தமிழ் கார்டூன் ஸ்டூடியோ தளத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன். இங்கு பல விதமான கடி ஜோக்ஸ், மொக்க ஜோக்ஸ், விலங்குகள் ஜோக்ஸ், காய்கரிகள் ஜோக்ஸ், டாக்டர் ஜோக்ஸ் என பலவற்றை படித்து மகிழுங்கள்.
மேலும் எங்கள் தமிழ் கார்ட்டூன் சேனலை மறவாமல் பாருங்கள்.
ஜோக் 1:
டீச்சர் : டேய் சோமு என்ன 20 நாளா காலேஜுக்கு வரல??
சோமு: எங்கப்பா எப்பவும் சொல்லுவார் இடத்துக்கு அடிக்கடி போன மரியாதையா இருக்காதுன்னு அதான் சார் வர்ல.
ஜோக் 2:
டீச்சர் : டேய் சோமு வீட்டில் வெயில் காலத்திற்கும் குளிர் காலத்திற்கும் என்ன வித்தியாசம்??
சோமு: எப்படா குளிக்க போறோம்னு யோசிச்சா அது வெயில் காலம் சார்.ஏண்டா குளிக்க போறோம்னு யோசிச்சா அது குளிர் காலம் சார்.
டீச்சர்: ?????
ஜோக் 3:
கணவன் : சீ காபியா டீ இது கன்றாவியா இருக்கு நாய் கூட இத குடிக்காது டீ
மனைவி : ஆமானங்க அதான் நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுத்திருக்கேன் .
ஜோக் 4:
காதலி : நம்ம காதல மெதுவா வீட்டில் சொல்லிட்டேன்.
காதலன் : நிஜமாவா வீட்டில் என்ன சொன்னாங்க நம்ம காதலை ஒத்துகிடாங்களா ???
காதலி: மெதுவா சொன்னது நால அவுங்களுக்கு கேட்டு இருக்காது.
காதலன் : ?????
ஜோக் 5:
டீச்சர் : சுக்கி யம்மா இந்த பள்ளிக்கூடத்துல உங்க புள்ள தான் ஃபர்ஸ்ட்.
பத்திரகாளி : நெசமாவா டீச்சர் நான் கண்ட கனவு ஒரு வழியா பளிச்சிடுச்சு.
டீச்சர்: ரொம்ப சந்தோசம் படாதிங்க .பெல் அடிச்சதும் உங்க புள்ளதான் வகுப்பில் இருந்து முதல்ல வெளிய வருவாழ்நு சொன்னேன்.
ஜோக் 6:
(டீச்சர் போர்டில் சிலப்பதிகாரம் என எழுதுகிறார் )
டீச்சர் : சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்
சுக்கி : நீங்க தான் டீச்சர்
டீச்சர் : என்ன சொல்ற?
சுக்கி: ஆமாம் டீச்சர் நீங்க தான இப்போ சிலப்பதிகார உன்ன போர்டில் எழுதி நீங்க
டீச்சர்: ?????
ஜோக் 7:
ஒருவன் : அவர் சீலிங் ஃபேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?
இன்னொருவன் : “எப்போ கேட்டாலும், “தலைக்கு மேல வேலை இருக்கு”ன்னு சொல்றாரே!”
ஜோக் 8:
என்னப்பா காபியில ‘ஈ’ செத்துக்கிடக்குது…?”
“ஸ்பெஷல் காபியிலதான் சார் ‘ஈ’ உயிரோட இருக்கும்”
ஜோக் 9:
டீச்சர் : ஏன்டா நாய் படம் வரைஞ்சுட்டு வாய் மட்டும் வரையாம வச்சு இருக்க?
பல்பானந்தா : ஏன்னா.. அது வாயில்லா பிராணி சார்!
டீச்சர்: ?????
ஜோக் 10:
நபர் : இங்க பாத்தீங்களா சார் ஹெல்மெட், லைசன்ஸ், வண்டிஇன்ஷ்யூரன்ஸ் இதெல்லாம் மறக்காம எடுத்துட்டு வந்துட்டேன்.
போலீஸ் :அது சரி ஏன் நடந்து வர்றீங்க.
நபர்: ஐய்யைய்யோ….! இன்னிக்கு வண்டிய எடுத்துட்டு வர மறந்துட்டேன் சார்.
போலீஸ் : ஹி ஹி ஹி ஹி.
மேலும் படியுங்கள்