🕵️♂️ வணக்கம் விடுகதை ஆர்வலர்களே!
ஒரு சொல்லில் மறைந்திருக்கும் ரகசியத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா?
சிறிய குறிப்புகள், கூர்மையான கண்கள், சிந்தனைவழி – இதெல்லாம் உங்களுக்கு உதவும்.
இந்த விடுகதையில் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு சிந்தனையும் ஒரு புதிர் போல உங்களை காத்திருக்கிறது.
சிந்திக்கவும், உணரவும், மற்றும் விடுபட முடியாத புதிரை தீர்க்கவும் தயாரா?

விடுகதை 1:
ஒட்டி பிறந்த சகோதரர்கள் , சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள்.அவர்கள் யார் ?
விடை:
கத்திரிக்கோல்
விடுகதை 2:
வெள்ளை மாளிகைக்கு வாசல் இல்லை வழியும் இல்லை. அது என்ன ?
விடை:
முட்டை
விடுகதை 3:
ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டு கை . அது என்ன ?
விடை:
குடை
விடுகதை 4:
வாரி விட்டேன் , கொட்டி விட்டேன் , ஊரெல்லாம் புகைகிறது . அது என்ன ?
விடை:
சாம்பல்
விடுகதை 5:
உடல் சிகப்பு வாய் அகலம் , உணவு காகிதம் ., அது என்ன ?
விடை:
அஞ்சல் பேட்டி
விடுகதை 6:
ஆளுக்கு துணை வருவான் ,ஆனால் அவன் பேசமாட்டான் . அவன் யார் ?
விடை:
நிழல்
விடுகதை 7:
எவ்வளவு ஓடினாலும் , எனக்கு வேர்வை வராது . வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு புடிக்காது . நான் யார் ?
விடை:
நாய்
விடுகதை 8:
பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம் ,விடிந்து பார்த்தால் வெறும் தோட்டம் . அது என்ன ?
விடை:
வானம்
விடுகதை 9:
நாலு மூல சதுக்கம் , அம்பது பேர் அடக்கம் . அது என்ன ?
விடை:
தீப்பெட்டி
விடுகதை 10:
ஆழக்குழி தோண்டி , அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தா தொண்ணூறு முட்டை. அது என்ன ?
விடை:
தென்னை மரம்
விடுகதை 11:
ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ,ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் . அது என்ன ?
விடை:
தேன்கூடு
விடுகதை 12:
ஆணை அசைந்து வர , அருமிளகு சிந்தி வர கொத்தளத்து பெண்களெல்லாம் கூடிக் குலவையிட ..அவை யாவை ?
விடை:
மேகம் மழைத்துளி தவளை
விடுகதை 13:
வேலியிலே படர்ந்திருக்கும் , வெள்ளை பூ பூத்திருக்கும் , கனியும் சிவந்திருக்கும் , கவிஞர்க்கும் விருந்தாகும் . அது என்ன ?
விடை:
கோவைப்பழம்
விடுகதை 14:
எந்த காட்டுலையும் கிடைக்காத பூச்சி , அது என்ன பூச்சி ?
விடை:
கண்ணாம்பூச்சி
விடுகதை 15:
அடி வாங்கி உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான். அவன் யார் ?
விடை:
தண்டோரா
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



