Tamil vidukathaigal -17 – Best Vidukathaigal in Tamil

“வணக்கம் நண்பர்களே! 🌟
சிந்தனையைத் தூண்டும் சிறிய கேள்விகள், ஆனால் பெரிய பதில்களை மறைத்து வைத்திருக்கும் உலகம் — அதுதான் ‘விடுகதைகள்’! 🧩
இங்கு ஒவ்வொரு கேள்வியும் ஒரு புதிர், ஒவ்வொரு பதிலும் ஒரு சிரிப்பும் ஒரு பாடமும்! 😄
உங்கள் புத்திசாலித்தனத்தையும் நகைச்சுவை உணர்வையும் சோதிக்க தயாராக இருக்கிறீர்களா?
அப்படியானால், தொடங்கலாமா நம் விடுகதைகள் பயணம்! 🚀🧠”

Tamil vidukathaigal -17 – Best Vidukathaigal in Tamil

விடுகதை 1:

கருப்பு நிற தோட்டத்திலே மஞ்சள் பூ பூத்திருக்குதே . அது என்ன ?

விடை:

பொர்ணமி நிலா


விடுகதை 2:

அனைவரையும் நடுங்க வைப்பான் , ஆதவனுக்கு மட்டும் நடுங்குவான் . அவன் யார் ?

விடை:

குளிர்


விடுகதை 3:

நீரிலும் நிலத்திலும் வாழ்வான் , பாறையிலும் பதுங்கி வாழ்வான் . அவன் யார் ?

விடை:

தவளை


விடுகதை 4:

கல் எறிந்தால் போதும் , அரண்மனையே காலியாகிவிடும் , அது என்ன ?

விடை:

தேன்கூடு


விடுகதை 5:

கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான் , ஆனால் தண்ணீரில் மட்டும் தவற விட்டு விடுவான் . அவன் யார் ?

விடை:

செருப்பு


விடுகதை 6:

மாடி மேல் மாடி கட்டி , குடி இருக்கும் இவனை தொட்டால் , குத்திடுவான் , பட்டால் கீறிடுவான் . அவன் யார் ?

விடை:

சப்பாத்தி கள்ளி


விடுகதை 7:

எங்க வீடு தோட்டத்தில் , தொங்குது ஏகப்பட்ட பச்சை பாம்புகள் , அது என்ன ?

விடை:

புடலங்காய்


விடுகதை 8:

சிவப்பு தொட்டியில் மலரும் பூ , சிடு சிடுத்தால் மறையும் பூ . அது என்ன ?

விடை:

சிரிப்பு


விடுகதை 9:

மீன் பிடிக்க தெரியாதாம் , ஆனால் வலை பின்னுவானாம். அவன் யார் ?

விடை:

சிலந்தி


விடுகதை 10:

சுற்றி கொண்டே இருப்பேன் . ஆனால் இவனுக்கு தலை வலிக்காது . இவன் யார் ?

விடை:

காற்றாடி


விடுகதை 11:

சிவப்பு சட்டைக்காரன் , வாயை பிளந்து வீதியோரங்களில் நிற்பான் . அவன் யார் ?

விடை:

தபால் பெட்டி


விடுகதை 12:

நித்திரையின் தூதுவன் இவன், நினைக்காமல் வந்து விடுவான் . இவன் யார் ?

விடை:

கொட்டாவி


விடுகதை 13:

பேசுவான் நடக்கமாட்டான் , பாடுவான் ஆடமாட்டான் . அவன் யார் ?

விடை:

வானொலி பெட்டி


விடுகதை 14:

அத்தையில்லா அத்தை அது என்ன அதை ?

விடை:

சித்திரத்தை


விடுகதை 15:

அண்ணன் தம்பி 2 பேரு , அவர்களை தொடுவது 12 பேரு ,அவர்கள் யார் ?

விடை:

கடிகாரம்


மேலும் விடுகதைகள்:


மேலும் படியுங்கள் :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *