Monsoon health tips |பருவமழை போது செய்ய வேண்டியவை

நாம் இந்த பருவமழை காலத்தின் போது பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்து கொண்டிருக்கிறோம்

மேலும் இந்த மழை நீர் நாம் வீட்டிற்குள்  புகுவது நமக்கு மேலும் சிரமத்தை உண்டாக்குகிறது

இத்தகைய சூழலை சமாளிக்க உதவும் 8 முக்கிய குறிப்புகளை
வாருங்கள் காண்போம்


மின்சாரம்

மழை நீர் நம் வீட்டிற்குள் புகும் பட்சத்தில் முதலில் நம் வீட்டில் உள்ள மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

மேலும் மின்சார சாதனங்கள் உதாரணத்திற்கு தொலைக்காட்சி
குளிர் சாதன பொருட்கள் மின்சார அடுப்பு முதலியவற்ற அப்புறப்படுத்த வேண்டும்.

செல்லப்பிராணிகள்

இரண்டாவதாக நமது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள், நாய் பூனை முதலியவற்றை பாதுகாப்பான இடத்திற்குஇடம்மாற்ற வேண்டும்.

ஏனெனில் மனிதர்களை காப்பாற்றுவது மட்டும் மனிதநேயம் கிடையாது. இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆபத்துக்காலத்தில் காப்பாற்றுவதே சிறந்த மனிதநேயம் ஆகும்.

உயர் பகுதிக்கு செல்

இவ்வாறு தண்ணீர் வீட்டுக்குள் வரும் போது மொட்டைமாடி அல்லது சற்று உயரமான பகுதிகளில் குடும்பத்தோடு இடம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் வற்றியவுடன் கீழே வரலாம்
மேலும் மொட்டை மாடியில் கூடாரம் போல் அமைத்து சமையலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு சிறிது காலம் நீர் வற்றும் வரை அங்கேயே பாதுகாப்பாக இருக்கலாம்.

மின்சார சாதனங்கள்

மழைநீர் வீட்டிற்குள் புகுந்து விட்டால் முதலில் மின்சார சாதனங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில் மின்சார சாதனங்களில் தண்ணீர் பட்டால் அவை இயங்காது.

மேலும் அத்தகைய மின்சார சாதனங்கள் பழுது அடையக்கூடும் எனவே அதனை முதலில் அப்புறப்படுத்துவது மிகவும் நல்லது
உதாரணத்திற்கு தொலைக்காட்சி செல்போன் மின்சார அடுப்பு முதலியவற்றை முதலிலே அப்புறப்படுத்துவது நல்லது இல்லையெனில் அவை பழுதடைய கூடும்.

உதவி எண்

இத்தகைய இயற்கை சீற்றத்தின் போது  உங்கள் பகுதிக்கு என்று ஒதுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

ஏதேனும் அவசர உதவி வேண்டுமெனில்  தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நம் அரசின் உதவிகளை நாடலாம்.

வாகனங்கள்

இத்தகைய பேரிடர் காலத்தில் நாம் நமது வாகனங்களை பத்திரமான இடத்திற்கு அப்புறப்படுத்துவது நல்லது.

ஏனெனில் மழைநீர் நம் வாகனத்தில் சூழ்ந்து விட்டால் நாம் வாகனம் எளிதில் பழுதடைய கூடும்.

எனவே வாகனத்தை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்துவது மிகவும் நல்லது.

உடல் ஆரோக்கியம்

இத்தகைய காலத்தில் நம் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்வது சற்று சிரமமாக இருக்கும்.

மேலும் எந்நேரமும் மழை விடாமல் பெய்து கொண்டிருப்பதால் நமக்குச் சளிஇருமல் போன்ற நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளலாம்.

எனவே இக்கால கட்டத்தில் சூடான தண்ணீர் பருகுவது மிகவும் நல்லது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *