Here are some of the interesting Tamil riddles.
#விடுகதைகள் #TamilRiddles #ThinkSmart

விடுகதை 1:
அனலில் பிறப்பான் ஆகாயத்தில் பறப்பான் .அவன் யார் ?
விடை:
புகை
விடுகதை 2:
வாலிலே எண்ணெய் தலையிலே கொள்ளி அது என்ன?
விடை:
விளக்குத்திரி
விடுகதை 3:
ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது அவர்கள் யார் ?
விடை:
எறும்பு கூட்டம்
விடுகதை 4:
காலில் தண்ணீர் குடிப்பான் . தலையில் முட்டை விடுவான் அவன் யார் ?
விடை:
தென்னை
விடுகதை 5:
சுற்றும் போது சுகம் தரும் அது என்ன ?
விடை:
மின் விசிறி
விடுகதை 6:
கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரை கண்டு பதைபதைக்கிறான் அவன் யார் ?
விடை:
நெருப்பு
விடுகதை 7:
மேலிலும் துவாரம் கீழிழும் துவாரம் வளதிலும் துவாரம் இடதிலும் துவாரம் உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும்,.. நீரை எண்ணினுள் சேமித்து வைப்பேன் .நான் யார் ?
விடை:
பஞ்சு
விடுகதை 8:
கடலிலே கலந்து கரையிலே பிரிந்து தெருவிலே திரியும் பூ .அது என்ன ?
விடை:
உப்பு
விடுகதை 9:
கந்தல் துணி கட்டியவன் முத்து பிள்ளைகளை பெற்று மகிழ்ந்தான் அவன் யார் ?
விடை:
சோளக்கதிர்
விடுகதை 10:
கடலில் கலக்காத நீர் யாவரும் குடிக்காத நீர். அது என்ன ?
விடை:
கண்ணீர்
விடுகதை 11:
கத்தி போல் இலை இருக்கும் , கவரிமான் பூ பூக்கும் , தின்ன பலம் கொடுக்கும் , தின்னாத காய் கொடுக்கும் .அது என்ன ?
விடை:
வேம்பு

விடுகதை 12:
தொட்டு பார்க்கலாம் எட்டி பார்க்க முடியாது . அது என்ன ?
விடை:
முதுகு
விடுகதை 13:
கலர்பூ கொண்டைக்காரன் . காலையில் எழுப்பிவிடுவான் . அவன் யார் ?
விடை:
சேவல்
விடுகதை 14:
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க , ஸ்ரீ ரங்கம் தூங்க , திருப்பாற்கடல் தூங்க , ஒருவன் மட்டும் தூங்கவில்லை . அவன் யார் ?
விடை:
மூச்சு
விடுகதை 15:
ஏற்றி வைத்து அணைத்தால் , எரியும் வரை மணக்கும் . அது என்ன ?
விடை:
ஊது பத்தி
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -09.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :


