Tamil vidukathaigal -23 – Best Vidukathaigal in Tamil

Tamil vidukathaigal -23 – Best Vidukathaigal in Tamil

விடுகதை 1:

கதிர் அடிக்காத களம் , உயிர் பறிக்கும் காலம் . அது என்ன ?

விடை:

போர்க்களம்


விடுகதை 2:

பூவுக்குள் பூ வைத்து போர்த்திய பூ அது என்ன ?

விடை:

வாழை பூ


விடுகதை 3:

தொட்டு விட்டால் மூடி கொள்ளும் , பச்சை மாளிகையின் ஜன்னல்கள் . அது என்ன ?

விடை:

தொட்டால் சுருங்கி செடி


விடுகதை 4:

நான் காற்றை போல எடை இல்லாதவன் , நான் இருந்தால் அந்த இடத்தில குறையும் . அது என்ன ?

விடை:

ஓட்டை


விடுகதை 5:

மிருகங்கள் இல்லாத காடு எது ?

விடை:

முக்காடு


விடுகதை 6:

சுடாதா ரெட்டை குழல் துப்பாக்கி . அதி என்ன ?

விடை:

மூக்கு


விடுகதை 7:

வேலியை சுற்றிய நீள பாம்பு . அது என்ன ?

விடை:

அரைஞாண் கயிறு


விடுகதை 8:

கண் சிமிட்டும் ஒன்று , மணி அடிக்கும் ஒன்று , கணீர் வடிக்கும் இன்னொன்று . அது என்ன ?

விடை:

இடி மின்னல் மழை


விடுகதை 9:

கண் இல்லா என்னால் அழ முடியும்.ஆனால் பார்க்க முடியாது. நான் யார் ?

விடை:

மெழுகுவர்த்தி


விடுகதை 10:

பேசாத வரை நான் இருப்பேன், பேசினால் நான் உடைந்து விடுவேன் . நான் யார் ?

விடை:

அமைதி


விடுகதை 11:

முதலெழுத்து …தமிழின் முதலெழுத்தின் அடுத்த எழுத்து … கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை…மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை. அது என்ன ?

விடை:

ஆபத்து


விடுகதை 12:

விட்டம் போட்டு வீடு கட்டியும் ,விசிறி மாட்ட இடம் இல்லை . அது என்ன ?

விடை:

மூக்கு


விடுகதை 13:

மரக்கிளையை தலையில் தூக்கியபடி துள்ளி ஓடுவான் . அவன் யார் ?

விடை:

கலைமான்


விடுகதை 14:

நாலு மரம் பிடித்து வர ..துடுப்பு துளாவி வர …துரை மகன் ஏறி வர ..அவன் யார் ?

விடை:

யானை


விடுகதை 15:

அடுக்கி வைத்த அழகு சிற்பங்கள் அடி விழுந்தால் அழகு போகும் அது என்ன ?

விடை:

பற்கள்


மேலும் விடுகதைகள்:


மேலும் படியுங்கள் :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *