“விடுகதைகள் என்பது தமிழரின் பழமையான பொழுதுபோக்கு மரபுகளில் ஒன்று. சிரிப்பையும் சிந்தனையையும் சேர்த்து மக்களை மகிழ்விக்கும் சிறிய கேள்வி–பதில்கள் தான் விடுகதைகள். இவை அறிவைத் தூண்டி, புத்திசாலித்தனத்தை வளர்க்கும் தன்மை கொண்டவை.”

விடுகதை 1:
கையை வெட்டுவார் . கழுத்தையும் வெட்டுவார் . அனால் நல்லவர் . அவர் யார் ?
விடை:
தையல் காரர்
விடுகதை 2:
உயரமான இடத்தில் இருந்து தூக்கி எரிந்தாலும் ஒன்னும் ஆகாது ,ஆனால் தண்ணீரில் போட்டால் மட்டும் செத்து விடும் . அது என்ன ?
விடை:
காகிதம்
விடுகதை 3:
இவருடைய உடம்பெல்லாம் சிகப்பு .அனால் குடுமி பச்சை . யார் இவர் ?
விடை:
தக்காளி
விடுகதை 4:
நான் மிகவும் முக்கியமானவன் , ஆனால் ஒரு சில வினாடிக்கு மேல் என்னை உங்களிடம் வைத்திருக்க முடியாது .நான் யார் ?
விடை:
மூச்சு காற்று
விடுகதை 5:
நான் ஒரு பாறை , ஆனால் நீரில் போட்டால் கரைந்துவிடுவேன் . நான் யார் ?
விடை:
ஐஸ் கட்டி
விடுகதை 6:
தேர் ஓடுது, பூ உதிருது . அது என்ன ?
விடை:
அரவை இயந்திரம்
விடுகதை 7:
சங்கீதம் பாடுபவனுக்கு, சாப்பாடு ரத்தம் . அது என்ன ?
விடை:
கொசு
விடுகதை 8:
அஸ்திவாரம் இல்லாமல் , அரண்மனை கட்டினேன் . அது என்ன ?
விடை:
கப்பல்
விடுகதை 9:
வாங்கும்போது கருப்பு நிறமாகவும் ,பயன்படுத்தும்போது சிகப்பு நிறமாகவும் , தூக்கி எரியும்போது சாம்பல் நிறமாகவும், இருப்பது எது ?
விடை:
விறகு
விடுகதை 10:
மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும் . அது என்ன ?
விடை:
ரயில்
விடுகதை 11:
என்னை தெரியாத போது தெரிந்து கொள்ள ஆவல் . தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ள ஆசை . நான் மறைக்கப்பட வேண்டியவன் . நான் யார் ?
விடை:
ரகசியம்
விடுகதை 12:
அச்சு இல்லாத சக்கரம், அழகை கூட்டும் சக்கரம் . அது என்ன ?
விடை:
வளையல்
விடுகதை 13:
முக்கண்ணன் சந்தைக்கு போகின்றான் . அவன் யார் ?
விடை:
தேங்காய்
விடுகதை 14:
இந்த குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டணையுண்டு .அனால் குற்றத்தை செய்து விட்டால் தண்டிக்க முடியாது . அது என்ன ?
விடை:
*******
விடுகதை 15:
தேவை படும் போது தூக்கி எறியப்படும் . தேவை இல்லாதபோது பத்திரமாய் வைக்கப்படும், . அது என்ன ?
விடை:
நங்கூரம்
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :


