Tamil vidukathaigal -20 – Best Vidukathaigal in Tamil

புதிர்களில் புதைந்து கிடக்கும் அறிவைத் திறந்து காட்டும் சாவி தான் தமிழ் விடுகதை. சாதாரணமாகத் தோன்றும் கேள்விக்குள்ளே ஒரு சின்ன திருப்பு, ஒரு நகைச்சுவை சுவை, ஒரு சிந்தனை மிச்சம் — இதுவே இதன் சிறப்பு. மனதைத் தூண்டும், சிரிப்பைத் தரும், ‘அஹா!’ என்ற உணர்வை கொடுக்கும் தமிழ் விடுகதைகள் உங்கள் கற்பனை உலகத்தைக் கூர்மையாக்க தயாராய் இருக்கின்றன. புதிர்களைப் 풀ிக்க தயாரா? வாருங்கள் தொடங்கலாம்!

Tamil vidukathaigal -20 – Best Vidukathaigal in Tamil

விடுகதை 1:

அலை அலையாய் ஆடி வரும் , கடல் அல்ல . நிலையாக இருக்காது . நிலவும் அல்ல . அது என்ன ?

விடை:

புகை


விடுகதை 2:

அறிவின் மறுபெயர் , இரவில் வருவது, அது என்ன ?

விடை:

மதி


விடுகதை 3:

இடி இடிக்கும், மின்னல் மின்னும் , மழை பெய்யாது , அது என்ன ?

விடை:

பட்டாசு


விடுகதை 4:

எப்போதும் கிடைக்காத மதி, எல்லோரும் விரும்பும் மதி, அது என்ன ?

விடை:

நிம்மதி


விடுகதை 5:

சினந்து சிவந்தவன் , சிதைந்து போவான் , அவன் யார் ?

விடை:

நெருப்பு


விடுகதை 6:

மரத்துக்கு மேலே பழம் , பழத்திற்கு மேலே மரம் . அது என்ன ?

விடை:

அன்னாசிப்பழம்


விடுகதை 7:

பார்த்ததோ இரண்டு பேர் ,எடுத்ததோ 10 பேர் , ருசி பார்த்ததோ ஒரே ஒருவன். அவர்கள் யார் ?

விடை:

கண் , கைவிரல்கள், வாய்


விடுகதை 8:

ஊசி போல் இருப்பான் , ஊரையே எரிப்பான் . அவன் யார் ?

விடை:

தீக்குச்சி


விடுகதை 9:

பத்து பேர் சேர்ந்தால் ,பஞ்சம் போக்குவார்கள், அவர்கள் யார் ?

விடை:

கைவிரல்கள்


விடுகதை 10:

கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது , அது என்ன ?

விடை:

உப்பு


விடுகதை 11:

மரத்தின் மேலே தொங்குவது , மலை பாம்பு அல்ல . அது என்ன ?

விடை:

மரத்தின் விழுது


விடுகதை 12:

நாம் சாப்பிடுவதற்காக வாங்கும் ஒரு பொருளை கடைசி வரை நம்மால் சாப்பிட முடியாது . அது என்ன ?

விடை:

தட்டு


விடுகதை 13:

கருப்பு நிறமுடையவன் , கபடம் அதிகம் கொண்டவன் , கூவி அழைத்தால் வந்துவிடுவான் , கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் . அவன் யார் ?

விடை:

காகம்


விடுகதை 14:

வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு , வயிறில்லை . அது என்ன ?

விடை:

அகப்பை


விடுகதை 15:

கன்று நிற்க , கயிறு மேயுது . அது என்ன ?

விடை:

பூசணிக்கொடி


மேலும் விடுகதைகள்:


மேலும் படியுங்கள் :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *