Tamil Vidukathaigal | விடுகதைகள் -03

விடுகதை – ஒரு சிறு அறிமுகம்

விடுகதை என்பது அறிவை சோதிக்கும் ஒரு வினோதமான மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டு ஆகும். இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கக்கூடியது. விடுகதைகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் புதிராகவும், சிந்தனைக்குரியதாகவும் இருக்கும்.

தமிழில் விடுகதைகள் பழமையானது. பழமொழிகள், கதைகள், திருக்குறள் மற்றும் பல இலக்கியங்களில் கூட இது காணப்படுகிறது. எளிய சொற்களில், மறைமுகமான வார்த்தைகளில் ஒரு பொருள் கொடுத்து அதை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும் என்பதே விடுகதையின் அழகு.

எழுத்துப்பிழை, எண்ணிக்கைகள், பொழுது போக்கிற்காகவும், அறிவை மெருகூட்டவும் விடுகதைகள் பயனளிக்கின்றன. சிந்தனைக்கும், புதிர் போடுவதற்கும் உகந்த விடுகதைகளை நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தி மகிழலாம்!

உண்மை சொல்லப்போனால்… விடுகதைகள் விடைதேடும் மந்திரக் கதவுகள்தான்! 😃✨.

கீழ்காணும் விடுகதைகளை படித்து மகிழவும்

Tamil Vidukathaigal-03

விடுகதை 1:

தலை இல்லாதவன் ஆனால் தலையை சுமப்பவன் அவன் யார்?

விடை:

தலையணை


விடுகதை 2:

தொப்பி போட்ட காவல்காரன் உரசிப்போட்டால் சாம்பல் ஆவான் அவன் யார் ?

விடை:

தீக்குச்சி


விடுகதை 3:

அந்தரத்தில் தொங்கும் சொம்பும் தண்ணீரும் அது என்ன

விடை:

தேங்காய்


விடுகதை 4:

தலையை சீவினால் தாளில் மேய்வான் அவன் யார் ?

விடை:

பென்சில்


விடுகதை 5:

ஐந்து வீட்டிற்கு ஒரே முற்றம் அது என்ன ?

விடை:

உள்ளங்கையும் விரல்களும்


விடுகதை 6:

வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல் அது என்ன?

விடை:

முட்டை


விடுகதை 7:

அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி . பாதி நாள் குறைவாள் பாதி நாள் வளர்வாள் அவள் யார் ?

விடை:

நிலா


விடுகதை 8:

விழுந்தால் படுக்காது எழுந்தால் நிற்காது அது என்ன ?

விடை:

தஞ்சாவூர் தலை ஆட்டி பொம்மை


விடுகதை 9:

ஆயிரம் அறைகள் கொண்ட பிரமாண்டமான மிட்டாய் கடை அது என்ன ?

விடை:

தேன் கூடு


விடுகதை 10:

கூட்டுகுள்ளயே குடியிருக்கும் குருவியும் அல்ல பாய்ந்து செல்லும் புலியும் அல்ல எதிரியை கொல்லும் வீரனும் அல்ல அது என்ன ?

விடை:

அம்பு


விடுகதை 11:

பொட்டு போல இலை இருக்கும் குச்சி போல காய் காய்க்கும் அது என்ன ?

விடை:

முருங்கை


விடுகதை 12:

அள்ளவும் முடியாது கிள்ளவும் முடியாது அது என்ன ?

விடை:

காற்று


விடுகதை 13:

ஒளியில் கூடவே இருப்பான் இருளில் மறைந்து கொள்வான் அவன் யார்

விடை:

நிழல்


விடுகதை 14:

உள்ளே இருந்தால் ஓடி திரிவான் வெளியே வந்தால் விரைவில் மடிவான் அவன் யார்?

விடை:

மீன்


விடுகதை 15:

எண்ணும் முள்ளும் இல்லாத கடிகாரம் எவராலும் பார்க்க இயலாத கடிகாரம் அது என்ன??

விடை:

இதயம்


மேலும் படியுங்கள் :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *