“வணக்கம் நண்பர்களே! 😃
சிரிக்கவும் சிந்திக்கவும் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யத் தயாரா?
இங்கே உங்களை வரவேற்கிறது நம்ம விடுகதைகள் உலகம்! 🧩✨
ஒவ்வொரு கேள்வியும் ஒரு புதிர், ஒவ்வொரு பதிலும் ஒரு சவால்!
சிறிது யோசிச்சா பதில் உங்கள் கையில் — இல்லனா சின்ன சிரிப்பு உங்கள் முகத்தில்! 😄
அப்படியானால், புத்திசாலி யார் என்பதை கண்டுபிடிக்கலாம் வாங்க! 🚀”

விடுகதை 1:
பையில் அது இருந்தால் ,வேறு எதுவும் அங்கு இருக்காது . அது என்ன ?
விடை:
கிழிசல்
விடுகதை 2:
அத்தானில்லா அத்தான் அது என்ன அத்தான் ?
விடை:
முடக்கறுத்தான்
விடுகதை 3:
கையில்லாமல் நீந்துவான், கால் இல்லாமல் ஓடுவான் . அவன் யார் ?
விடை:
படகு
விடுகதை 4:
குண்டுசட்டியிலே குதிரை ஓட்டுவான். அவன் யார் ?
விடை:
ஆட்டுரல்
விடுகதை 5:
இந்த ஊரிலே அடிபட்டவன் , அடுத்த ஊரிலே செய்தி சொல்கிறான் . அவன் யார் ?
விடை:
தந்தி
விடுகதை 6:
அடி மேல் அடி வாங்குவான் , ஆனால் அனைவரையும் தலை ஆட்ட வைப்பான் . அவன் யார் ?
விடை:
மேளம்
விடுகதை 7:
மூன்று கால் குள்ள அக்கா , பாசம் தாங்கி நெருப்பை சுமந்து சோறு சமைப்பாள் . அவள் யார் ?
விடை:
அடுப்பு
விடுகதை 8:
செய்தி வரும் பின்னே ,மணியோசை வரும் முன்னே . அது என்ன ?
விடை:
தொலைபேசி
விடுகதை 9:
அரக்கன் தலை – அதோ அந்தரத்தில் தொங்குது . அது என்ன ?
விடை:
திருஷ்டி பூசணிக்காய்
விடுகதை 10:
தேடாமல் கிடைப்பது தேடும் செல்வதை குறைப்பது . அது என்ன ?
விடை:
சோம்பல்
விடுகதை 11:
பச்சை கிளையில் மஞ்சள் குருவி .அது என்ன ?
விடை:
எலுமிச்சைப்பழம்
விடுகதை 12:
காலமில்லாத ஆட்டம், தாளம் இல்லாத ஆட்டம் , தாய்மார்கள் விரும்பாத ஆட்டம் . அது என்ன ?
விடை:
சூதாட்டம்
விடுகதை 13:
அடித்து நொறுக்கி அனலில் போட்டால் , ஆவியாய் தோன்றி கம கமக்கும் . அது என்ன ?
விடை:
சாம்பிராணி
விடுகதை 14:
6 எழுத்து ஒரு உலோகப்பெயர் . அதன் கடை மூன்று எழுத்துக்களை சேர்த்தால் , ஒரு கொடிய பிராணி . அது என்ன ?
விடை:
துத்த நாகம்
விடுகதை 15:
குண்டோதரன் வயிற்றிலே குள்ளன் நுழைகிறான் . அவன் யார் ?
விடை:
சாவி
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



