ஜோக்-01
ஒருத்தனுக்கு சரியான காய்ச்சலாம் ஹாஸ்பிடலுக்கு போனானாம்.டாக்டர் ஊசி போட்டாராம்
ஆனாலும் காய்ச்சல் குணமாகல. மறுநாளும் ஹாஸ்பிடலுக்கு போனானாம் டாக்டர் மறுபடியும் ஊசி போட்டாராம் ஆனாலும் காய்ச்சல் காய்ச்சல் சரியாகலையாம்
ஏன்??????
ஏன்னா டாக்டர் போட்டது குண்டூசியாம்.
ஜோக்-02
ஒரு அம்மா அவங்க பொண்ண கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு ஊசி போட போனாங்களாம்.
அப்போது டாக்டர் ஊசி குத்த வந்தார்.ஆனா அவங்க அம்மா தடுத்தார்களாம்.மறுபடியும் நர்ஸ் ஊசி குத்த வந்தார்களாம். ஆனால் அப்பயும் அவங்க அம்மா தடுத்தார்ளாம்.
ஏன் ???????
ஏன்னா அது தடுப்பூசியாம்.அதான் தடுத்துகிட்டே இருந்தாங்களாம்.
ஜோக்-03
ஒருத்தன் டாக்டர் கொடுத்த மாத்திரையை எடுத்துக்கிட்டு சுடுகாட்டுக்கு போனானாம்.
ஏன் ???????
ஏன்னா டாக்டர் அந்த மாத்திரையை வைத்து ஆவி பிடிக்க சொன்னாராம்.
ஜோக்-04`
ஒருத்தன் டாக்டர் கொடுத்த மருந்தை வாங்கிட்டு கதவை சாத்திட்டு சாப்பிட்டானாம்.
ஏன் ??????
ஏன்னா டாக்டர் அரை(ற) மூடி மருந்து குடிக்க சொன்னாராம்.அதான் கதவை மூடிக்கிட்டு மருந்து சாப்பிட்டானாம்.
ஜோக்-05
நோயாளி: டாக்டர் டாக்டர் என்ன இது சுகர் மாத்திரைன்னு சொன்னியே???
டாக்டர்: ஆமாம் அதுக்கென்ன இப்போ???
நோயாளி: அப்பறம் ஏன் டாக்டர் இந்த மாத்திரையை கசக்குது????.