
விடுகதை 1:
ஐந்து பேரில் இளையவன் , கல்யாணத்துக்கு மூத்தவன் . அவன் யார் ?
விடை:
சுண்டு விறல்
விடுகதை 2:
வளைவான் நெளிவான் வயிறு கலங்க வைப்பான் . அவன் யார் ?
விடை:
பாம்பு
விடுகதை 3:
பறக்கப்பட்ட பூச்சியில் பெய்யாத மழை பெருமழை , பெய்தாலும் அந்த பூச்சிக்கு சிறகு வளையாமல் இருக்கும் . அது என்ன ?
விடை:
தட்டான் பூச்சி
விடுகதை 4:
அரிவாள் இல்லாமல் புல்லறுத்து , கொடியில்லாமல் கட்டுக்கட்டி , ஏணி இல்லாமல் வீடு மேய்ந்தார் . அவர் யார்?
விடை:
சிட்டு குருவி
விடுகதை 5:
ஏழு மலைக்கும் அந்தாண்ட எருமைக்கடா கத்துது . அது என்ன ?
விடை:
இடி
விடுகதை 6:
ஒரு கரண்டி மாவுல ஊரெல்லாம் தோசை . அது என்ன ?
விடை:
நெருப்பு
விடுகதை 7:
நீள ஜமுக்காளம் மடிக்கவே முடியல . அது என்ன ?
விடை:
வானம்
விடுகதை 8:
ஆண்டுக்கு ஒரு முறை பிறப்பேன் , நாளுக்கு ஒரு முறை இறப்பேன் . நான் யார் ?
விடை:
காலண்டர்
விடுகதை 9:
மண்டையை திருகினால் , கண்ணீர் விடுவான் .அவன் யார் ?
விடை:
திறகு குழாய்
விடுகதை 10:
காடு வெள்ளைக்காடு , கானம் கருங்கானம் கையில் விதைத்து வாயில் பொறுக்குவது . அது என்ன ?
விடை:
தாள் பேனா
விடுகதை 11:
அம்மா வயிற்றில் ஆடும் பிள்ளை . அது என்ன ?
விடை:
ஆட்டுரல்
விடுகதை 12:
வெளியில் விரியும் , வீட்டில் சுருங்கும் . அது என்ன ?
விடை:
குடை
விடுகதை 13:
இருட்டு வீட்டில் குருட்டு ராஜா . அவன் யார் ?
விடை:
குலுக்கை
விடுகதை 14:
ஒல்லியான உடம்புக்காரன் , ஊசி மூஞ்சிக்காரன் , ஒத்த கண்ணுகாரன் , அவன் அழும் கண்ணீரை இந்த ஊர் அறியும் , பார் அறியும் . அவன் யார் ?
விடை:
பேனா
விடுகதை 15:
குட்டை மாமியார் , குச்சி மருமகள் , தீராத சண்டை தினமும் மோதல் . அது என்ன ?
விடை:
உரல் உலக்கை
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



