சுதா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சுந்தரி என பயத்தோடு அவளை கூப்பிட சத்தம் கேட்காதவாறு பாத்திரத்தை அழுத்திக் கொண்டு விளக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

ம்ம்ம்ம் என்ற உறுமல் சத்தமும் கேட்டது.அதனைக் கேட்ட பயந்து சத்யா சுந்தரிரி…….என சத்தத்தோட கூப்பிட அவள் சடாரென்று திரும்பி சொல்லுங்க மேடம் என வந்தாள்.

நீ நீ நீ என்று வாய் பேச வராமலிருக்க மேடம் சம்பளம் என சுந்தரி கேட்டாள்.அதைக் கேட்ட சத்யா மனது வலித்தது.

உடனடியாக தன் பீரோவை திறந்து சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து 20,000 எடுத்துக்கொண்டு சுந்தரியிடம் நீட்டினாள். அதை எண்ணிப் பார்த்த சுந்தரி இரண்டாயிரத்தி திருப்பி சத்யாவிடம் கொடுத்துவிட்டாள்.

வேண்டாமா நீயே வச்சுக்க என சத்யா கேட்க பதினெட்டாயிரம் தான் சம்பளம் என்று பேசியிருந்தோம் மேடம்.பதினெட்டாயிரம் போதும் என பணத்தை வாங்கிக் கொண்டு வெளியே சென்றாள்.

சுந்தரி செல்வதை பார்த்த சத்யா பின்பு அவளைப் பின் தொடர்ந்து கொண்டு சென்றாள்.

சுந்தரி அவர் வீட்டிற்குச் சென்று அவர் போட்டோவின் அருகே அந்த 18,000 பணத்தை வைத்தாள்.

பின்னர் சத்யாவை பார்த்து ஒரு புன் சிரிப்பு சிரித்தாள். பின்னர் அங்கேயே மாயம் ஆனால். அதைப் பார்த்த சத்தியா அதிர்ச்சியடைந்தாள்.அப்போது என்ன ஆன்ட்டி என்ன வேணும் என ஒரு குழந்தை வந்தது. அது வேறு யாருமில்லை சுந்தரியின் குழந்தை தான்.

கண்ணே படிக்க போலையா மா.

இல்ல ஆன்ட்டி அம்மா இருக்கிற வரைக்கும் என்ன படிக்க வச்சாங்க இப்போ எனக்கு படிக்க முடியுமான்னு தெரியல என அந்த குழந்தை சற்று தயக்கத்துடன் கூறியது.

சரி உன் ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவு எனக் கேட்டாள் சத்யா.

பதினெட்டாயிரம் ஆன்ட்டி என அக்குழந்தை சொல்லியதும் சத்யாவின் மனம் வாடியது.

இனிமேல் உன்னை படிக்க வைக்கிறதுக்கு நான் இருக்கேன் அழாதே. இனி நீ என் பொண்ணு மாதிரி வரும் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வேன். உனக்கு படிப்பு காசை நானே ஏற்கிறேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு சத்யா புறப்பட்டுச் சென்றாள்.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியின் போட்டோ மகிழ்ச்சியில் மலர்ந்தது.

முற்றும்.

மேலும் பேய் கதைகளை படிக்க.

சிந்தித்து சிரிக்க தமிழ் மொக்கை ஜோக்ஸ் படிக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *