தமிழ் மொழியின் நுணுக்கமும் நகைச்சுவையும் இணைந்து பிறந்தவை விடுகதைகள். சிந்தனை திறனை கூர்மையாக்கி, புதிர்களைப் பொழுதுபோக்காக மாற்றும் மந்திரம் இதிலே. சிறு வயதிலிருந்து பெரியவர்கள்வரை அனைவருக்கும் சிரிப்பும் சிந்தனையும் ஒரே நேரத்தில் தரும் ஒரு அழகான மொழி விளையாட்டு — அதுவே தமிழ் விடுகதை. வாருங்கள், புத்திசாலித்தனத்தை சோதிக்கும் இந்த புதிர்களின் உலகத்துக்கு ஒன்றாகப் பயணம் செய்வோம்!

விடுகதை 1:
வேட்டையாடாத மான் , ஆனால் வேடர்கள் நிறைந்த மான் . அது என்ன மான் ?
விடை:
அந்தமான் (தீவு )
விடுகதை 2:
வெள்ளி கிணத்தில் தண்ணீர் . அது என்ன ?
விடை:
தேங்காய்
விடுகதை 3:
மூன்று பெண்களுக்கு ஒரே முகம், மூத்த பெண் ஆற்றிலே, நடு பெண் காட்டிலே , கடைசி பெண் வீட்டிலே . அவர்கள் யார் ?
விடை:
முதலை , உடும்பு , பல்லி
விடுகதை 4:
ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை . அவன் யார் ?
விடை:
மரம்
விடுகதை 5:
எவ்வளவு நனைந்தாலும் நடுங்க மாட்டான் . அவன் யார் ?
விடை:
குடை
விடுகதை 6:
நிலத்தில் முளைக்காத செடி , நிமிர்ந்து நிற்காத செடி . அது என்ன ?
விடை:
தலை முடி
விடுகதை 7:
கழட்டிய சட்டையை மறுபடியும் போட மாட்டான் . அவன் யார் ?
விடை:
பாம்பு
விடுகதை 8:
வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு புடிக்காது .நான் யார் ?
விடை:
நாய்
விடுகதை 9:
பார்க்கத்தான் கருப்பு , அதன் உள்ளமோ சிவப்பு ,நமக்கு தருவதோ சுறுசுறுப்பு . அது என்ன ?
விடை:
தேயிலை
விடுகதை 10:
கடலுக்குள் பூத்தது , கோயிலுக்குள் முழங்குது . அது என்ன ?
விடை:
சங்கு
விடுகதை 11:
யாரும் ஏற முடியாத மரம் ,கிளைகள் இல்லாத மரம் ,அது என்ன மரம் ?
விடை:
வாழை மரம்
விடுகதை 12:
மரத்துக்கு மரம் தாவுவான் ,குரங்கு அல்ல ,பட்டை தீட்டியிருப்பான் , ஆனால் சாமியாரும் இல்லை . அவன் யார் ?
விடை:
அணில்
விடுகதை 13:
அதோ போகிறான் சிறுவன் , அவன் போகும் தடம் தெரியாது . அவன் யார் ?
விடை:
எறும்பு
விடுகதை 14:
அரையடி புல்லில் ஏறுவான் , இறங்குவான் , அவன் யார் ?
விடை:
பேன்
விடுகதை 15:
இளமையில் பச்சை , முதுமையில் சிகப்பு ,குணத்தில் எரிப்பு . அது என்ன ?
விடை:
மிளகாய்
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



