சுடுகாட்டில் மனைவி | Tamil ghost stories

மாதவன் மாதவி இருவரும் கல்யாணம் ஆன புதிய தம்பதியினர். மாதவன் கோயமுத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறான்.

திருமணமானதும் மாதவியை கூட்டிக்கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றான்.

மாதவன் கோயம்புத்தூரில் உள்ள காந்திபுரத்தில் தனியார் நிறுவனத்தில் மாதம் இருபதாயிரம் ரூபாய்க்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தான்.

தினமும் தொண்டாமுத்தூரில் இருந்து காந்திபுரத்திற்கு வேலைக்கு செல்வதும் மறுபடியும் வீட்டிற்கு வருவதும் இப்படியே அவன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது .

என்னங்க காலையில போயிட்டு ராத்திரிதான் வரீங்க அதுவரைக்கும் வீட்டுல தனியா இருக்கறது ரொம்ப பயமா இருக்குங்க. போர் அடிக்குது.

சரி அதுக்கு இப்ப என்ன செய்ய????

என்னை சினிமா தியேட்டருக்கு படத்துக்கு கூட்டிட்டு போங்க.

சரி சரி நாளைக்கு சனிக்கிழமை குளிச்சிட்டு ரெடியா இரு நான் ஆபீஸ்ல இருந்து நேரமா வந்தர்றேன் என மனைவியை சமாதானப்படுத்தினான்.

ஆபிசுக்கு புறப்பட்டான்.

அடுத்த நாள் சனிக்கிழமை ஆபீஸில் அனுமதி வாங்கிக்கொண்டு ஆறு மணிக்கே புறப்பட்டான்.

ஆபீசை விட்டு வெளியே வந்தவன் செல்போன் அலறியது. அவள் மனைவிதான் அழைத்திருந்தாள்.

ஏய் ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டேன். ரெடியா இரு என்று அதட்டினான்.

என்னங்க நீங்க வீட்டுக்கு வரவேண்டாம். நான் வழியில் பஸ் ஸ்டாப்ல இருக்கேன். உங்க ஆபீஸ் பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்பில் தான் இருக்கேன் வாங்க நாம ஒட்டுக்கா கிளம்பிடுவோம் என்றாள்.

பரவாயில்லையே ஆபீஸ் கிட்டயே வந்துட்டியா. ரொம்ப சந்தோஷம். சரி அங்கேயே இரு நான் வந்து கூப்பிட்டு போறேன் என பைக்கை எடுத்து ஆபீஸ் அருகே உள்ள ஒரு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தடைந்தான்.

சுற்றுமுற்றும் பார்த்தான்.என்ன யாரும் இல்லை என சுற்றுமுற்றும் தன் மனைவியை தேடிப் பார்த்தான்.

என்னங்க இங்க பாருங்க என பின்னால் இருந்து குரல் கேட்டது. திரும்பி பார்த்தபோது அவள் மனைவி புது புடவையுடன் மேக்கப் போட்டுக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள்.

ஏய் என்னடி நல்ல ரெடியாகி பயங்கரமா வந்திருக்க.

ஆமாங்க.

சரி போலாமா என்றாள்.

சரி வா வா வண்டியில் ஏறு என்று அவளை ஏற்றிக்கொண்டு ஒரு பெரிய வசதியுடைய தியேட்டருக்கு சென்றான்.உள்ளே சென்றபோது அங்கு விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள G. O. A. T படம் ஓடியது.

இடைவேளையின் போது இருவரும் பாப்கான் உண்டனர். படமும் முடிந்தது.

பின்னர் தியேட்டரைவிட்டு வெளியே வந்தனர். செல்போனில் மணியை பார்த்தான் மாதவன் அட அதுக்குள்ள ஒன்பதரை ஆயிருச்சா. சரியா போச்சு போ வீட்டுக்கு போறதுக்கு பத்து மணி ஆயிடும்.

என்னங்க நம்ம வீட்டில மாவு இருக்குது. நாம இட்லி சுட்டு சாப்பிட்டுபோம். இப்பதானே பாப்கான் சாப்பிட்டு இருக்கோம்.அதிகமாக சாப்பிட முடியாது என அவள் மனைவி அறிவுரை கூறினாள் .

ஆமாம் ஆமாம் இட்லி சாப்பிட்டு தூங்க வேண்டியது தான்.நாளைக்கு லீவு நாளைக்கு வேணா கறி குழம்பு வைத்து சாப்பிடலாம் என வண்டி எடுத்தான் மாதவன்.

சரி சரி லேட் ஆகிட்டு வண்டியில ஏறு சீக்கிரம் என அவன் மனைவியை அதட்டினான் மாதவன். அவளும் வண்டியில் ஏற இருவரும் புறப்பட்டு சென்றனர். அப்போது அவர் மனைவி என்னங்க நேர் வழியா போகாதீங்க, இது ரொம்ப தூரம் என் பிரண்டு ஒரு ஷார்ட் கட் சொன்னாள்.

ஷார்ட்கட்டா ஏண்டி இவ்வளவு வருஷமா வேலைக்கு போயிட்டு வரேன் எனக்குத் தெரியாத ஷார்ட்கட்டா உன் பிரண்டுக்கு தெரியும்.சரி எப்படி போகணும் சொல்லு பாப்போம் எனக் கேட்டான் மதவன்.

அதோ அந்த காடு தெரியுதுல அந்த காட்டு வழியாக போங்க என்றாள்.

காட்டு வழியாவா ரத்திலேயே வெளிச்சமே இல்லாத அந்தக் காட்டுப் பகுதிக்கு எப்படி இந்த நேரத்தில போறது என அவன் கேள்வி கேட்க அதற்கு அவர் மனைவி என்னங்க நான் இந்த வழியாக வந்தேன் நான் சொல்றதைக் கேளுங்க அந்த வழியே போங்க சீக்கிரமா வீட்டுக்கு போயிடலாம் என்றான் அவன் மனைவி.

ஏய் முட்டுச்சந்து மட்டும் இருந்துச்சுன்னு வச்சுக்க உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது எனக் கோபத்தோடு மாதவி சொன்ன வழியில் பைக்கை விட்டான் மாதவன்.

அது ஒரு காட்டுப் பகுதி ஆள் இல்லாமல் நிசப்தமாக இருந்தது. போங்க போங்க இந்த வழி தான் எனக்கு நல்லா தெரியும் என்றாள்.

சரி சரி உன் பேச்சைக் கேட்டு போறேன் முட்டுச்சந்து இல்லாம இருந்தா சரி என சலித்துக் கொண்டே வண்டியை செலுத்தினான் மாதவன்.

பைக்கை ஓட்டிச் சென்ற மாதவன் நடுக்காட்டை வந்தடைந்தான். இருளும் அதிகமாக சூழ்ந்துகொண்டது. ஒருகட்டத்தில் பைக் திடீரென்று ஆப் ஆனது.

அடச்சே என்ன ஆச்சு வண்டிக்கு வர்றப்போ பெட்ரோல் அடிச்சுட்டு தானே வந்தேன் என பைக்கை குலுக்கி பார்த்தான். பெட்ரோல் நன்றாகத்தான் இருந்தது. சரி உன் பேச்சைக் கேட்டு வந்து இப்படி மாட்டிகிட்டேன் என மாதவியை திட்டினான்.

ஆனால் எதிர்முனையில் எந்த பதிலும் வரவில்லை.ஏய் உன்ன தாண்டி திட்டிட்டு இருக்கேன்.உன் பேச்சைக் கேட்டு தான் இந்த காட்டுக்குள்ள வந்தோம்.இந்தாடி பதில் சொல்லு என மீண்டும் கேட்டான்.

கோபத்தோடு கேட்டு பார்த்தான்.ஆனாலும் பதில் வரவில்லை. ஏய் ஒரு மனுஷன் இவ்வளவு திட்டு திட்டுறான் கொஞ்சம் ஆச்சு பதில் சொல்றாலா பாரு என படக்கென்று மாதவன் திரும்பிப் பார்க்க அங்கே அவன் மனைவி இல்லை மாதவன் நெஞ்சில் இடி இடித்தால் போல் அதிர்ச்சி .

மாதவி மதவி மாதவி என மெல்ல கூப்பிட்டான். ஏய் எங்கடி போன என்ன பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்தான்.

அங்கே யாருமில்லை. அந்த நடுகாட்டில் இருட்டினில் சில பூச்சிகள் சத்தம் கேட்டது. எந்த சத்தமும் இல்லாத காட்டில் பூச்சிகளின் ஓசை மாதவனை அதிகமாக பயமுறுத்தியது.

சரி அவளுக்கு போன் போட்டு பாப்போம் என போனை எடுத்து தன் மனைவிக்கு அழைத்தான். போன் சத்தம் பக்கத்தில் எங்கோ கேட்டது. அடியே இங்க தான் ஒளிஞ்சிருந்து என்ன பயமுறுத்தலான்னு பிளான் பண்ணி வந்திருக்கியா.

இரு வாரேன் என கோபத்தோடு பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு போன் அடிக்கும் சத்தத்தின் திசையை நோக்கி சென்றான். அங்கே தான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இடம் ஒரு சுடுகாடு. அதைப் பார்த்த மாதவன் பயத்தில் செய்வதறியாது தவித்தான்.ஏய் என்னை பயப்பட வைக்க இந்த இடத்துக்கு கூட்டு வந்து இருந்தியனா நான் பயந்துட்டேன் ஒத்துக்குறேன் தயவு செஞ்சு எங்க இருந்தாலும் இருந்தாலும் வெளியே வா என மிரட்டினான் மாதவன்.

ஆனாலும் அந்தப் பூச்சிகளின் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் அவன் காதில் செவி படவில்லை .

இவள நடுக்காட்டில் விட்டுட்டு போக முடியாது என்ன பண்றது என முழித்துக் கொண்டிருந்தான் மாதவன்.

சரி அந்த கழுதைக்கு மறுபடியும் போன் அடிப்போம் என செல்போனை எடுத்து மறுபடியும் மாதவியை அழைத்தான். மீண்டும் செல்போன் சத்தம் கேட்டது. இம்முறை மிகுந்த கோபத்தோடு வேகமாக செல்போன் ஒலிக்கும் திசையை நோக்கிச் சென்றான்.

அங்கே ஒரு கல்லறையின் மேலே அந்த செல்போன் இருந்தது. அருகில் சென்று பார்த்தான்.அந்த செல்போனை எடுத்தான்.லேசாக அந்த கல்லறையை நோட்டமிட்ட அவன் அங்கே இருந்த பெயரை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனோன்.

அங்கே பெயர் மாதவி இறப்பு என்று அந்த நாள் தேதி போட்டிருந்தது. அதைப் பார்த்த மாதவன் பயத்தில் அலறினான்.

விளையாட்டு எல்லை மாதிரி போகுதடி தயவுசெய்து இந்த மாதிரி பண்ணாத எங்க இருந்தாலும் வெளிய வா என கோபத்தோடு கத்தினான்.

திடீரென்று பூச்சிகள் சத்தம் நிறைந்த அந்தக் காட்டில் சிரிப்பொலி சத்தம் கேட்டது.பெருமூச்சு விட்ட மாதவன் இது மாதவி குரல் இல்லையே. இது யாரு நீங்க என பயத்துடன் கேட்டான் ஆனால் மீண்டும் அந்த சிரிப்பொலி சத்தம் கேட்க மாதவன் அந்த செல்போனை எடுத்துக்கொண்டு வேகமாக பைக்கை நோக்கி சென்றான். பைக்கை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தான்.

ஆனால் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. திடீரென்று ஒரு சலங்கை சத்தம் தன்னை நோக்கி பின்புறமாக வந்து கொண்டிருப்பதை உணர்ந்தான்.திடீரென்று பைக் ஸ்டார்ட் ஆனது.

சலங்கை சத்தம் அவனை பின்னே துரத்திக் கொண்டு சென்றது.வேகமாக வண்டியை முறுக்கினான் மாதவன்.

வண்டி வேகம் கூடினாலும் சலங்கை சத்தம் வேகம் வேகமாக கேட்க அழுத்தித் கண்ணை மூடிக்கொண்டு வண்டியைச் செலுத்தி அவன் மெயின்ரோட்டை வந்து அடைந்தான்.

பின்னர் வேகமாக வண்டியை செலுத்திக் கொண்டு சென்றான். ஆனாலும் அந்த சலங்கை சத்தம் அவனை பின்தொடர்ந்து கேட்க பயத்தில் இன்னும் வேகமாக வண்டியைச் செலுத்தினான்.

அப்போது எதிரே ஒரு லாரி வந்தது.அசுர வேகத்தில் சென்றதால் மாதவன் அந்த லாரியின் மீது மோதினான்.வேகத்தில் சென்றதால் மாதவன் தூக்கி வீசப்பட்டான்.

அங்கே சாலையோரம் இருந்த ஒரு கல்லின் அவன் முதுகு மோதியது. ரத்தம் வர பயத்தில் கை கால்கள் உதறியது. அப்போது தன்னை மெல்ல திறந்து பார்க்க ஒரு வெள்ளை உருவம் மல்லிகை பூ அணிந்து அவனை நோக்கி சிரித்துக் கொண்டே வந்தது.

மாதவன் பயத்தில் அலற வலியின் காரணமாக தலைசுற்றி மயங்கி விழுந்து கிடந்தான்.பின்னர் கண்ணை திறந்த போது அவன் மனைவி பக்கத்தில் இருந்தாள்.

என்னங்க என்ன ஆச்சுங்க முழிச்சிட்டீங்களா என அவன் மனைவி மாதவி கேட்க.

நீ எப்படி உசுரோடு வந்த என மாதவன் பயத்தில் கேட்டான்.

சரியாப்போச்சு போங்க நீங்க எப்படி உசுரோட வந்தீங்கன்னு நான் கேட்கணும் நீங்க என்ன பார்த்து கேட்கறீங்களா என நகைத்துக் கொண்டாள் மாதவி.

ஏய் நீ என்கூட சினிமா தியேட்டருக்கு வந்து காட்டுக்குள்ள கூட்டிட்டு போனியே மறந்துட்டியா என மாதவன் அதட்டி கேட்டான்.

என்னங்க நான் எப்ப உங்க கூட சினிமா தியேட்டருக்கு வந்தேன். நீங்க தான் வரேன் வரேன்னு சொன்னிங்க. நானும் ரெடியாகி சேலையெல்லாம் மாட்டிட்டு காத்து கெடக்குறேன் ஆளையே காணோம்.

சரின்னு போன் பண்ணி பார்த்தா பிஸி பிஸி னு வந்துச்சு. அப்புறம் தான் பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க நீங்க ஹாஸ்பிட்டல் அடிபட்டுக் கிடக்கிறான் என உடனே அலரி போயிட்டு ஓட்டமா ஓடி வந்து இருக்கேன் என அவன் மனைவி மாதவி நடந்த எல்லாவற்றையும் கூறினாள்.

அப்ப என்கூட படத்துக்கு வந்தது யாரு.என்ன அந்த காட்டுக்குள்ள கூட்டு போனது யாரு என பயந்தான். என்னங்க நீங்க உயிர் பிழைத்ததே தெய்வச் செயல். அதனால இனிமே நீங்க படத்துக்கு என்ன என்னை எங்கேயுமே கூட்டு போக வேணாம் பார்த்து பத்திரமா ராத்திரிக்கு வீடு வந்து சேருங்க எனக்கு அதுவே போதும் என அவன் மனைவி மாதவி கண்ணீர் விட்டு அழுதாள்.

இருப்பினும் மாதவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.தன் மனைவி பெயர் அந்த கல்லறை இருந்ததைப் பார்த்த ஞாபகம் வந்தது. பின்னர் ஒரு வாரத்திற்கு பின்பு மாதவன் டிஸ்சார்ஜ் ஆக நடுப்பகலில் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அந்த சுடுகாட்டிற்கு வந்தான்.

அந்த கல்லறை இருந்த இடத்தை நோக்கி சென்றான்.அவன் அன்று பார்த்த கல்லறையை நோக்கி தன் மனைவியை கூட்டி கொண்டு நடந்தான்.

அந்தக் கல்லறையில் பூஜா என பெயர் போட்டு இருந்தது.பூஜாவா என ஒரு கணம் அதிர்ச்சி அடைந்த அவன் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

என்னங்க என்னாச்சுங்க யாருங்க இது என அவன் மனைவ அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினாள்.

நான் கல்லூரி படித்த காலத்தில் பூஜா என் முன்னாள் காதலி என கண்களில் நீர் வழிய பதில் கூறினான் மாதவன். இருவரும் அங்கே ஒரு பத்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.

அவர்கள் கல்லூரியில் காதலித்த போது பூஜா அடிக்கடி மாதவனை தியேட்டருக்கு போகலாம் என கூறுவாள். ஆனால் அதற்கு மாதவன் ஒருபோதும் செவிசாய்க்கவில்லை.

அதனால்தான் ஆவியாய் மாறினாலும் ஒரு முறையாவது சினிமா தியேட்டருக்கு செல்ல வேண்டும் என நினைத்திருப்பாள் போல.. என்று கண்களில் கண்ணீரோடு மாதவன் புறப்பட்டான்.

முற்றும்.

மேலும் பேய் கதைகளை படிக்க.

சிந்தித்து சிரிப்பதற்கு தமிழ் மொக்க ஜோக்ஸ் படிக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *