Tamil vidukathaigal -16 – Best Vidukathaigal in Tamil

“ஹேய் நண்பர்களே! 🤩
உங்கள் மூளை சுழல தயாரா? 🧠💫
நம்மை சிரிக்கவைக்கும், சிந்திக்கவைக்கும் அந்த அற்புதமான ‘விடுகதைகள்’ உலகத்திற்குள் இப்போ நம்ம போகப் போறோம்!
சில கேள்விகள் எளிமை, சில சின்ன சிக்கல் — ஆனா பதில் கண்டுபிடிச்சா அந்த சந்தோஷம் வேற லெவல்! 😄
அப்படியானால், தயார் ஆகுங்க நண்பர்களே — ‘விடுகதைகள்’ ஆரம்பிக்கலாமா? 🧩🔥”

Tamil vidukathaigal -16 – Best Vidukathaigal in Tamil

விடுகதை 1:

தேடி கிடைத்த இறையை , கூடி கூடி உண்பவன் அவன் யார் ?

விடை:

காகம்


விடுகதை 2:

ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைகனம் அதிகம் . அவன் யார் ?

விடை:

பம்பரம்


விடுகதை 3:

கழுத்தை வெட்டினால் கண் தெரியும் . அவன் யார் ?

விடை:

நுங்கு


விடுகதை 4:

உச்சி கிளையில் ஒரு முழு குச்சி ஊசல் ஆடுது . அது என்ன ?

விடை:

முருங்கைக்காய்


விடுகதை 5:

பிறந்தது முதல் வயிற்றாலே அசைந்து போகிறது ,அது என்ன ?

விடை:

பாம்பு


விடுகதை 6:

கடிப்பட மாட்டாள் , பிடிபட மாட்டாள் . அவள் யார் ?

விடை:

தண்ணீர்


விடுகதை 7:

குதி குதி என குதிக்கிறான் , கொட்டை பல்லால் சிரிக்கிறான் . அவன் யார் ?

விடை:

சோளப்பொரி


விடுகதை 8:

ஒற்றை காது காரன் ஓடி ஓடி வேலி அடிக்கிறான் . அவன் யார் ?

விடை:

ஊசி


விடுகதை 9:

மேகத்தின் பிள்ளை , அவன் தாகத்தின் நண்பன் . அவன் யார் ?

விடை:

மழை


விடுகதை 10:

அகன்ற வாய் உடையவன் , திறந்த வாய் மூடாதவன் . அவன் யார் ?

விடை:

செக்கு


விடுகதை 11:

தலையை வெட்ட வெட்ட கருப்பு நாக்கு நீட்டுகிறது . அது என்ன ?

விடை:

பென்சில்


விடுகதை 12:

வெட்கம் கெட்ட புளியமரம் , வெட்ட வெட்ட வளருது . அது என்ன ?

விடை:

தலை முடி


விடுகதை 13:

அவரோ பெரியவர் , அவர் இலையோ சிரியது,அவர் பெற்றது எல்லாம் கோணல் , அவர் யார் ?

விடை:

புளியமரம்


விடுகதை 14:

தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் , தன்னிடம் சிக்குபவர்களை சின்னா பின்னாமாக்குவாள் . அவள் யார் ?

விடை:

மீன் வலை


விடுகதை 15:

தட்டு போல் இருக்கும் ,அதில் சொட்டு தண்ணீர் ஒட்டாது . அது என்ன ?

விடை:

தாமரை இலை


மேலும் விடுகதைகள்:


மேலும் படியுங்கள் :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *