ஜோக்-01
ஒரு பூனை முன்னாடி இரண்டு தட்டு இருந்துச்சாம். ஒரு தட்டுல பால் இருந்துச்சாம்,இன்னொரு தட்டுல மீன் இருந்துச்சாம்.
இப்போது பூனைக்கு எது மேல கண் இருக்கும்????
எல்லா பூனைகளுக்கும் மூக்கு மேலதான் கண்ணிருக்கும்.

ஜோக்-02
ஒருத்தன் சோபால உக்காந்துகிட்டு இருந்தானாம். அப்போது பின்னாடி இருந்து பேய் கத்தி பயமுறுத்திசாம். ஆனாலும் அவன் பயப்படாம அங்கேயே உக்காந்திட்டு இருந்தானாம்.
ஏன் ????
ஏன்னா அவனுக்கு காது கேட்காதாம்.

ஜோக்-03
இட்லியில் இருந்து ஆவி வருது
ஏன் ?????
ஏன்னா இட்லி செத்துப்போச்சு.
ஜோக்-04
ஒருவன் பிரியாணி சமைக்க தேவையான பொருட்களை வாங்க தெருவில் இருக்கும் மளிகை கடைக்கு ஓடிப் போனானாம்.
20 நிமிடம் ஓடிய பிறகு கடை முன்னே நின்றான்.
அவன் முதலில் என்ன வாங்கி இருப்பான்.
மூச்சு வாங்கி இருப்பான்.
ஜோக்-05
ஒருத்தன் காட்டுக்குள்ள போய் ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து கடவுளிடம் வரம் கேட்டு கடும் தவம் புரிந்தானாம்
பின்னர் கடவுளும் அவன் முன் தோன்றி ஒரு வரத்தை கொடுத்தாராம்.
அதனை வாங்கி கொன்டு அவன் நேரே கல்யாண வீட்டிற்கு போனானாம்
ஏன் ??????
ஏன்னா அவர் கொடுத்தது நாதஸ்வரமாம்.