“விடுகதைகள்” என்பது தமிழின் பாரம்பரியமான சிந்தனை விளையாட்டு. குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி விளையாடும் இவை, புத்திசாலித்தனத்தையும், கூர்மையான சிந்தனையையும் வளர்க்கும். ஒரு கேள்வி போல இருந்தாலும், அதற்கான பதில் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் அறிவும் மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கும்.”

விடுகதை 1:
எட்டு பேரு நாங்கள், எங்கள் தலைவரை காப்பாற்ற முன்னால் போவோம் , ஆனால் பின்னால் வரமாட்டோம் நாங்கள் யார் ?
விடை:
சதுரங்க சிப்பாய்
விடுகதை 2:
சிறகடித்து பறப்பவனை சமாதானத்துக்கு உதாரணம் சொல்வார் . அவன் யார் ?
விடை:
புறா
விடுகதை 3:
இருட்டில் மினுமினுக்கும் ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன ?
விடை:
மின்மிணி பூச்சி
விடுகதை 4:
சங்கீத பாட்டுக்காரன் , மழையில் கச்சேரியே செய்வான். அவன் யார் ?
விடை:
தவளை
விடுகதை 5:
ஒற்றைக்கால் வெள்ளைச்சாமி நீரோடையில் மீன் பிடிக்கிறான் . அவன் யார் ?
விடை:
கொக்கு
விடுகதை 6:
ஆடி ஆடி நடந்தான். அமைதியாக அதிர வைத்தான் அவன் யார் ?
விடை:
யானை
விடுகதை 7:
பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசாமலே சிவந்த வாய். அவள் யார் ?
விடை:
பச்சை கிளி .
விடுகதை 8:
குடியிறுக்க கோட்டை கட்டும், அந்த கோட்டையை உடைத்து வெளியே வரும். அது என்ன ?
விடை:
பட்டாம்பூச்சி
விடுகதை 9:
வீட்டில் இருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி , அவர்கள் யார்?
விடை:
பூட்டும் சாவியும்
விடுகதை 10:
முள்ளு முள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே , வைக்கோல் போருக்குள்ளே , கண்டெடுத்தேன் வைரமணி . அது என்ன ?
விடை:
பலாப்பழம்
விடுகதை 11:
விரல் இல்லாமலே ஒரு கை . அது என்ன ?
விடை:
உலக்கை
விடுகதை 12:
அரசன் இல்லாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன் , இரவு காவல்காரன் ஒருவன். அவர்கள் யார் ?
விடை:
சூரியன் , சந்திரன் .
விடுகதை 13:
என்னை கீழே போட்டால் நான் உடைந்துவிடுவேன் . என்னை பர்த்து சிரித்தால் உன்னை பார்த்து நான் சிரிப்பேன் .நான் யார் ?
விடை:
முகம் பார்க்கும் கண்ணாடி
விடுகதை 14:
முட்டையிடும் அனால் குஞ்சு பொரிக்காது, கூட்டில் குடி இருக்கும் ஆனால் வீடு கட்ட தெரியாது .குரலில் இனிமையுண்டு ஆனால் சங்கீதம் தெரியாது . அவன் யார் ?
விடை:
குயில்
விடுகதை 15:
உடம்பு முழுவதும் முள் . அது என்ன ?
விடை:
கள்ளி செடி
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :


