தமிழ் விடுகதைகள் -1

1. ஊரெல்லாம் சுற்றுவான் வீட்டிற்குள் வர மாட்டான் அவன் யார்??

2. சுருட்ட முடியும் ஒடிக்க முடியாது வெட்ட வெட்ட வளரும் எண்ணெய் கண்டால் படியும். அது என்ன ??

3. வானத்திலே பறப்பான் விமானமும் அல்ல,வட்டம் போட்டு சுற்றுவான் கருடனும் அல்ல அவன் யார்??

4. அடங்கிக் கிடப்பாள் திடீரென்று அலறுவான் எடுத்து காதில் வைத்து ஏதோ சொல்லி கதைப்பான் அவன் யார் ??

5. அடித்து வைத்த இடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்கும் அனுதினம் பார்க்க பார்க்க ஆயுள் குறையும் அது என்ன??

6. எப்போதும் பிரிவதில்லை நண்பர்கள் அல்ல. எப்போதும் இணைய மாட்டார்கள் பகைவரும் இல்லை. அது என்ன??

7. நாக்கை ஒன்றிய நடுத்தெருவில் ஆடுவான். மூச்சுத்திணறி விட்டால் முடங்கிக் கிடப்பார் அவன் யார்??

8. அண்ணன் தம்பி இரண்டு பேர் அவர்களை சுற்றி 12 பேர் அது என்ன??

9. துளித்துளியாய் கண்ணீர்விடும். தூயசுடர் இருள் போக்கும். அறிவு மடமையை அகற்றுதல் போல், அடர்ந்த இரட்டை அது அகற்றும் அது என்ன??

10 கால் இல்லாமல் ஓடுவான். கழுத்து இல்லாமல் பாடுவான் அவன் யார்??

மேலே கேட்கப்பட்டுள்ள விடுகதைக்கான விடைகள் கீழே பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன அதைப்பார்த்து விடுகதைக்கான விடையை தெரிந்து கொள்ளவும்.

நன்றி வணக்கம்

விடைகள்:

1.செருப்பு

2.தலைமுடி

3.பட்டம்

4.சங்கு

5. காலண்டர்

6. ரயில் தண்டவாளம்

7. பம்பரம்

8.கடிகாரம்

9. மெழுகுவர்த்தி

10. அலார கடிகாரம்

3 thoughts on “தமிழ் விடுகதைகள் -1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *