ஜோக்-01
ஒருத்தன் எப்பவுமே வாட்ஸ் அப்ல வீடியோ பார்த்துட்டு,மெசேஜ் பண்ணிட்டு இருப்பான். ஆனா யாரு ஸ்டேட்டஸ் போட்டாலும் அதை பார்க்கவே மாட்டான்.
ஏன்?????
ஏன்னா அவன் யாருகிட்டயும் ஸ்டேட்டஸ் பார்த்து பழக மாட்டானாம்.
ஜோக்-02
ஒரு திருடன் செயினை எடுத்து போய் அடகு கடையில் வச்சானாம்.சேட்டுஅதை வாங்க மாட்டேன்னு சொல்லி திட்டி அனுப்பி விட்டாராம்.
ஏன் ?????
ஏன்னா அவன் வச்சது கீ செய்னாம்.
ஜோக்-03
பசுமாடு ஏன் பால் கொடுக்குது தெரியுமா??
அதால டீ காப்பி கொடுக்க முடியாது அதான் பால் கொடுக்குது.
ஜோக்-04
ஒருத்தன் பொண்ணு பார்க்க போனானாம்.அப்போது திடீர்னு பொண்ணை தூக்கிட்டு போயி வெயிட் மிஷின்ல நிக்க வெச்சான்.
ஏன் ????
ஏன்னா பொண்ணு சொக்கத்தங்கமாம்.
ஜோக்-05
ஒரு திருடன் கோயிலுக்குள் திருடினான்.அதைப் பார்த்து பொது மக்கள் அவனை பிடித்து கட்டிவைத்து கட்டையால் அடிச்சாங்களாம்.
ஆனாலும் அந்தத் திருடனுக்கு கொஞ்சம் கூட வலிக்கலையாம்.
ஏன்?????
ஏன்னா அவங்க கொழுக்கட்டையால அடிச்சாங்களாம்.
Super
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.