Tamil kadi jokes in tamil | மொக்க ஜோக்ஸ்-08

ஜோக் -01

சுக்கி : ஆ டிங்கு டங்கு

பத்திரகாளி : எட்டியே அம்மிக்கல்ல ஏண்டி அடிச்சிட்டு இருக்கா??

சுக்கி : யம்மா அடி மேல் அடி அடிச்சால் அம்மியும் நகரும்னு எங்க டீச்சர் சொன்னாவம்மா 😁😁😁😁

ஜோக் -02

மனிதன் 1 : ஏய் எதுக்கு அவர செருப்பால அடிச்ச??

மனிதன் 2 : அவர் தான் அடி செருப்பாலேன்னு சொன்னார்.

ஜோக் -03

டீச்சர் : ஏய் சுக்கி கழித்தல் கணக்குல கடன் வாங்கி கணக்கு போடணும்.

சுக்கி : சாரி மிஸ் எங்க அம்மா யார்கிட்டேயும் கடன் வாங்க கூடாதுனு சொல்லிருக்காவ.

டீச்சர் : 😲😲😲

ஜோக் -04

டாக்டர் : உங்கள குணப்படுத்துறது கஷ்டம். கடைசியா யாரையாச்சும் பார்க்கணுமா??

நோயாளி : ஆமாம் டாக்டர்.

டாக்டர் : யாரை பார்க்கணும்???

நோயாளி : வேறே ஒரு நல்லா டாக்டரை 😂😂😂

ஜோக் -05

இடம் : ஹோட்டல் கடை

ஒருவன் : யோவ் ஏன் இலையிலிருந்த தோசையை சாப்பிடுற? உன் இலை கண்ணுக்கு தெரியலையா??

மற்றொருவன் : மன்னிச்சுக்குங்க சார் பசி கண்ணை மறைச்சிடுச்சு 🙄🙄🙄

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *