விடுகதை என்பது நம் தமிழ் மரபு கலாச்சாரத்தில் இடம்பிடித்த ஒரு சுவாரஸ்யமான புதிர் கலை. சிந்தனை திறனை வளர்க்கவும், கூர்மையான அறிவை வெளிப்படுத்தவும் உதவும் ஒரு விளையாட்டு வகை. சொற்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அர்த்தத்தை கண்டுபிடிப்பதே இதன் நயம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து விளையாடக்கூடிய அறிவுப் பயிற்சி இது.

Tamil vidukathaigal -25
விடுகதை 1:
உருண்டை மிக ஓய்யாரி , ஊருக்கெல்லாம் உதவும் நாரி , பிழிந்து எடுத்தாலே பித்தமெல்லாம் தீர்த்திடுவாள் . அவள் யார் ?
விடை:
எலுமிச்சம் பழம்
விடுகதை 2:
காட்டில் பிறப்பான் வீட்டில் இறப்பான் . அவன் யார் ?
விடை:
விறகு
விடுகதை 3:
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை , கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார் ? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே . முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண் . மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் . நான் யார் ?
விடை:
கண்மணி
விடுகதை 4:
நீர் நிலை தான் என் வீடு . ஏன் நிறமோ இளஞ்சிவப்பு . நான் யார் ?
விடை:
தாமரை
விடுகதை 5:
வாயில் இரு கொம்பு உண்டு . விலையில் பெரும் மதிப்பு உண்டு . அது எது ?
விடை:
யானை தந்தம்
விடுகதை 6:
மூடிக்கொண்டு நான் இருப்பேன் , மூவிரண்டு குத்து விழுந்தால் , முகம் காட்டி நான் சிரிப்பேன் . நான் யார் ?
விடை:
அரிசி
விடுகதை 7:
உரக்க கத்தியே வம்பை விலைக்கு வாங்குவான் . அவன் யார் ?
விடை:
தவளை
விடுகதை 8:
காலால் உதைத்தால் , காற்றால் உருளும் . அது என்ன ?
விடை:
மிதி வண்டி
விடுகதை 9:
துளி துளியாய் கண்ணீர் விட்டு இருளை விரட்டும் . அது என்ன ?
விடை:
மெழுகுவர்த்தி
விடுகதை 10:
மரம் ஏறும் மன்னவனுக்கு , முதுகிலே மூன்று கோடு அது என்ன ?
விடை:
அணில்
விடுகதை 11:
பழகினால் மறக்காது , பயந்தால் விடாது . அது என்ன ?
விடை:
நாய்
விடுகதை 12:
சுற்றி சுழல்வான் வீரவிளையாட்டுக்கு இவனை சொல்வர் . இவன் யார் ?
விடை:
சிலம்பாட்டம்
விடுகதை 13:
விபத்தில்லாமல் வெடிப்பான் , காற்றிலே சிதறி பறப்பான் . அவன் யார் ?
விடை:
பருத்தி
விடுகதை 14:
பறக்கும் ஆனால் பறந்து போகாது . அது என்ன ?
விடை:
கொடி
விடுகதை 15:
மண்ணுக்குள்ளே இருப்பவன் கூட்டுக்குள்ளே இருப்பான் . அவன் யார் ?
விடை:
நிலக்கடலை
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



