Tamil vidukathaigal -10 – Best Vidukathaigal in Tamil

Tamil vidukathaigal -10.

தமிழ் விடுகதைகள் – உங்கள் புத்திசாலித்தனத்தை பரிசோதிக்க நேரம் வந்தாச்சு!

வணக்கம்!
விளையாட்டோடு வினோதமாய், சிரிப்போடு சிந்தனை கொடுக்கும் நம் தமிழ் விடுகதைகள் இப்போது உங்கள் முன்னிலையில்.

இவை வெறும் கேள்விகள் அல்ல…
இதுவே நம் மூளைச்சுழற்சி சோதனை!
இதுவே நம்ம கலாசாரத்துக்கு ஒரு சிறந்த சான்று!

சில விடுகதைகள் சிரிக்க வைக்கும்…
சில நம்மை யோசிக்க வைக்கும்…
சில நேரம் “அப்பாடி!”னு கைகொட்ட வைக்கும்!

பெரியவர்களுக்கும், பிள்ளைகளுக்கும், குடும்பவிழாக்களில், பள்ளி நிகழ்ச்சிகளிலும் திலகு போடும்தான் இது!

சரி! தயார் தானே? அப்படின்னா, வாருங்கள்! புத்திசாலித்தனத்தின் பயணத்தை தொடங்கலாம்! 🧠✨

விடுகதை 1:

விடிய விடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம் . அவன் யார் ?

விடை:

கடிகாரம்


விடுகதை 2:

பட்டைய பட்டைய நீக்கி , பதினாறு பட்டையை நீக்கி , முத்துப்பட்டையை நீக்கி , முன்னே வரால் சீமாட்டி . அவள் யார் ?

விடை:

வாழை பூ


விடுகதை 3:

கிணற்றை சுத்தி வெள்ளை கற்கள் . அது என்ன ?

விடை:

பற்கள்


விடுகதை 4:

ஒற்றை காலில் சுற்றிடுவான் . ஓய்ந்ந்து போனால் படுத்திடுவான் . அவன் யார் ?

விடை:

பம்பரம்


விடுகதை 5:

மடக்காமல் பறக்குதே , அது என்ன மந்திரி ? சிமிட்டாமல் பார்க்காதே அது தான் மன்னா ?

விடை:

தட்டான் பூச்சி


விடுகதை 6:

கிணற்றை சுற்றி புல் . அது என்ன ?

விடை:

கண் இமை


விடுகதை 7:

அரை ஜான் சின்னவனுக்கு , கால் ஜான் தொப்பி . அவன் யார் ?

விடை:

பேனா


விடுகதை 8:

உயிரில்லை ஊருக்கு போவான் . கால் இல்லை வீட்டுக்கு வருவான் . வாயில் வார்த்தைகள் சொல்லுவான் . அவன் யார் ?

விடை:

கடிதம்


விடுகதை 9:

அண்ணனுக்கு ஒட்டாது , தம்பிக்கு ஒட்டும், அது என்ன ?

விடை:

உதடு


விடுகதை 10:

உயிரில்லாதவன் சொன்னதை திரும்ப சொல்வான் . அவன் யார் ?

விடை:

எதிரொலி


விடுகதை 11:

நட்டமாய் நிற்பவனுக்கு , நறுக்கு நறுக்கென்று கடிக்கின்ற வேலை , அவன் யார் ?

விடை:

அரிவாள் மனை


விடுகதை 12:

தாய் இனிப்பாள் , மகள் புளிப்பாள் , பேத்தி மணப்பாள் . அவர்கள் யார் ?

விடை:

பால் , தயிர் , நெய் .


விடுகதை 13:

உலர்ந்த கொம்பிலே மலர்ந்த மலர். அது என்ன ?

விடை:

குடை


விடுகதை 14:

சின்ன சின்ன சாத்தான் , வயிறு பெருத்து செத்தான் . அவன் யார் ?

விடை:

பருத்தி


விடுகதை 15:

பறிக்க பறிக்க பெரிதாகும் . அது என்ன ?

விடை:

குழி


மேலும் விடுகதைகள்:


மேலும் படியுங்கள் :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *