விடுகதை என்பது சாதாரண கேள்வி அல்ல—அது ஒரு சிந்தனைப் பயணம். பொழுதுபோக்குடன் கூடிய புத்திக்கூர்மைச் சவால். சொற்களில் சூழப்பட்ட ரகசியத்தைத் தேடி, விளையாட்டாக அறிவை சோதிக்கும் தமிழ் பாரம்பரிய புதிர். யாரும் இதை ரசிக்கலாம்; யாரும் இதை விடையிடலாம்.

விடுகதை 1:
முத்துவீட்டுக்குள்ளே தட்டு பலகை . அது என்ன ?
விடை:
நாக்கு
விடுகதை 2:
நாலு காலுண்டு . ஆனால் வால் இல்லை . அது என்ன ?
விடை:
நாற்காலி
விடுகதை 3:
மண்ணுக்குள்ளே கிடப்பவன் , மங்களகரமானவன் அவன் யார் ?
விடை:
மஞ்சள்
விடுகதை 4:
அழுவேன் சிரிப்பேன் , அனைத்தையும் செய்வேன் நான் யார் ?
விடை:
முகம் பார்க்கும் கண்ணாடி
விடுகதை 5:
சிகப்பு நிற காளை , நீர் என்றால் பதுங்கும் காளை . அது என்ன ?
விடை:
நெருப்பு
விடுகதை 6:
இங்கிருந்து பார்த்தல் இரும்பு குண்டு , எடுத்து பார்த்தல் இனிய பழம் .அது என்ன ?
விடை:
விளாம்பழம்
விடுகதை 7:
ஆடி ஓய்ந்த பெண் , அம்மணி வருவாள் அவள் யார் ?
விடை:
ஆவணி
விடுகதை 8:
இந்த மானால் நடக்க முடியாது , அது என்ன மான் ?
விடை:
அந்தமான்
விடுகதை 9:
ஆடாமல் பாடுவான் . அசையாமல் வருவான் . அவன் யார் ?
விடை:
வானொலி பெட்டி
விடுகதை 10:
12 பிள்ளைகள் உள்ள பெரிய குடும்பத்தில் இந்த பிள்ளை மட்டும் சவலப் பிள்ளை . நான் யார் ?
விடை:
பிப்ரவரி மாதம்
விடுகதை 11:
கூனி கிழவிக்கு , வயிறு நிறைய பற்கள் . அவள் யார் ?
விடை:
கதிர் அரிவாள்
விடுகதை 12:
பூ பூவாய் இருக்கும் , ஆனால் தலையில் வைக்க முடியாது . அது என்ன ?
விடை:
காளிபிலோவேர்
விடுகதை 13:
முல்லை தோட்டத்தில் கருப்பு முத்து . அது என்ன ?
விடை:
கண்
விடுகதை 14:
ஒரே பிள்ளைக்கு , ஆயிரம் பிள்ளைகள் . அது என்ன ?
விடை:
ஆலமரம்
விடுகதை 15:
அடித்தால் வலிக்கும் , கடித்தால் இனிக்கும் . அது என்ன ?
விடை:
கரும்பு
மேலும் விடுகதைகள்:
- விடுகதைகள் -10.
- விடுகதைகள் -07.
மேலும் படியுங்கள் :



