ராம் வயது 46, தூத்துக்குடி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்கிறான். தன் தாயார் இறந்து 20 ஆண்டுகளாக திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்கிறான்.

ராம் இறந்தவர்களின் உடலுக்கு பிணப்பெட்டியை தயார் செய்யும் தொழிலை செய்து வந்தான்.இதுவரை சுமார் நூற்றுக்கும் மேலான பிணப்பெட்டிகளை தயார் செய்து வந்துள்ளான்.
இறந்த உடலின் அளவுக்கு ஏற்ப என பெட்டியை தயாரித்து வந்தான்.
சில சமயம் இறந்த உடலின் அளவு தெரியாமல் உறவினர்கள் கதறும் போது நேரில் சென்று உடலை பார்த்து அறிந்து அதற்கேற்ப பிணப்பெட்டியை தயாரிப்பான்.
அன்று ஒரு நாள்…..
இடியுடன் கூடிய கன மழை பெய்து கொண்டிருந்தது.சுமார் மாலை 5 மணியில் தொடங்கிய சூறைக்காற்று மழை இரவு 10 மணி ஆகியும் விடவில்லை.
இரவு உணவு வெளியே சென்று வாங்க முடியாமல் பட்டினியால் படுத்து உறங்கத் தொடங்கினான்.பசியின் மயக்கத்தால் ராம் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருந்தான்.
அப்போது……
கதவை யாரோ வேகமாக தட்டும் சத்தம் கேட்டது.திடுக்கிட்டு எழுந்த ராம் கண் விழித்துப் பார்த்தான்.
கண் எதிரே நின்ற கடிகாரத்தில் மணி நள்ளிரவு 12 மணி காட்டியது.
மீண்டும் கதவு சத்தம் வேகமாக கேட்க ராம் பயத்தோடு கட்டிலை விட்டு இறங்கினாள்.
யாரு என்று மெல்லிய குரலில் கேட்டான் ஆனால் எதிர் முனையில் பதில் வரவில்லை மீண்டும் பலத்த வேகத்தில் கதவை தட்டும் சத்தம் கேட்டது
ராம் பயத்தை மறைத்துக் கொண்டு கடும் கோபத்துடன் யாரது கதவை தட்டுவது கேட்கல பதில் சொல்லுங்க என்று பயங்கரமான குரலில் கத்தினான்
ஆனால் எதிர்முனையில் இன்னும் பதில் வரவில்லை அதுவும் ஓசை சத்தம் இன்னும் சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது.
ராம் பயத்தோடு கதவின் அருகே சென்றான். சத்தம் படிப்படியாக குறைந்தது சிறிது நேரத்தில் கதவு சத்தம் நிசப்தமானது.
வெறும் பூச்சிகளின் சத்தம் மட்டுமே கேட்க தாம் பயத்தோடு கதவைத் திறந்து வெளியே பார்த்தான்.
அங்கே யாரும் இல்லை.
பெருமூச்சு விட்டுக் கொண்டே கதவை மீண்டும் தாழிட்டு பூட்டினான்.
மணி 12 ஆச்சு தூங்க போவோம் என்று மீண்டும் கட்டிலை நோக்கி செல்ல திடீரென்று மறுபடியும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.திடுக்கிட்ட ராம் வேகமாக நடந்து கதவைத் திறந்து பார்த்தான்.
அங்கே……
ஒரு வயதான முதியவர் கையில் கம்புடன் நின்று கொண்டிருந்தார். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்.எதற்காக நடு ராத்திரி 12 மணிக்கு கதவைத் தட்டுனிய என்று வினவினான்.
அதற்கு அந்த முதியவர் ஐயா எங்கள் ஊரில் ஒரு இழப்பு நேர்ந்து விட்டது. அதற்கு ஒரு பெட்டி வேண்டும் என்று மெல்லிய குரலில் கூறினார்.இதனைக்கேட்ட ராம் பிணத்தின் அளவு தெரியுமா என்று கேட்டான்.
அதற்கு அம்முதியவர் பிணத்தின் உடல் என் உடலை போல்தான் இருக்கும் எனக்கான அளவில் எடுத்து விடுங்கள் என்று கூறினார்.
நீங்கள் கூறிய அளவிலேயே ரெடி செய்து விடுகிறேன் என்று ராம் கூற,
ஐயா எனக்கு மிகவும் அவசரம் விடிவதற்குள் பிணப்பெட்டி வேண்டும் தயவு செய்து கொஞ்சம் சீக்கிரம் செய்து முடியுங்கள் என்றார்.

சீக்கிரம் செய்து ஆகவேண்டுமென்றால் காசு கொஞ்சம் அதிகம் ஆகும் பரவாயில்லையா என்று ராம் கேட்க அதற்கு அந்த முதியவர் தன் தலையை ஆட்டி சைகை செய்தார்.
பின்னர் ராம் அந்த முதியவரின் அளவை குத்துமதிப்பாக அளந்துகொண்டு பணப் பெட்டி தயாரிக்க சென்றான்.
இரவு 3 மணி ஆகியது. ஒரு வழியாக பிணப்பெட்டியை தயார் செய்து முடித்த பின்னர் அந்த முதியவர் சொன்ன இடத்திற்கு தன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான்.
அப்போது மணி 5 அளவில் அந்த இழவு நடந்த வீட்டுக்கு சென்றடைந்தான்.அப்போது அங்கே பார்த்து அதிர்ந்தான்
அங்கே……
நேற்று இரவு வந்த அந்த முதியவர் பிணமாக படுத்து கிடந்தார்.அதனை பார்த்து ராம் பயத்தில் அலறினான்.
அப்படி என்றால் அந்த முதியவர் ஆவியாக வந்து என்னிடம் பிணப்பெட்டியை தயாரிக்கச் சொன்னாரா என்று எண்ணும்போது ராம் மனம் பட படக்க தொடங்கியது.
அப்போது அங்கிருந்த சில மக்கள் ராம் முன்னே வந்து அந்த கடன்காரனுக்கு பிணப்பெட்டி கேக்குதா என்று கோபத்துடன் கேட்டனர். மேலும் அவர்கள் யாரும் பிணப் பெட்டிக்கு காசு தர முடியாது.
ஏற்கனவே அந்த கிழவன் எங்களிடம் ஏகப்பட்ட காசு கடன் வாங்கி விட்டான். எங்களால் யாராலும் தரமுடியாது திரும்ப அந்த பிணப்பெட்டியை எடுத்துச் சென்று விடு என முற்றுகையிட்டு கூச்சலிட்டனர்.

மேலும் ராம் அங்கிருக்கும் சில நபர்களிடம் கெஞ்சிப் பார்த்தான் ஆனால் எவரும் பணம் தருவதாக இல்லை. என்ன செய்வது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு மீண்டும் தன் வண்டியை எடுத்து அந்தப் பிணப்பெட்டியை அங்கு வைக்காமல் தன் வீட்டிற்கே கொண்டு சென்றான்.
சேரி வேறு யாராவது பிணப்பெட்டியை கேட்டால் இந்த பிணப்பெட்டியைகொடுத்து விடலாம் என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டான்.
அப்போது நள்ளிரவு 12 மணியை நோக்கி சென்று கொண்டிருந்தது.ராம் களைப்பில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.
அப்போது மறுபடியும் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. ராம் அதிர்ந்தான்.
மெல்ல கட்டிலை விட்டு எழுந்து பார்க்கும்போது அந்த ரூம் ஓரத்தில் இருந்த அந்தப் பிணப்பெட்டியிலிருந்து தட்டும் சத்தம் கேட்டது.
பயத்தில் ராம் அலறினான். என்ன செய்வதென்று அறியாமல் வீட்டை விட்டு ஓடி விடலாமா என்று முடிவு செய்து கதவை இழுத்தான். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
அந்த ரூமின் ஓரத்தில் உள்ள அந்தப் பிணம் பெட்டியோ டப் டப் டப் டப் டப் டப் என்று சத்தம் வந்து கொண்டே இருந்தது. செய்வதறியாது திகைத்த ராம் மெல்ல அந்தப் பிணப்பெட்டியை நோக்கி சென்றான்.
பின்னர் சத்தம் நிசப்தமாக மாறியது.மெல்ல அந்த பிண பெட்டியைத் திறந்தபோது அங்கே அந்த முதியவரின் உடல் இருந்தது.அதனைக் கண்டு ராம் அலறினான்.

பின்னர் மயக்கமாகி விழுந்தான்.மயக்கத்தில் நன்றாக கண்களை மூடிக் கொண்டு இருந்த ராம் மெல்ல மயக்கம் தெளிந்து கண்ணை திறந்த போது மூச்சு விட மிகவும் சிரமமாக தோன்றியது போல் இருந்தது.
என்னவென்று கண்களை நன்றாக திறந்து பார்க்கும்போது ராம் தான் பிணப்பெட்டியில் இருப்பதைக் கண்டு கடும் கூச்சலிட்டான்.
ஆ என்று ராம் பயத்தில் அலறினான். வேகமாக தட்டிப் பார்த்தான். ஆனால் அப்பெட்டியை திறக்க முடியவில்லை. அப்போதுதான் அந்தப் பிணப்பெட்டி மண்ணிற்கு அடியில் இருப்பதை அவன் உணர்ந்தான்.
தன்னை யாரோ உயிருடன் பிண பெட்டியில் அடைத்து விட்டார்கள் என எண்ணி வேகமாக தட்டிப் பார்த்தான். ஆனால் பெட்டி திறக்கப்படவில்லை.
நேரம் ஆக ஆக ராமால் மூச்சு விட முடியவில்லை.
தாம் பேயின் பிடியில் சிக்கி இருப்பதை உணர்ந்தான்.நேரம் ஆக ஆக மூச்சு விட மிகவும் சிரமப்பட்டான். ஒரு கட்டத்தில் தலை சுற்றி உடல் முழுவதும் வியர்த்து மயக்கம் போட்டு விழுந்தான். இத்துடன் தமது வாழ்க்கை முடிந்தது என்பதை உணர்ந்தான்.
அப்போது சிறிது நேரம் கழித்து…
வெளிச்சம் வர மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்தான்.
அங்கே….
நேற்று இரவு நடந்தது அனைத்தும் கனவா???. இல்லையே பிணப் பெட்டியை நான் வீட்டிற்கு தானே எடுத்துட்டு வந்தேன். ஆனால் இப்போது அதைக் காணவில்லை.அதுமட்டுமல்லாமல் நேற்று இரவு நான் பிணப்பெட்டியில் மாட்டி இருப்பது போல உணர்ந்தேன்.அவை அனைத்தும் கனவா???.
சரி இனி இந்தத் தொழிலை கைவிட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டும் என முடிவு எடுத்துக் கொண்டு வேலைக்குச் சென்றான் ராம்.
மேலும் பல திகில் கதைகளை படியுங்கள்.
மேலும் பல பேய் வீடியோ பார்க்க எமது YouTube சேனலை subscribe செய்யவும்.