Tamil vidukathaigal -15 – Best Vidukathaigal in Tamil

“வணக்கம் நண்பர்களே! அறிவை வளர்த்திடும், சிந்தனைக்கு தீனி சேர்க்கும் ‘விடுகதைகள்’ உலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 🧩
இது வெறும் கேள்வி–பதில் விளையாட்டு அல்ல; இது நம் மூளையைச் சுறுசுறுப்பாக்கும் ஒரு சுவாரஸ்யமான பயணம்!
சிறிது சிந்தனை, சிறிது சிரிப்பு, நிறைய மகிழ்ச்சி — இதுதான் நம்முடைய விடுகதைகள்!
அப்படியானால், தயார் தானே? பார்க்கலாம், இன்று யார் புத்திசாலி என்று! 😉🧠”

Tamil vidukathaigal -15 – Best Vidukathaigal in Tamil

விடுகதை 1:

சூடு பட்டு சிவந்தவன் வீடு கட்ட உதவுவான்

விடை:

செங்கல்


விடுகதை 2:

வட்ட வட்ட பாய் வாழ்வு தரும் பாய் ஊரெல்லாம் சுற்றும் பாய் எல்லாரும் விரும்பும் பாய்.அவன் யார் ?

விடை:

ரூபாய்


விடுகதை 3:

பிறக்கும் பொது வால் உண்டு இறக்கும் பொது வால் இல்லை .அது என்ன ?

விடை:

தவளை


விடுகதை 4:

முற்றத்தில் நடப்பான் மூலையில் படுப்பான். அவன் யார் ?

விடை:

சீமாறு துடைப்பம்


விடுகதை 5:

ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல சூடு கொடுக்கும் தீயல்ல ,பளபளக்கும் தங்கம் அல்ல . அது என்ன ?

விடை:

சூரியன்


விடுகதை 6:

கிளை உண்டு ஆனால் இல்லை இல்லை . அது என்ன ?

விடை:

மான் கொம்பு


விடுகதை 7:

பச்சை நிற அழகிக்கு உதட்டு சாயம் பூசாமலே சிவந்த வாய் . அவள் யார் ?

விடை:

பச்சை கிளி


விடுகதை 8:

என் தாயோ கடல் என் தந்தையோ சூரியன் என்னை விரும்பாத வீடே இல்லை . நான் யார் ?

விடை:

உப்பு


விடுகதை 9:

வெள்ளத்தில் போகாது , வெந்தணலில் வேகாது , கொள்ளை அடிக்க முடியாது , கொடுத்தாலும் குறையாது . அது என்ன ?

விடை:

கல்வி


விடுகதை 10:

இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு , தலையிலே ஒரு குடை . அவன் யார் ?

விடை:

காளான்


விடுகதை 11:

பார்த்தால் கல் , பல் பட்டால் நீர் .அது என்ன ?

விடை:

பனிக்கட்டி


விடுகதை 12:

பல் துலக்க மாட்டான் .ஆனால் அவன் பல் எப்பொழுதும் வெள்ளையாய் இருக்கும் . அவன் யார் ?

விடை:

பூண்டு


விடுகதை 13:

சூரிய ஒளியில் உணவை சமைப்பேன் . சுற்று சூழலை பேணி காப்பேன் . நான் யார் ?

விடை:

மரம்


விடுகதை 14:

வெள்ளை மாடு வாலால் நீர் அருந்தும் . அது என்ன ?

விடை:

விளக்கு


விடுகதை 15:

அட்டைக்கு ஆயிரம் கண்ணு , முட்டைக்கு மூணு கண்ணு . அவர்கள் யார் ?

விடை:

கட்டிலும் தேங்காயும்


மேலும் விடுகதைகள்:


மேலும் படியுங்கள் :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *