Tamil Vidukathaigal | விடுகதைகள் -06

🌿🎭 விடுகதைகளின் மந்திர உலகへ வரவேற்கிறேன்! 🎭🌿

நண்பர்களே! 🤩 நகைச்சுவையும் நுண்ணறிவும் கலந்த விதுகதைகள் உங்கள் கண்ணோட்டத்திற்கு! 🤔💡
அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சின்னச் சின்ன விஷயங்களுக்கே பெரிய மர்மம் இருக்கும், அதையே சுவாரஸ்யமாக சொல்லும் விதுகதைகள் இங்கே!

புத்திசாலித்தனமாக சிந்திக்க தயாரா? 😏🧐 அப்படியெனில், கேள்வி வருகை! 🤓👇
“சிறியதாக இருக்கும், ஆனால் பெரியவர்களை கூட சிரிக்க வைக்கும் ஒன்று எது?” 😄

உங்கள் பதிலை கருத்துகளில் சொல்லுங்க, பிறகு பதிலைக் கண்டுபிடிப்போம்! 😉💭
விடுகதைகளின் புது உலகத்தை அனுபவிக்க தயாராக இருக்கிறீர்களா? 🎉✨

#விடுகதைகள் #TamilRiddles #ThinkSmart

விடுகதை 1:

நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டி கொள்ள துணி இல்லை அவன் யார் ?

விடை:

சிலந்தி


விடுகதை 2:

ஐந்து அடுக்கு நூலு இடுக்கு அது என்ன ?

விடை:

விரல்கள்


விடுகதை 3:

இரவல் கிடைக்காதது .இரவில் கிடைப்பது .அது என்ன ?

விடை:

தூக்கம்


விடுகதை 4:

தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும் தான் அவன் யார் ?

விடை:

நுங்கு


விடுகதை 5:

காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அவன் யார் ?

விடை:

முள்


விடுகதை 6:

கருப்பு சட்டைக்காரன் சட்டையை கழற்றினால் வெள்ளை காரன் அவன் யார் ?

விடை:

உளுந்து


விடுகதை 7:

காற்றை குடித்து காற்றிலே பறப்பான் அவன் யார் ?

விடை:

பலூன்


விடுகதை 8:

அடிக்காமல் திட்டாமல் கண்ணீர் வரவழைப்பான் அவன் யார் ?

விடை:

வெங்காயம்


விடுகதை 9:

ஓயாமல் இரையும் இயந்திரம் இல்லை உருண்டோடி வரும் பந்தும் இல்லை அவன் யார் ?

விடை:

கடல்


விடுகதை 10:

உணவை எடுப்பான் ஆனால் உணவை உண்ணமாட்டான் அவன் யார் ?

விடை:

அகப்பை


விடுகதை 11:

உயர பறப்பவனுக்கு வாழ் உண்டு கால் இல்லை அவன் யார் ?

விடை:

பட்டம்


விடுகதை 12:

ஒன்று போனால் மற்றொன்று வாழாது அவன் யார் ?

விடை:

செருப்பு


விடுகதை 13:


ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் இன்னொருவன் ஓடுவான் அவன் யார் ?

விடை:

கடிகாரம்


விடுகதை 14:

சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டி கிடக்குது அவன் யார் ?

விடை:

காய்ந்த மிளகாய்


விடுகதை 15:

நாக்கு இல்லாவிட்டால் இவனுக்கு வேலை இல்லை அவன் யார் ?

விடை:

கோவில் மணி


மேலும் விடுகதைகள்:


மேலும் படியுங்கள் :


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *