இருக்கும் வரை ரத்த தானம் உயிர் பிரிந்தபின் கண் தானம் என்று அடிக்கடி பலபேர் கூறியுள்ளதை நாம் கேட்டு இருக்கிறோம்.
இன்றைய நவீன காலகட்டத்தில் சாலை விபத்துகள் அன்றாட நடந்து கொண்டிருக்கின்றன.செய்தித்தாள்களை வாசித்தாலே குறைந்தது 6 சாலை விபத்துக்கள் ஆவது இருக்கும்.மேலும் அத்தகைய சாலை விபத்தில் சிக்கியவர்கள் தக்க சமயத்தில்
ரத்தம் செலுத்தாவிட்டால் அவர்களுக்கு உயிருக்கே ஆபத்தாக விளையும்.
மனிதனாய் பிறப்பின் அன்னதானம் கண்தானம் ரத்த தானம் முதலியவற்றைச் செய்தால் அவனது ஆன்மா மேம்படும்
இரத்ததானம் அளிப்பதற்கு முன் மற்றும் அழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை காண்போம் வாருங்கள்.
ரத்த தானம் அளிப்பதற்கு முன்
ரத்த தானத்திற்கு முன் உணவு உட்கொள்ளாமல் இருந்தா ரத்தம் அளிப்பதற்கு முன் சிற்றுண்டி சாப்பிட வேண்டும்.அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டவுடன் ரத்தம் கொடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
ரத்தம் அளிப்பதற்கு முன்னர் உடல்நலம் மற்றும் ரத்தத்தின் தரம் ஆகியவற்றை மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்
ரத்தம் அழிப்பதற்கு இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முன் வரை உட்கொண்டு இருக்கக்கூடாது
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ள உள்ளவர்களும் ரத்த தானம் செய்யலாம்
மேலும் நாய் கடித்த ஊசி போட்டுக் கொண்டிருந்தால் ஒரு வருடத்திற்கு ரத்ததானம் செய்யக்கூடாது மேலும் மருத்துவரிடம் ரத்ததானம் செய்வதைப் பற்றி ஆலோசித்துக் கொள்ளலாம்
சமீப காலத்தில் பச்சை குத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது
மேலும் ,அவ்வாறு பச்சை குத்தி அவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு ரத்த தானம் செய்ய முன்வரலாம்.
ரத்த தானம் அளித்த பின்
சத்துள்ள உணவுப் பொருள் உட்கொள்ள வேண்டும்
24 மணி நேரம் வரையிலும் மது உட்கொள்ளுதல் கூடாது மற்றும் ஒரு மணி நேரத்திற்கு புகைபிடிக்கக் கூடாது
கடினமான பொருட்களை தூக்குதல் அல்லது கடினமான பணிகளை தவிர்க்க வேண்டும்
ரத்த தானம் அளித்த பிறகு ரத்தக்கசிவு தொடர்ந்தால் கையை உயர்த்தி ரத்தம் எடுக்கப்பட்ட இடத்தில் அழுத்தி பிடிக்கவும்
தலைச்சுற்றல் மயக்கம் வருவது போல் இருந்தால் மறவாமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்