பேய் கண்ணாடி | Tamil horror Stories

ரமேஷ் ஒரு 25 வயது வாலிபன்.சென்னையிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் நிறுவனராக வேலை செய்து வருகிறான்.மேலும் ஒரு விடுதியில் தங்கிக்கொண்டு தன் கம்பெனிக்கு தினமும் சென்று வந்து கொண்டிருந்தான்.

இன்று ரமேஷ் ஒரு மிகப்பெரிய பர்னிச்சர் கடையில் ட்ரெஸ்ஸிங் டேபிள் விலையை கேட்டுக்கொண்டிருந்தான்.

எவ்வளவு சார்???

5500 ரூபாய்.

அடேங்கப்பா என்ன விலை சொல்றீங்க ஒரு சாதாரண கண்ணாடி டேபிள் இவ்வளவு விலையா??.

சென்னையில விலைவாசி கூட இருக்குன்னு கேள்விப்பட்டேன் ஆனா இப்பதான் பார்க்கிறேன்.

இத பாருங்க சார் கண்ணாடி பலகை எல்லாம் நல்ல தரமான பலகை.

நீங்க வேணா 10 கடைகளை ஏறி இறங்குங்கள் கடைசில எங்க கடைக்கு தான் வருவீங்க என அந்த கடையில் வேலை பார்ப்பவன் கூறினான்.

சரி சரி நாம வாங்கற 18000 சம்பளம். இதுல எவ்வளவு பெரிய கண்ணாடி வாங்கினா அது நமக்கு தான் வேஸ்ட் என புலம்பிக்கொண்டே கடையை விட்டு வெளியே வந்தான்.

கடையை விட்டு வெளியே வந்தவுடன் அவன் செல்போன் அலறியது. அவன் அம்மாதான் அழைத்திருந்தாள்.

சொல்லுங்க என்ன விஷயம் அம்மா.

ஐய்யா இப்ப எங்கயா இருக்க விடுதியிலேயே இருக்க???.

இல்லம்மா ஒரு கண்ணாடி டேபிள் வாங்கலாம்னு கடைக்கு வந்தேன் சொல்லுங்க என்ன விஷயம் என கேட்டான்.

ஒன்னும் இல்லை சும்மாதான் போன் அடிச்சேன்.

ஐயா ராசா உனக்காக கொஞ்சம் காசு சேர்த்து வைச்சிருந்தா நீ சென்னையில தங்கும் விடுதிக்கு பீரோ கட்டிலாவது வாங்கி தந்திருக்கலாம்.

என்னத்த செய்ய உங்க அப்பன் குடிச்சே காசையெல்லாம் கறியாக்கிட்டான் என அவன் தாயார் புலம்பினாள்.

விடுங்கம்மா அதான் செல்பு இருக்குல்ல அதுல துணியை எடுத்து வச்சுப்பேன்.

பாய் இருக்குல்ல அதுல தூங்கிப்பேன்.என்ன முகம் பார்க்கும் கண்ணாடி தான் இல்லை அதை வாங்கலாம் என்று பார்த்தால் 5500 ரூபாய் சொல்றான். என்ன செய்யன்னு தெரியலை போங்க என தன் தாயிடம் புலம்பினான் ரமேஷ்.

சரி பிறகு கூப்பிடுகிறேன் என போனை வைத்து விட்டு தன் பைக்கை எடுத்தான்.பின்னர் தன் விடுதியை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.வீட்டுக்கு வந்தவுடன் தான் இருக்கும் மூன்றாவது மாடிக்கு சென்று கதவை திறந்து உள்ளே வந்தான். ஒரு பாய் ஒரு செல்பு அதில் அடுக்கடுக்கான துணிகள் இதுதான் அவன் தங்கியிருக்கும் விடுதியில் அறை.

என்ன கொடுமை இது கிராமத்தில் சுதந்திரமாக சுற்றி வந்தோம். ஆனால் இங்கே இந்த நகரத்தில் இருந்து கஷ்டப்பட வேண்டும் என்பதுதான் நம் தலையெழுத்து போல என புலம்பிக் கொண்டே உள்ளே நுழைந்தான் ரமேஷ்.

உள்ளே நுழைந்தவுடன் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. என்னடா இது இப்பதான் நம்ம வந்தோம் அதுக்குள்ள யாரு என கதவை திறந்து வெளியே பார்த்தான்.

ஒரு 15 வயசு மதிக்கத்தக்க ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான்.அவன் கையில் சோப்பு ஷாம்பு மற்றும் பாத்திரம் கழுவும் நாறு மற்றும் சில பாத்திரங்கள் பல் விளக்கும் பிரஸ் முதலியவற்றை வைத்திருந்தான்.

சோப்பு சாம்பு ஏதாச்சும் வேணுமா சார்???என கேட்டான்.

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் போ போ என அதட்டினான் ரமேஷ்.

அவன் செல்ல முற்பட்டபோது நில்லுப்பா.

என்ன சார் சொல்லுங்க

நீ முகம் பார்க்கும் கண்ணாடி எதுவும் வச்சிருக்கியா???என கேட்டான் ரமேஷ்.

கண்ணாடி அவச்சிருக்கியா என கேட்டவுடன் அந்த சிறுவன் சற்று பயந்தான்.

இருப்பினும் பயத்தினை சுதாரித்துக்கொண்டு இருக்கு சார் நீங்க இங்கேயே இருங்க நான் கீழே போய் எடுத்துட்டு வரேன் என சொல்லிக்கொண்டு படிக்கட்டின் வழியாக கீழே இறங்கி ஓடினான்.

இவன் எவ்வளவு சொல்ல போறான் விட்டா ஒரு கண்ணாடி 50 ஆயிரம்னு சொல்லுவானுங்க இந்த ஊர்ல.

சே சே என்ன ஊருடா இது என புலம்பிக்கொண்டே காத்திருந்தான் ரமேஷ்.

அந்த சிறுவன் ஒரு ஒரு சராசரி முகம்பார்க்கும் கண்ணாடியை தூக்கி கொண்டு வந்தான்.

என்னய்யா என்ன விலை இது என ஆர்வத்துடன் கேட்டான் ரமேஷ்.

50 ரூபாய் சார் என கூறினான்.

அடேங்கப்பா என்ன கம்மிவிலை சொல்ற.உங்க ஊர்ல எல்லாரும் 50 ஆயிரம் 60 ஆயிரம் சொல்லுறானுங்க நீ அம்பது ரூபா ன்னு சொல்றே.

இது பழைய கண்ணாடி சார் அதான் இந்த விலை என அந்த சிறுவன் கூறினான்.

ரொம்ப சந்தோஷம் என தன் கையில் இருந்த 50 ரூபாய் அந்த சிறுவனிடம் நீட்டினான் ரமேஷ்.

ரொம்ப தேங்க்ஸ் சார் என பணத்தை பெற்றுக்கொண்டு ஓட்டமாய் ஓடினான் அச்சிறுவன்.

என்ன ஏதோ பேயைப் பார்த்த மாதிரி இந்த ஓட்டம் ஓடுறான். சரி போகட்டும் வீட்டுல கண்ணாடியை முதல்ல மாட்டுவோம் என தன் அறையில் ஆணி அடித்து வைத்திருந்த சுவற்றின் மேலே அந்த முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டினான்.

நல்லா தான் இருக்கு இன்னும் ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு கல்யாணம் முடித்து விட வேண்டியதுதான் என தன் தலை முடியை வாரிக்கொண்டே கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து தன்னையே ரசித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் காலை விடிந்தது வழக்கமாக குளித்துவிட்டு ஈர துண்டுடன் அவசரஅவசரமாக வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தான்.

அப்போது கண்ணாடி முன் நின்றவன் தன் அழகை சற்று ரசித்துக்கொண்டிருந்தான்.அப்போது அந்தக் கண்ணாடியில் ஓரத்தில் ஒரு சிகப்பு ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி இருந்தது.

என்ன இது பொட்டு ஒட்டி இருக்குது.ஒருவேளை வாங்கும்போதே இருந்திருக்குமோ.

ஆமாம் அப்படித்தான் இருக்கும் பின்ன இந்த பேச்சிலர் ரூமுக்குள்ள யார் பொட்டு வச்சிருப்பா என சிரித்துக்கொண்டே வேலைக்குச் சென்றான்.

மறுநாளும் குளித்துமுடித்து ஈரத்துடன் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்தான்.

அப்போது ரமேஷ் அதிர்ந்தான்.

ஒரு பொட்டு இருந்த இடத்தின் அருகே இன்னொரு பொட்டும் இருந்தது. ஆக மொத்தம் இரண்டு பொட்டுகள் அந்த கண்ணாடியில் இருந்தது.

அதை பார்த்து திடுக்கிட்ட ரமேஷ் என்ன இது நேத்து ஒரு பொட்டுத் தான பார்த்தோம்.

இன்னிக்கு ரெண்டு பொட்டு இருக்குது. கதவை பூட்டி விட்டு சாவியை கொண்டு தானே போனோம்.பிறகு யாரும் நம்ம ரூமுக்குள்ள வர வாய்ப்பு இல்லையே.அப்புறம் எப்படி இரண்டு பொட்டு இருக்குது என பயந்தான் ரமேஷ்.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு பொட்டு அந்த கண்ணாடியில் வந்து கொண்டே இருந்தது.

ஆனாலும் ரமேஷ் அப்பொட்டுகளை எதுவுமே எடுக்காமல் வைத்திருந்தான்.

அன்று ஒரு நாள் மதியம் வெயில் தாங்க முடியாமல் ஒரு ஜூஸ் கடைக்கு சென்றான்.தர்பூசணி ஜூஸ் அருந்தி கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்.அப்போது அந்தக் கடைக்கு தண்ணீர் கேனை தூக்கிக்கொண்டு ஒரு சிறுவன் வந்தான்.

டேய் டேய் சீக்கிரம் தண்ணீர் கேன் போடு என அதட்டினான் முதலாளி . திரும்பி பார்த்தா சிறுவன். ரமேஷை பார்த்து திகைத்தான்.

ஏய் நீ தான அந்த முகம் பார்க்கும் கண்ணாடியை என்கிட்ட கொடுத்த உண்மையைச் சொல்லு என அதட்டினான் ரமேஷ்.

ஆமா சார் நான் தான் கண்ணாடி கொடுத்தேன்.

என்ன கண்ணாடி அது தினமும் ஒவ்வொரு பொட்டு வருது. இதற்கிடையில் அந்த ரூம்ல நான் ஒரு ஆள் மட்டும் தான் இருக்கேன். பிறகு எப்படி கண்ணாடியில் பொட்டு வருது.

நீதான இந்த கண்ணாடியை என்கிட்ட வித்த ஒழுங்கா உண்மையை சொல்லு என கோபப்பட்டு ரமேஷ் கேட்க

சார் அந்த கண்ணாடி சாதா கண்ணாடி இல்ல.

டேய் பிறகு என்ன கண்ணாடி அது ஒழுங்கா தெளிவா பதில் சொல்லு.

சார் அந்த கண்ணாடி நீங்க தங்குற அதே விடுதியில் முதல் மாடியில் ஒரு பொம்பளை இருந்தாங்க.

அவங்க வீட்டுல தான் இந்த கண்ணாடி இருந்துச்சு.

அப்படியா இப்ப அவங்க எங்க என ரமேஷ் கேட்டான்.

அந்த பொம்பள இப்போ உயிரோட இல்ல. தினமும் ஒரு சிகப்பு பொட்டு வைத்து விட்டு தான் வேலைக்கு போவாங்க.அனேகமா நீங்க பார்த்தது அந்த பொம்பள அவங்களோட பொட்டு தான் என ஒரு மாபெரும் குண்டைத் தூக்கிப் போட்டான் அச்சிறுவன்.

அதைக்கேட்ட ரமேஷ் அலறினான்.

ஏலே உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா செத்துப் போன ஒரு பொம்பளை வீட்டுல இருக்கிற கண்ணாடியை போய் என்கிட்ட தூக்கிக் கொண்டு இருப்ப என அவன் சட்டையைப் பிடிக்க

சுற்றுமுற்றும் இருந்த அனைவரும் ராமேஷை சிறுவனிடம் இருந்து விலக்கி வைத்தனர்.

சார் இதுக்கே இப்படி பயப்படுறீங்களே அந்த கண்ணாடியில 13 கூட்டு வந்துருச்சுன்னா அந்த மாயம்மா பொம்பளையே அந்த கண்ணாடியில் தெரியும். அதைக் கேட்ட ரமேஷ் திடுக்கிட்டு பயந்தான்.

உடனடியாக பைக்கை எடுத்து விட்டு தான் தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்றான்.கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தான்.

கதவை திறந்து உள்ளே சென்று அவசர அவசரமாக போய் கண்ணாடியில் அங்கிருக்கும் பொட்டுகளை எண்ணினான்.

சரியாக 13 பொட்டு இருந்தது. அதை பார்த்த ரமேஷ் பயத்தில் அலறினான்.

அதற்குள் திறந்திருந்த கதவு சடாரென சத்தத்துடன் சாத்தியது.

ரமேஷ் வேகமாக சென்று கதவை தள்ளி பார்த்தான்.ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

அப்போது மெல்ல நகர்ந்து வந்து அந்த கண்ணாடியை பார்த்தான்.அந்த கண்ணாடியில் ஒரு சிகப்பு நிற புடவை அணிந்து நெற்றியில் சிகப்பு பொட்டு அணிந்த ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஏய் இது என் வீடு என் கண்ணாடி இங்க என்ன பண்ற என்ன அதட்டும் குரலில் கேட்டது.

என்ன விட்டுருங்க… என்னை காப்பாதுங்க என கதவை தட்டினான் .

அந்த அறையினுள் ஒரு நிலநடுக்கம் போல் வந்தது. அவன் செல்பில் அடிக்கி வைத்திருந்த துணிமணிகள் எல்லாம் கலைந்து கீழே விழுந்தன.

ரமேஷ் பயந்தான்.உடனடியாக சுவற்றில் மாட்டி இருந்த அந்த கண்ணாடியை தூக்கிப் போட்டு தரையில் உடைத்தான். அந்த கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது.

பின்னர் ஒரு விலக்குமாறு மூலம் உடைந்த கண்ணாடி துண்டுகளை கூட்டி அள்ளினான்.

கதவை இழுத்துப் பார்த்தான்.இம்முறை கதவு திறந்தது. வெளியே சென்று அந்தக் கண்ணாடியை ஊரின் அருகில் இருந்த காட்டினுள் சென்று புதைத்தான்.

பின்பு அதன் மேல் குப்பைகளை எல்லாம் ஒன்று சேர்த்து அந்த குப்பைகளுக்கு தீ மூட்டினான்.

அது எரிந்து சாம்பலாகி கொண்டிருந்தது.

அப்போது அந்த சாம்பலில் இருந்து ஒரு பொட்டு மட்டும் பறந்து சென்றது. அந்த பொட்டினை பின்தொடர்ந்து சென்றான். அந்த பொட்டு பறந்து வானத்திற்கு சென்றது. அதையே ரமேஷ் உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.

இனி நமக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என உறுதி படுத்திக் கொண்டு அந்த பிரபல நாற்காலி கடைக்கு போன் அடித்தான்.

அன்னைக்கு பார்த்து விட்டு வந்தேனே அதான் அந்த 5500 கண்ணாடி அந்த கண்ணாடியை கொடுத்து விடுங்கள் என கூறினான்.

சார் விலை ரொம்ப அதிகமா இருக்கு பரவால்லயா?? என வியாபாரி கேட்டான்.இந்த பேய் கண்ணாடிக்கு அந்த கண்ணாடியே பரவால்ல. சீக்கிரம் கண்ணாடியை வீட்டில் இறக்கி விடு என்று கூறி நிம்மதியுடன் போனை வைத்தான் ரமேஷ்.

முற்றும்…

மேலும் பேய் கதைகளை படிக்க.

சிந்தித்து சிரிப்பதற்கு தமிழ் மொக்கை ஜோக்ஸ் படிக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *