விடுகதை – ஒரு சுவாரஸ்யமான புதிர் உலகம்
விடுகதை என்பது தமிழ் மொழியின் அழகான விளையாட்டுகளில் ஒன்றாகும். இது அறிவுக்கூர்மையை வளர்க்கும் ஒரு சிறந்த கருவியாகும். பழமொழிகள், நையாண்டி, கணிதம், மர்மம் என பல்வேறு வகைகளில் விடுகதைகள் அமைந்துள்ளன.
வெளிப்படையாக விடையைக் கூறாமல் மறைமுகமாக ஒரு வார்த்தை, பொருள் அல்லது உண்மையை சிந்திக்க வைத்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இதன் தனித்தன்மை. இது நம்மை சிரிக்கவைக்கும், ஆச்சரியப்படுத்தும், ஒருசில நேரங்களில் “என்னடா இது?” என்று தோன்ற செய்யக்கூடியதொரு புதிர்!
பழமையான தமிழ் இலக்கியங்களிலிருந்தே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து வரும் விடுகதைகளை வாருங்கள், நாமும் சிந்தித்து மகிழ்வோம்! 😃✨

விடுகதை 1:
வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை அவன் யார் ?
விடை:
செருப்பு
விடுகதை 2:
சட்டையை கழற்றினால் சத்துணவு அவன் யார் ?
விடை:
வாழைப்பழம்
விடுகதை 3:
காலையில் வந்த விருந்தாளி மாலையில் காணவில்லை அவன் யார் ?
விடை:
சூரியன்
விடுகதை 4:
சிறு தூசி விழுந்து குளம் கலங்குதே அது என்ன ?
விடை:
கண்
விடுகதை 5:
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன?
விடை:
கண் இமை
விடுகதை 6:
உங்களுக்கு சொந்தமான ஒன்னு உங்களை விட மற்றவர்கள் அதிகம் உபயோகிப்பார்கள் அது என்ன ?
விடை:
உங்கள் பெயர்
விடுகதை 7:
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன
விடை:
சிரிப்பு
விடுகதை 8:
டாக்டர் வந்தாரு ஊசி போட்டாரு காசு வாங்காம போயிட்டாரு அவர் யார்?
விடை:
கொசு
விடுகதை 9:
எப்போதும் மழையில் நனைவான் ஜுரம் வராது வெயிலில் காய்வான் எதுவும் ஆகாது அவன் யார்
விடை:
குடை
விடுகதை 10:
உயிர் இல்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அவன் யார் ?
விடை:
பாய்
விடுகதை 11:
மாமா போட்ட பந்தல் மறுபடி பிரித்தால் கந்தல் அது என்ன
விடை:
சிலந்தி வலை
விடுகதை 12:
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான் அவன் யார்
விடை:
அலாரம் கடிகாரம்
விடுகதை 13:
அம்மா படுத்திருக்க மகள் ஓடி திரிவான் அவள் யார்
விடை:
அம்மி குளவி
விடுகதை 14:
வெட்டி கொள்வான் ஒட்டி கொள்வான் அவன் யார் ?
விடை:
கத்திரிக்கோல்
விடுகதை 15:
பச்சை குடுவைக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன
விடை:
வெண்டைக்காய்
மேலும் படியுங்கள் :


