பேய் மாமியார் | Tamil ghost story

கார்த்திக் வனிதா இருவரும் திருமணம் ஆகி சுமார் ஏழு ஆண்டுகளாக சொந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஹரிஷ் என்ற 5 வயது மகன் உள்ளான்.

மேலும் கார்த்திக்கின் அம்மா சாந்தி உடல்நலக்குறைவால் சுமார் மூன்று ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உள்ளார். தனி ஒரு அறையில் அவருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை சற்று கழிவு நாற்றமும் துர்நாற்றமும் கலந்து வீசும். அதனால் வீட்டிற்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் அந்த அறையில் கார்த்திக் தன் அம்மாவை தனியாக வைத்தாள் .

வனிதா வனிதா வனிதா என்று என்ன நேரமும் மாமியார் சாந்தியின் குரல் வீட்டில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இந்த கிழவிக்கு வேற வேலை இல்ல எப்ப பார்த்தாலும் கூப்பிட்டு கிடக்கு. இது என்னைக்கு தான் செத்து தொலையுமா என்று வனிதா சகித்துக் கொள்வாள்.

தன் மகனை பள்ளி வேனில் ஏற்றி விட்டு வீட்டிற்கு வருபவள் சோபாவில் படுத்துக்கொண்டு செல்போனை நோண்டுவாள்.

வனிதா வனிதா வனிதா என்று குரல் ஒலிக்கும். ஆனால் அதனை கண்டுக்காத அவள் காலை சாப்பாடாக இரண்டு இட்லியை சுமார் 11 மணிக்கு எடுத்துக்கொண்டு தன் மாமியாரின் வயிற்றில் வைத்து விட்டு சென்று விடுவாள்.

அவள் மாமியார் படுத்துக் கொண்டே சாப்பிடுவார்.தண்ணீர் குடிக்கும் போது சில நேரம் குறை விழுவதும் உண்டு. பயங்கர இருமல் சத்தம் கேட்டாலும் கண்டுக்காத வனிதா எந்நேரமும் செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாள்.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தது. ஒருநாள் என்னங்க என்னால உங்க அம்மாவ சமாளிக்க முடியல.எப்பதான் சாவாங்க தோ எப்ப பார்த்தாலும் உசுரை எடுத்துட்டு இருக்காங்க தொல்ல தாங்க முடியல என்பாள்.

கார்த்திக் தன் அம்மாவின் கழிவுகளை அகற்றுவதற்காக ஒரு வேலைக்காரியை நியமித்தான். ஆனால் அவளோ காசு வாங்குவதைத் தவிர மற்றபடி ஏனோதானோ என்று சுத்தம் செய்துவிட்டு ஒரு மணி நேரத்தில் ஓடி விடுவாள்.

இதனால் மாமியார் இருக்கும் அறை சற்று கழிவு நாற்றத்துடன் காணப்படும். இப்படி வயதான காலத்தில் படுத்த படுக்கையாகி விட்டோமே என்ற வருத்தத்தில் சாந்தி புலம்பிக் கொண்டிருப்பாள்.

மகன் கார்த்திக் மருமகள் வனிதா பேரன் ஹரிஷ் என ஒருவர் கூட அந்த அறையை ஏறிட்டுக் கூடப் பார்ப்பதில்லை. அவர்கள் பேசும் குரல் மட்டும் தான் சாந்திக்கு கேட்கும் மற்றபடி ஒருவரும் சாந்தி பேசுவதை கண்டு கொள்ள மாட்டார்கள்.

இந்த நாலு செவுரு அறையில் கழிவு நாத்தத்துடன் இருப்பது சாந்திக்கு மிகவும் கொடியதாக இருந்தது.

இதனை நினைத்து பல்வேறு நாள் வேதனை அடைந்த அழுவாள். எப்போதுதான் அந்த எமதர்மராஜா என் உசுரு எடுத்துட்டு போவாரோ, இந்த நாலு சுவர் குள்ள கழிவு நாதத்திலே இப்படியே எவ்வளவு நாள் தான் உயிரோடு இருக்கிறது என்று பல்வேறு முறை சாந்தி புலம்பியிருக்கிறார்.

அன்று ஒரு நாள் மகனை பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்டு வனிதா வழக்கம்போல சோபாவில் படுத்து செல்போனை பார்க்க ஆரம்பித்தாள்.செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் களைப்பில் சற்று நேரம் படுத்து தூங்கி விட்டாள்.

சுமார் ஒரு மணி நேரமாக மெல்ல கண்களை விரித்துப் பார்த்தாள்.விழித்து பார்த்ததும் அதிர்ந்து போனாள்.

ஏனென்றால் வனிதா அவள் மாமியார் கிடந்த அறையில் படுத்த படுக்கையாக கிடந்தாள்.

அய்யய்ய என்னதிது நாம எப்படி இந்த இடத்துக்கு வந்தோம் என்று சொல்லி எழ முற்பட்டாள்.ஆனால் அவளால் எழும்ப முடியவில்லை. ஏதோ அவளைப் பிடித்து கட்டிலில் கட்டியது போன்று இருந்தது. பலமுறை தன் பலம் கொண்டு முயற்சித்தும் அவளால் அந்த கட்டிலிலிருந்து எழும்ப முடியவில்லை.

அப்போது யாரோ தம்மை நோக்கி நடந்து வரும் சத்தம் கேட்டது.அது ஒரு பெண் ஆனால் அந்தப் பெண் யார் என்று வனிதாவிற்கு தெரியவில்லை.அவளை இதற்கு முன்பு பார்த்தது கூட இல்லை. அந்தப் பெண் இரண்டு இட்லியை கொண்டுவந்து வனிதாவின் வயிற்றின் மேலே போட்டாள்.

இந்தாக் கிழவி தின்னுட்டு சீக்கிரமா போய் சேரு.உன் கூட என்னால அவஸ்தைப்பட முடியாது என்று உரக்க குரலில் திட்டி விட்டு சென்றாள்.

ஏய் நில்லு யார் நீ என்று கேட்பதற்குள் ஒரு இளைஞன் அம்மா ஏம்மா இப்படி தொந்தரவு பண்ணிட்டு இருக்கீங்க.ஊருல இருக்கிற எல்லாரும் சாகுறாங்க ஆனா உனக்கு மட்டும் சாவே வராதா என்றான். அந்தக் குரல் வனிதாவிற்கு எங்கேயோ கேட்டது போல் இருந்தது.

யார் நீ என்றாள் வனிதா. சரியா போச்சு என்ன மறந்துட்டீங்களா நான் தாம்மா உங்க பையன் என்றான்.

அதனைக் கேட்டதும் வனிதாவின் இதயம் படபடத்தது. மகனே என்னை இங்க இருந்து கூட்டிட்டு போ என்னால இங்கே இருக்க முடியல என்றாள் வனிதா.

யம்மா சும்மா இரும்மா. என்னால எங்கேயும் கூட்டிட்டு போக முடியாது. உன் கழிவுகளை கழுவுவதற்கு ஆள் வைப்பதற்கே காசு செலவாகிறது.எப்ப தான் போய் சேருவியோ போ என்று தலையிலடித்துக் கொண்டு சென்றான் ஹரிஷ்.

இதனைக் கேட்டதும் வனிதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அடக்கடவுளே நான் பெத்த மகனே இப்படி என்னை சொல்லிட்டு போயிட்டானே என்று அவள் மனம் வேதனை அடைந்தது.

பின்பு மறுபடியும் முயற்சி செய்து பார்த்தால் ஆனாலும் அவளால் கட்டிலில் இருந்து எழும்ப முடியவில்லை. எனினும் விடாமல் முயற்சி செய்துகொண்டிருந்தாள் வனிதா.

மேலும் அந்த அறையின் துர்நாற்றமும் கழிவு நாற்றமும் சேர்ந்த வீச வனிதாவிற்கு தலை வலித்தது. மேலும் வெளிச்சம் இல்லாமல் அந்த அறை இருளில் இருந்ததால் வனிதாவின் கண்களும் வலித்தது.

அடக்கடவுளே இதே போல தானே என் அத்தைக்கும் இருக்கும். பெத்த மகனே இப்படி சொல்றப்போ எந்த அம்மாக்கு தான் வலிக்காது.

மனுசனா பிறக்கிற எல்லாருக்கும் இறப்பு என்பது கண்டிப்பாக இருக்கும். ஆனா இந்த கழிவு நாத்தத்தில் இருக்கறது ரொம்ப கொடியது. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று கண்ணீர் ததும்ப அழுதாள் வனிதா.

அப்போது அம்மா அம்மா வந்துட்டேன் வந்துட்டேன் என்ற குரல் கேட்டது.ஹரிஷ் என்று வனிதா கூப்பிட இளைஞன் வருவான் என எதிர்பார்த்த வனிதாவிற்கு 5 வயது மகன் பள்ளி சீருடையில் பேக்கை அணிந்து கொண்டு ஓடி வந்தான்.

ஹரிஷ் நீ எப்படி சின்ன பையனா மாறின என்றாள். அம்மா தூங்காதீங்க மா என்று ஹரிஷ் கன்னத்தை மெல்ல தட்ட கண்களை மூடி திறந்தவள் அதிர்ச்சி அடைந்தாள் மறுபடி சுற்றும் முற்றும் பார்த்தாள் வனிதா.

இப்போது சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தாள். நான் மறுபடியும் சோபாவில் வந்து விட்டேனா அப்படின்னா எவ்வளவு நேரம் நடந்தது எல்லாமே கனவு தானா என பெருமூச்சு விட்டாள் வனிதா.

என்னம்மா ஆச்சு உங்களுக்கு என்று ஹரிஷ் கேள்வி கேட்டான். அப்போது தான் அவளுக்கு புத்தி உரைத்தது. பிள்ளைகள் நம்மளைப் பார்த்து தானே வளர்கிறார்கள்.

நாம் பெரியோர்களை எப்படி மதிக்கிறோம் என்பதை பார்த்து தான் அவர்களும் பெரியவர்களை மதிப்பார்கள். இந்த சின்ன விஷயத்தை புரியாம விட்டுட்டேனே இவன பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதில் என்ன பயன்?? நம் பெரியவர்களிடம் எப்படி பேசுவது என்ற அறிவு இல்லாமல் இருப்பது ரொம்ப கொடியது. அதற்கு நானே உதாரணம் ஆகி விட்டேனே என்ற மன வருத்தத்துடன் உடனே வனிதா அவள் மாமியார் இருக்கும் இடத்திற்கு சென்றாள்.

அங்கே அவள் மாமியார் சாந்தி வனிதாவை பார்த்தவுடன் நம்மை திட்ட போகிறாள் என்று கண்களை மூடிக்கொண்டாள்.

உடனே வனிதா தன் மாமியாரின் தலையை மெல்ல வருடி அத்தை என்றாள்.அத்தை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் சாந்தி மெல்ல கண்களை திறந்தாள். அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

பின்பு அத்தை படுத்திருந்த அந்த அறையின் கழிவுகளை எல்லாம் சுத்தப்படுத்தி அறையின் ஜன்னல்களை திறந்து விட்டு அந்த அறையினுள் வெளிச்சத்தை கொண்டு வந்தாள்.அவள் வெளிச்சத்தை மட்டும் கொண்டு வரவில்லை அந்த அறையில் மகிழ்ச்சியையும் சேர்த்துக் கொண்டு வந்தாள்.

அந்த அறையை சுத்தப்படுத்தி ஒரு வீல் சேரில் மாமியாரை உட்கார வைத்து வெளியில் கூட்டிச் சென்றாள்.வெளியே வந்து சூரியனைப் பார்த்ததும் அத்தை முகம் மலர்ந்தது.

அவள் முகம் மட்டும் அல்லாமல் அவள் உள்ளமும் மலர்ந்தது.

அதனைப் பார்த்த ஹரிஷ் மகிழ்ச்சி அடைந்தான்.

இங்க பாரு ஹரேஷ் பெரியவங்கள இப்படித்தான் பார்த்துக்கணும் என்று அறிவுரை புகட்டினால் வனிதா.

அன்பு இல்லாத உலகம் உலகமே இல்லை..

நன்றி.

முற்றும்.

மேலும் பேய் கதைகளைப் படிக்க.

சிந்தித்து சிரிப்பதற்கு தமிழ் மொக்கை ஜோக்ஸ் படிக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *