Tamil vidukathaigal | விடுகதைகள் -02

கேள்வி :கண்களுக்கு இது அலங்காரம் தான் ஆனால் பார்வைக்கு உத்தரவாதம்

அது என்ன????

விடை: மூக்கு கண்ணாடி

கேள்வி :இரண்டோ மூன்றோ தோலை உரித்தால் முத்து வரும்

அது என்ன?????

விடை: பூண்டு

கேள்வி :முகம் காட்டினால் முகம் தெரியும் முதுகு காட்டினால் முதுகு தெரியாது

அது என்ன??????

விடை: முகம் பார்க்கும் கண்ணாடி

கேள்வி :அத்துவான காட்டில் தொங்கும் இனிப்பு பொட்டலத்துக்கு ஆயிரம் பேர் காவல்

அது என்ன?????

விடை: தேன் கூடு

கேள்வி :சின்ன பெட்டிக்குள் சிங்கார கீதம் ஆயிரம்

அது என்ன?????

விடை: ஆர்மோனியப்பெட்டி

கேள்வி :கைக்குள் அடங்கும் பிள்ளை கதை நூறு சொல்லும் பிள்ளை

அது என்ன?????

விடை:புத்தகம்

கேள்வி :ஒற்றை பெண்ணுக்கு ஓராயிரம் புடவை

அது என்ன?????

விடை:வெங்காயம்

கேள்வி :குழந்தைக்கு எந்த கை பலமான கை ????

விடை:அழுகை

1 thought on “Tamil vidukathaigal | விடுகதைகள் -02”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *