இந்த உலகில் உள்ள சில விஷயங்கள் எளியதாகவே தோன்றினாலும், அவற்றின் பின்னால் ஒரு சிக்கல் இருக்கலாம்.
நம் இந்த விடுகதையில், நீங்கள் உங்கள் கண்கள், மூளை, நுண்ணறிவு மற்றும் சிந்தனை சக்தியை பயன்படுத்தி ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
சிந்திக்க தயார் ஆகுங்கள்… உங்கள் அறிவு இன்று சோதனைக்கு உட்படும்!

விடுகதை 1:
உள்ளே செல்வதற்கு எளிதாகவும் , வெளியே வருவதற்கு கடினமாகவும் இருக்கும் . அது என்ன ?
விடை:
பிரச்சனை
விடுகதை 2:
எங்க அக்கா சிவப்பு , குளித்தால் கருப்பு . அது என்ன ?
விடை:
அடுப்புக்கரி
விடுகதை 3:
திட்டி திட்டி தீயில் போட்டாலும் , அள்ளி அள்ளி அனலில் போட்டாலும் ,வாரி வாரி வாசம் தருவான் , மனம் குளிர நறுமணம் தருவான் . அவன் யார் ?
விடை:
சாம்பிராணி
விடுகதை 4:
ஒட்டுத் திண்ணையில் பட்டு பாவாடை . அது என்ன ?
விடை:
தோடு
விடுகதை 5:
முறையின்றித் தொட்டால் , ஒட்டி கொண்டு உயிரை கொடுப்பான் . அவன் யார் ?
விடை:
மின்சாரம்
விடுகதை 6:
நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன் ,நீண்ட ஆயுள் உடைய எனக்கு ,இறைவன் கொடுத்த கவசமும் உண்டு, நான் யார் ?
விடை:
ஆமை
விடுகதை 7:
வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு , எழுதிருக்கு . அது என்ன ?
விடை:
நாணயம்
விடுகதை 8:
பட்டுப்பை நிறைய பவுன் காசு . அது என்ன ?
விடை:
மிளகாய் வற்றல்
விடுகதை 9:
தண்ணியில்லாத காட்டிலே , அலைந்து தவிக்கும் அழகி . அவள் யார் ?
விடை:
ஒட்டகம்
விடுகதை 10:
குண்டன் குழியில் விழுவான் , குச்சியப்பன் தூக்கி விடுவான் . அது என்ன ?
விடை:
பணியாரம்
விடுகதை 11:
ஒரு அறையின் அணைத்து இடங்களிலும் இதனால் நிரப்ப முடியும் .ஆனால் , எந்த இடத்தையும் ஆக்கிரமித்து கொள்ளாது .அது என்ன ?
விடை:
ஒளி
விடுகதை 12:
பூமியில் பிறக்குது , புகையாய் பறக்குது . அது என்ன ?
விடை:
பெட்ரோல்
விடுகதை 13:
வெள்ளை குதிரையும் , கருப்பு குதிரையும் மாறி மாறி ஓடுது ,பிடிக்க முடியவில்லை . அவர்கள் யார் ?
விடை:
பகலும் , இரவும்
விடுகதை 14:
இதயம் போல துடிப்பு இருக்கும் ,இரவு பகல் விழித்திருக்கும் . அது என்ன ?
விடை:
கடிகாரம்
விடுகதை 15:
தண்ணீர் இல்லாமல் வளரும் , தரை இல்லாமல் படரும் . அது என்ன ?
விடை:
முடி
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



